இயக்குனர் எச். வினோத்துக்கு இன்று பிறந்தநாள்.. குவியும் வாழ்த்துக்கள்!

சென்னை : தமிழில் இயக்கிய மூன்று திரைப்படங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இப்போது தமிழ் சினிமாவில் வெற்றி இயக்குனர் என்ற பெயரோடு வினோத் மீண்டும் அஜித்துடன் இணைந்து பணியாற்றி வருகிறார்.

Recommended Video

Ajith Strong Decision | Valimai team Plan, Ajith, Boney Kapoor

தனது வித்தியாசமான மேக்கிங் ஸ்டைலின் மூலம் ரசிகர்களை புது அனுபவத்திற்கு கொண்டு செல்லும் இயக்குனர் வினோத் கோலிவுட்டின் நம்பிக்கை இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் இவரது இயக்கத்தில் வெளியான நேர்கொண்டபார்வை மிகப்பெரிய வெற்றிபெற்ற நிலையில் இப்பொழுது மீண்டும் அஜீத் குமாருடன் இணைந்து வலிமை என்ற திரைப்படத்தில் பணியாற்றி வரும் இவர் செப்டம்பர் 5ம் தேதியான இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதையொட்டி திரையுலகைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்களும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சதுரங்க வேட்டை

சதுரங்க வேட்டை

திரைத்துறை என்பது கடல் போன்றது, அதில் ஒரு வெற்றி நபராக நிலைப்பது அவ்வளவு எளிதல்ல, நம்பிக்கையும் திறமையும் தனித்தன்மையும் இருந்தால் மட்டுமே நிலைக்க முடியும். அவ்வாறு தமிழ் சினிமாவிற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு "சதுரங்க வேட்டை" என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் இயக்குனர் எச்.வினோத்.

ஆர். பார்த்திபனுடன்

ஆர். பார்த்திபனுடன்

இயக்குனர் ஆர். பார்த்திபனுடன் இணைந்து பச்சை குதிரை என்ற திரைப்படத்திலும் இயக்குனர் விஜய்மில்டன் உடன் இணைந்து கோலிசோடா திரைப்படத்திலும் உதவி இயக்குனராக பணிபுரிந்த வினோத் 2014ஆம் ஆண்டு "சதுரங்க வேட்டை" திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

முதல் வெற்றிப் படமாக

முதல் வெற்றிப் படமாக

மூடநம்பிக்கை என்ற பெயரில் மக்களை எப்படி எல்லாம் முட்டாளாக்கி மூளை சலவை செய்து பணம் பறிக்கிறார்கள் என்று பல ஆண்டுகளாக நடந்தேறி வரும் உண்மையான நிகழ்வுகளை மையமாகக் கொண்டு ரசிக்கும்படியான திரைக்கதை அமைத்து காமெடியும் அதேசமயம் சிந்திக்கும் வகையிலும் இயக்கியிருந்த "சதுரங்க வேட்டை" திரைப்படம் வினோத்திற்கு முதல் வெற்றிப் படமாக அமைந்தது.

கொள்ளையர்களை

கொள்ளையர்களை

சதுரங்க வேட்டை திரைப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே நடிகர் கார்த்தி இடம்" தீரன் அதிகாரம் ஒன்று" திரைப்படத்தின் கதையை சொன்ன வினோத் உடனடியாக கார்த்தி ஓகே சொன்னதால், தீரன் அதிகாரம் ஒன்று படபிடிப்பு அடுத்த கட்டத்தை நோக்கி செல்ல, வட இந்திய கொள்ளையர்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது.

அஜீத் குமாரை சந்தித்து

அஜீத் குமாரை சந்தித்து

சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று என இரண்டு மெகா ஹிட் திரைப்படங்களை இயக்கிய எச் வினோத் இயக்கும் அடுத்தடுத்த திரைப்படங்களின் எதிர்பார்ப்பு கூடி வந்த நிலையில், நடிகர் அஜீத் குமாரை சந்தித்து தனது அடுத்த படத்திற்கான கதையை கூறியுள்ளார்.

ரீமேக் செய்யலாம்

ரீமேக் செய்யலாம்

வினோத் கூறிய கதை போலவே ஏற்கனவே தான் நடித்து விட்டதாக கூறிய அஜித் குமார், இந்தியில் வெளியான "பிங்க்" திரைப்படத்தை ரீமேக் செய்யலாம் எனக்கூற, இருவரும் இணைந்து பிங்க் திரைப்படத்தை "நேர்கொண்ட பார்வை" என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்ய அந்த திரைப்படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி வசூலை வாரி குவித்து ரசிகர்களின் பாராட்டை பெற்றது.

போனிகபூர் உடன் இணைந்து

போனிகபூர் உடன் இணைந்து

இவ்வாறு இயக்கிய மூன்று திரைப்படங்களும் வெற்றி பெற்ற நிலையில் ஹாட்ரிக் வெற்றியை கொடுத்த வினோத்தின் மீது மொத்த திரையுலகின் பார்வையும் விழ மீண்டும் அஜித்குமார் மற்றும் போனிகபூர் உடன் இணைந்து "வலிமை" என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

நம்பிக்கைக்குரிய இயக்குனராக

நம்பிக்கைக்குரிய இயக்குனராக

இவ்வாறு தான் இயக்கும் ஒவ்வொரு திரைப்படத்திலும் அதிரடி காட்டிவரும் வினோத், தமிழ் சினிமாவின் இளம் இயக்குனர்களில் நம்பிக்கைக்குரிய இயக்குனராக வெற்றி வலம் வந்து கொண்டு இருக்கிறார். இதற்கிடையே "வலிமை" திரைப்படத்தின் எந்த ஒரு அப்டேட்டும் இதுவரை கிடைக்காத நிலையில் தல ரசிகர்கள் அப்டேட்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

39வது பிறந்தநாள்

39வது பிறந்தநாள்

இவ்வாறு ரசிகர்களின் நம்பிக்கை இயக்குனராக வெற்றி வலம் வந்து கொண்டிருக்கும் எச்.வினோத் செப்டம்பர் 5ம் தேதியான இன்று தனது 39ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருவதையொட்டி ரசிகர்கள் மற்றும் திரையுலகைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்களும் தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தவாறு வலிமை திரைப்படத்தின் வெளியீட்டை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X