விஜய் அரசியல் என்ட்ரி.. ஹெச். வினோத் வாழ்த்துறாரா? எச்சரிக்கிறாரா?.. ஒன்னுமே புரியலையே!
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கியிருக்கும் விஜய்; இந்த வருடம் நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவிருக்கிறார். சினிமா மாதிரியே அரசியலிலும் தங்கள் தளபதி தனது தடத்தை ஆழமாக பதிப்பார் என்பது அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்களின் நம்பிக்கை. இதற்கிடையே அவர் நடித்திருக்கும் ஜனநாயகன் திரைப்படம் இந்த மாதம் ஒன்பதாம் தேதி ரிலீஸாகிறது. இந்நிலையில் விஜய்யின் அரசியல் என்ட்ரி குறித்து இயக்குநர் வினோத் பேசியிருக்கிறார்.
நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என அவரது ரசிகர்கள் கோரிக்கை வைக்க ஆரம்பித்தார்கள். அவருக்குள்ளும் உள்ளே அந்த ஆசை இருக்கத்தான் செய்தது. எனவே எந்தவித அலப்பறையும் இல்லாமல் ட்விட்டரில் அறிவிப்பை வெளியிட்டுவிட்டு; தமிழக வெற்றிக் கழகம் கட்சியை சில வருடங்களுக்கு முன்பு தொடங்கினார். கட்சி தொடங்கிய அவர்; திமுகவுடன் இணக்கமாக போவார் என்றுதான் பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் அந்தக் கட்சியைத்தான் கடுமையாக தாக்கிவருகிறார்.
பாஜகவின் பி டீம்?: அவர் தங்களை குறி வைப்பார் என்று திமுகவினர் எதிர்பார்க்கவில்லை. தங்கள் மீது அவர் வைக்கும் விமர்சனத்துக்கு அவர்களும் முடிந்த பதிலடியை கொடுத்துவருகிறார்கள். முக்கியமாக அவர் பாஜகவின் பி டீம் என்று விமர்சனத்தை முன்வைக்க ஆரம்பித்த திமுகவினர்; ஒருகட்டத்தில் அவர் வெளியே வந்து மக்களை அடிக்கடி சந்திக்காததை கையில் எடுத்து விமர்சித்தனர். இதன் காரணமாக உங்கள் விஜய் நா வரேன் என்கிற பெயரில் தமிழ்நாடு முழுவதும் அரசியல் சுற்றுப்பயணத்தை ஆரம்பித்தார்.

கரூர் துயர சம்பவம்: அப்படி அவர் கரூருக்கு சென்றபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலால் மொத்தம் 41 பேர் பலியானார்கள். அவர்கள் உயிரிழப்புக்கு விஜய்தான் முழு காரணம் என்று பலரும் கூறினார்கள். அவர் மட்டும் தாமதமாக வராமல் இருந்திருந்தால் இந்தத் துயரத்தை தவிர்த்திருக்கலாம் என்பதுதான் தமிழ்நாட்டில் இருக்கும் அனைவரது கருத்தும். விஜய்யும் இந்த துயரத்தை பார்த்து ரொம்பவே ஃபீல் செய்ததாக கூறப்படுகிறது. சில நாட்கள் அமைதியாக இருந்த அவர்; சென்னைக்கு வரவழைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து; உதவிகள் செய்வதற்கான உறுதியையும் கொடுத்தார்.
ஜனநாயகன் ரிலீஸ்: இதற்கிடையே ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் படத்தில் நடித்திருக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க; மமிதா பைஜு, பாபி தியோல் உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். இந்த மாதம் ஒன்பதாம் தேதி படம் ரிலீஸாகிறது. சமீபத்தில்தான் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடந்தது. இந்நிலையில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு இயக்குநர் ஹெச்.வினோத் அளித்த பேட்டியில் விஜய்யின் அரசியல் என்ட்ரி குறித்து ஓபனாக பேசியிருக்கிறார்.
வினோத் சொன்னது: அவர் கொடுத்திருந்த பேட்டியில், "விஜய் அரசியலுக்கு வந்ததில் எனக்கு ஆச்சரியம் எதுவும் இல்லை. அரசியலுக்கு அவர் வராமல் இருந்திருந்தால்தான் ஆச்சரியப்பட்டிருப்பேன்.அவர் சினிமாவுக்கு வருவதற்கு முன்னதாகவே ஏகப்பட்ட அவமானங்கள், நெருக்கடிகளை சந்தித்திருக்கிறார். ஆனால் அந்தத் தோல்விகலில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு அதற்கான திறனையும், உழைப்பையும் போட்டு மேலே எழுந்து வந்திருக்கிறார்.அந்த மாடிரி அரசியலுக்கும் வந்திருக்கிறார். அரசியல் என்பது சினிமா அளவுக்கு எளிது இல்லை. தினமும் ஒரு சினிமா எடுத்து ரிலீஸ் செய்வது மாதிரி கடினமான வேலை" என்றார்.


Click it and Unblock the Notifications











