ஹெச் வினோத்தின் அடுத்தப்பட நடிகர் யார் தெரியுமா.. அட இந்த காமெடி நடிகரா?
சென்னை : சதுரங்க வேட்டை படம் மூலம் கோலிவுட்டில் சிறப்பான இயக்குநராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார் இயக்குநர் ஹெச் வினோத்.
தொடர்ந்து அஜித்தின் நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை கொடுத்த ஹெச் வினோத், தற்போது அவரது துணிவு படத்தை இயக்கி முடித்துள்ளார்.
இதையடுத்து அவர் யாரை இயக்கவுள்ளார் என்பது குறித்து அறிந்துக் கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சதுரங்க வேட்டை படம்
நட்ராஜ் உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்து வெளியான சதுரங்க வேட்டை என்ற படத்தின் மூலம் தனது முத்திரையை பதித்து சிறப்பான இயக்குநராக பெயரெடுத்தவர் இயக்குநர் ஹெச் வினோத். இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித் படத்தை இயக்கும் வாய்ப்பு இவரது கதவை தட்டியது. தொடர்ந்து அஜித்தின் 3 படங்களை தற்போது இயக்கி முடித்துள்ளார்.

அஜித்துடன் 3 படங்கள்
அஜித்தின் நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை இயக்கிய ஹெச் வினோத் தற்போது துணிவு படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்தப் படங்களை போனி கபூர் தயாரித்துள்ள நிலையில், துணிவு படம் பொங்கலையொட்டி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படம் நீண்ட காலங்களுக்கு பிறகு விஜய்யின் படத்துடன் மோதவுள்ளது சுவாரஸ்யமாக பார்க்கப்படுகிறது.

பொங்கலுக்கு வெளியாகும் துணிவு
த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் சூட்டிங் ஐதராபாத்தில் பிரம்மாண்டமான பேங்க் மற்றும் மவுண்ட்ரோடு செட்களை போட்டு எடுக்கப்பட்டது. தொடர்ந்து விசாகப்பட்டினம், சென்னை மற்றும் பாங்காக்கிலும் படத்தின் சூட்டிங் எடுக்கப்பட்டு தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன. இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டர்கள், ஸ்டில்ஸ் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.

விரைவில் பர்ஸ்ட் சிங்கிள்
இதனிடையே இன்னும் சில தினங்களில் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தில் படத்தின் நாயகி, மஞ்சு வாரியரும் ஒரு பாடலை பாடியுள்ளார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு அஜித் துப்பாக்கியுடன் தோன்றும் ஸ்டில்ஸ் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளன. இந்தப் படத்தின் டீசர், ட்ரெயிலருக்காக அஜித் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

யோகிபாபுவுடன் அடுத்த படம்
இந்தப் படத்தை தொடர்ந்து ஹெச் வினோத் நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து அடுத்தப் படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் தற்போது அந்த ப்ராஜெக்ட் குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகாத நிலையில், யோகிபாபுவிற்கு தான் ஒரு கதையை சொல்லி ஒப்புதல் வாங்கியுள்ளதாக ஹெச் வினோத் தனது பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.

திருடன் -காவலர் கதைக்களம்
இந்தப் படத்தில் அப்பாவி திருடன் மற்றும் காவலர் இடையில் நடக்கும் நிகழ்வுகளை கதைக்களமாக கொண்டு கதைக்களத்தை உருவாக்கியுள்ளதாக ஹெச் வினோத் தெரிவித்துள்ளார். ஆனால் தனது அடுத்தப் படம் இதுதானா என்பது இன்னும் உறுதியாகவில்லை என்றும் கூறியுள்ளார். முன்னதாக மண்டேலா என்ற படத்தில் நாயகனாக நடித்து யோகிபாபு அனைவரையும் கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











