Dhanush -H Vinoth Combo: தனுஷுடன் இணையும் இயக்குநர் ஹெச் வினோத்.. அப்ப கமல் படம்?

சென்னை: இயக்குநர் ஹெச் வினோத் இயக்கத்தில் கடந்த ஆண்டு ஜனவரியில் வெளியானது துணிவு படம். இந்தப் படத்திற்கு முன்னதாகவும் அஜித்தின் வலிமை மற்றும் நேர்கொண்ட பார்வை படங்களை இயக்கியிருந்தார் ஹெச் வினோத். அஜித்தின் ஹாட்ரிக் வெற்றியை இந்தப் படங்களின்மூலம் உறுதி செய்திருந்தார். இந்தக் கூட்டணியில் வெளியான வலிமை படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், அடுத்ததாக வெளியான துணிவு படத்தை மிகச்சிறப்பாக ரசிகர்களை கவரும்வகையில் கொடுத்திருந்தார். வங்கிக் கொள்ளையை மையமாக கொண்டு இந்தப் படம் வெளியாகி மாஸ் காட்டியது.

இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் கமல்ஹாசனின் KH233 படத்தை இயக்க ஹெச் வினோத் கமிட்டானார். இந்தப் படம் குறித்து அறிவிக்கப்பட்டு இந்தியன் 2 படத்தை தொடர்ந்து சூட்டிங் துவங்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் இந்தியன் 2 படத்தை தொடர்ந்து இந்தியன் 3 படத்தையும் கொண்டுவரும் முயற்சியில் ஷங்கர் -கமல்ஹாசன் கூட்டணி களமிறங்கியது. இதனால் KH233 படத்தின் சூட்டிங் தள்ளிப்போனது. தொடர்ந்து அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் தக் லைப் படத்தில் கமிட்டாகியுள்ளார் கமல்ஹாசன். இதனால் KH233 படம் கைவிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Director H Vinoth going to direct Dhanush in his next and the shooting starts on April

இயக்குநர் ஹெச் வினோத்: நடிகர் அஜித்தின் அடுத்தடுத்த மூன்று படங்களை இயக்கி மாஸ் காட்டியவர் ஹெச் வினோத். அடுத்தடுத்து நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு என அஜித் -ஹெச் வினோத் கூட்டணி ஹாட்ரிக் வெற்றியை கொடுத்தன. குறிப்பாக கடந்த ஆண்டு வெளியான அஜித்தின் துணிவு படம் ஹெச் வினோத்தை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு சென்றது. தொடர்ந்து கமல்ஹாசனை வைத்து KH233 படத்தை இயக்க கமிட்டானார் ஹெச் வினோத். சில மாதங்களுக்கு முன்பே இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியான நிலையில் இந்தியன் 2 படத்தை தொடர்ந்து இந்தப் படத்தில் கமல்ஹாசன் இணைவார் என்று கூறப்பட்டது.

தாமதமாகும் KH233: ஆனால் இந்தியன் 2வை தொடர்ந்து இந்தியன் 3 படத்தையும் ஷங்கர் -கமல் கூட்டணி மேற்கொண்டது. இந்நிலையில் இந்தப் படங்களின் சூட்டிங் ஏறக்குறைய நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன. இந்த ஆண்டிலேயே அடுத்தடுத்து இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 படங்கள் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படங்களால் கமல் -ஹெச் வினோத் கூட்டணியில் அறிவிக்கப்பட்டுள்ள KH233 படத்தின் சூட்டிங் தொடர்ந்து தாமதமானது. இந்நிலையில் கமல்ஹாசன் அடுத்ததாக மணிரத்னத்தின் தக் லைப் படத்தின் சூட்டிங்கில் இணையவுள்ளார். இதனால் KH233 படம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது.

தனுஷுடன் இணையும் ஹெச் வினோத்: கமலுடன் இணையவிருந்த படம் தொடர்ந்து தள்ளிப்போகும் நிலையில் அடுத்ததாக தனுஷுடன் ஹெச் வினோத் கூட்டணி அமைக்கவுள்ளதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தனுஷுடன் ஹெச் வினோத் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், கமல்ஹாசன் படத்தில் அவர் கமிட்டானார். இந்நிலையில் KH233 படம் தாமதமாவதால் தனுஷுடன் ஹெச் வினோத் இணையவுள்ளார். தற்போது சேகர் கம்முலாவுடன் டி51 படத்தில் நடித்துவரும் தனுஷ், இந்தப் படத்தை தொடர்ந்து ஹெச் வினோத்துடன் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தின் சூட்டிங் ஏப்ரல் மாதத்தில் துவங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கமல் பட தாமதத்திற்கு காரணம்: இந்தப் படத்தை லியோ படத்தை தயாரித்த 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தை தொடர்ந்து கமலின் KH233 படத்தையும் ஹெச் வினோத் இயக்குவார் என்று கூறப்பட்டுள்ளது. முன்னதாக KH233 மற்றும் KH234 இரண்டு படங்களிலும் கமல்ஹாசன் ஒரே நேரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் இரண்டு படங்களிலும் கெட்டப்பில் அதிகமான மாற்றங்கள் இருப்பதால் தற்போது மணிரத்னத்தின் KH234 படத்தை முடித்துவிட்டு ஹெச் வினோத்தின் KH233 படத்தில் நடிகர் கமல் நடிப்பார் என்று கூறப்பட்டுள்ளது. இந்தப்படத்துடன் அன்பறிவ் இயக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ள படத்திலும் கமல் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அடுத்தடுத்த படங்கள்: இதனிடையே தனுஷ் படத்தை இயக்கி முடித்துவிட்டு தொடர்ந்து கார்த்தியுடன் தீரன் அதிகாரம் ஒன்று 2 படத்தையும் ஹெச் வினோத் இயக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக கமல் படம் தள்ளிப் போவதை தொடர்ந்து யோகிபாபு மற்றும் விஜய் சேதுபதி கூட்டணியில் ஹெச் வினோத் புதிய படத்தை இயக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் அடுத்ததாக தனுஷின் படத்தை கையில் எடுக்கும் ஹெச் வினோத், அடுத்தடுத்து கமல், கார்த்தி, யோகிபாபு மற்றும் விஜய் சேதுபதி படங்களை இயக்குவார் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X