Actor Vijay: அடுத்தடுத்து ஹெச் வினோத் பக்கமே திரும்பும் காயின்.. தளபதி 69 பட இயக்குநர் இவர்தானா?
சென்னை: நடிகர் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் சூட்டிங் தற்போது கேரளாவில் நடந்து வருகிறது. இதையொட்டி கேரள ரசிகர்கள் விஜய்யை சந்திக்க மாஸாக தயாராகி வருகின்றனர். விமான நிலையத்தில் விஜய் வருகைக்காக அவர்கள் காத்திருந்ததையும் பார்க்க முடிந்தது. கேரளாவில் சில தினங்கள் நடக்கவுள்ள இந்தப் படத்தின் சூட்டிங் வரும் ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில் மாஸ்கோவிலும் திட்டமிடப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்தப் படத்தின் சூட்டிங்கை அடுத்த மாதத்திற்குள் நிறைவு செய்து ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் விஜய்யின் அடுத்த மற்றும் கடைசிப் படமான தளபதி 69 படத்தின் அறிவிப்பிற்காகவும் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். விஜய்யின் அரசியல் என்ட்ரியை அடுத்து அவரது கடைசி படமாக மாறியுள்ளது தளபதி 69 படம். இதுகுறித்து தன்னுடைய கட்சியை அறிவித்தபோதே உறுதிப்படுத்தியிருந்தார் விஜய். தளபதி 69 படத்துடன் தான் சினிமாவில் இருந்து விலகி தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாக அவர் கூறியுள்ள நிலையில், தளபதி 69 படம் மிகுந்த கவனத்தை பெற்றுள்ளது. விஜய்யின் கேரியரில் அவரது முதல் படமான நாளைய தீர்ப்பு படத்தை அவரது அப்பாவும் பிரபல இயக்குநருமான எஸ்ஏசி இயக்கியிருந்த நிலையில் இறுதிப்படத்தை இயக்கப்போவது யார் என்பதுதான் ரசிகர்களின் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.

நடிகர் விஜய்: நடிகர் விஜய் -வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகிவரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் சூட்டிங் கேரளாவின் திருவனந்தபுரத்தில் துவங்கவுள்ளது. இந்தப் படத்திற்காக படக்குழுவினர் முன்னதாக கேரளா புறப்பட்டு சென்ற நிலையில், இன்றைய தினம் விஜய் கேரளா செல்லவுள்ளார். விஜய்க்கு கேரளாவில் வெறித்தனமான ரசிகர்கள் உள்ளனர். விஜய் படம் ரிலீசாகிறது என்ற மற்ற படங்கள் அங்கு வரவேற்பு பெறாது என்பதால் மற்ற மலையாளப் படங்களின் ரிலீசை தள்ளி வைக்கும் சூழல் அங்கு காணப்படுகிறது. இந்நிலையில் 14 ஆண்டுகள் கழித்து இன்றைய தினம் விஜய் கேரளா செல்கிறார்.
கேரள விஜய் ரசிகர்கள்: முன்னதாக கடந்த 2010ம் ஆண்டில் விஜய்யின் காவலன் படம் கேரளாவில் படமாக்கப்பட்டது. அசின் உள்ளிட்டவர்கள் விஜய்யுடன் இணைந்து நடித்திருந்த இந்தப் படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து வெற்றிப்படமாக அமைந்திருந்தது. இந்தப் படத்தில் விஜய்யின் நடிப்பும் மிகப்பெரிய பாராட்டுக்களை பெற்றிருந்தது. இந்நிலையில் இன்றைய தினம் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகிவரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் சூட்டிங் திருவனந்தபுரத்தின் ஸ்போர்ட்ஸ் கிளப் உள்ளிட்ட இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி அந்தப் பகுதிகளில் விஜய்யின் பேனர்களை வைத்து ரசிகர்கள் மாஸ் காட்டி வருகின்றனர்.
தளபதி 69 படம்: இந்தப் படத்தை தொடர்ந்து விஜய்யின் தளபதி 69 படமும் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தை பிரபல தெலுங்குப்பட நிறுவனமான டிவிவி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ள நிலையில் படத்தின் இயக்குநர் குறித்த பல்வேறு யூகங்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் வெளியாகி ட்ரெண்டாகி வருகின்றன. கார்த்திக் சுப்புராஜ், அட்லி, த்ரிவிக்ரம் என இந்த பட்டியலில் அடுத்தடுத்த இயக்குநர்களின் பெயர்கள் தொடர்ந்து அடிபட்டு வருகின்றன. அந்த வகையில் பிரபல இயக்குநர் ஹெச் வினோத்தின் பெயரும் இந்த லிஸ்ட்டில் உள்ளது.
ஹெச் வினோத் தான் இயக்குநர்?: அஜித்தின் நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு என அடுத்தடுத்த படங்களை ஹாட்ரிக் வெற்றியை கொடுத்திருந்தார் ஹெச் வினோத். இதில் கடந்த ஜனவரியில் வெளியான துணிவு படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்திருந்தது. வங்கிக் கொள்ளையை மையமாக கொண்டு வெளியான இந்தப் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் அடுத்ததாக கமல்ஹாசனின் KH233 படத்தை ஹெச் வினோத் இயக்க கமிட்டானார். ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களால் இந்தப் படத்தின் சூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் விஜய்யின் இறுதிப்படமான தளபதி 69 படத்தை ஹெச் வினோத் தான் இயக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தள்ளிப்போகும் தனுஷ் படம்: இதற்கான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையை டிவிவி என்டர்டெயின்மெண்ட் நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. சமூக பிரச்சினையை மையமாக கொண்டு இந்தப் படத்தின் கதைக்களம் உருவாகவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு அடுத்த மாதத்தில் வெளியாகவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. கமல்ஹாசன் படம் ட்ராப் ஆனதையடுத்து தனுஷுடன் ஹெச் வினோத் தனது அடுத்தப்படத்தில் இணையவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அந்த படம்கேள்விக்குறியாகியுள்ளது. விஜய் படத்தில் கமிட்டானால், அந்தப படத்தை நிறைவு செய்துவிட்டு ஹெச் வினோத் தனுஷுடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது


Click it and Unblock the Notifications











