Don't Miss!
- Technology
குருநாதா இங்கயும் வந்துட்டீங்களா! 2 வார பேட்டரி ஆயுள் உடன் Redmi பேண்ட்! விலை என்ன?
- Lifestyle
Today Rasi Palan 02 February 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் வேலையில் தலையிடாமல் இருப்பது நல்லது...
- News
அடேங்கப்பா.. "ட்விஸ்ட்டு".. எடப்பாடி பல்டி.. அண்ணாமலைக்கு போன் போட்ட சீனியர்கள்.. காத்து திரும்புதே!
- Automobiles
மாருதி, ஹூண்டாயை அண்ணாந்து பாக்க வைத்த டாடா! சம்பவம் லோடிங்! தளபதி 67-ஐ விட எதிர்பார்ப்பு எகிறிகிட்டே போகுது!
- Sports
டி20 வரலாற்றில் இந்தியாவின் மகத்தான வெற்றி.. 3வது டி20ல் சுப்மன் கில் தந்த ஷாக்.. ஆடிப்போன நியூசி!
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
என்னை பற்றி தவறான செய்தி… அபிஷேக் ராஜாவால் கடுப்பான எச்.வினோத்!
சென்னை : அபிஷேக் ராஜா தன்னைப் பற்றி தவறான தகவல்களை கூறி உள்ளதால், இயக்குநர் எச் வினோத் கடும் கோபத்தில் இருக்கிறார்.
சதுரங்க வேட்டை,தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்டப் பார்வை, வலிமை படங்களை இயக்கிய எச் வினோத், அஜித்துடன் மூன்றாவது முறையாக இணைந்து துணிவு படத்தை இயக்கி உள்ளார்.
இத்திரைப்படத்தில் அஜித், மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜான் கொக்கைன் ஆகியோர் லீட் ரோலில் நடித்துள்ளார்.
துணிவு படம் ரிலீஸ்.. சந்தோஷத்தில் சபரி மலைக்கு புறப்பட்ட எச். வினோத்.. டிரெண்டாகும் வீடியோ!

துணிவு
வங்கி கொள்ளையை மையமாக வைத்து உருவாகி உள்ள இத்திரைப்படம் ஜனவரி 11ந் தேதி வெளியாகி வசூலை வாரிக்குவித்து வருகிறது. இந்த திரைப்படத்தில் கிரெடிட் கார்டு, மியூச்சுவல் பண்ட் போன்றவற்றில் வங்கிகளில் நடக்கும் முறைகேடுகள் பற்றி அப்பட்டமாக காட்டப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் அஜித் இப்படத்தில் ஸ்டைலாக, பாட்டு, டான்ஸ் என நெகட்டிவ் ரோலில் மிரட்டி உள்ளார்.

அஜித்திற்கு பெயர் இல்லை
வழக்கமாக எச் வினோத் படங்களில் ஹீரோ இருப்பார்கள் ஹீரோயின் இருப்பார்கள் ஆனால், நோ காதல்... நோ ரொமான்ஸ். அதே பாணியை இந்த படத்திலும் பயன்படுத்தி உள்ளார். துணிவு படத்தில் அஜித்திற்கு ஜோடியும் இல்லை பெயரும் இல்லை. மாறாக மஞ்சுவாரியர் சண்டை காட்சிகளில் மிரட்டி உள்ளார்.

சொல்லுங்க தலைவரே
துணிவு திரைப்படம் புதன்கிழமை வெளியான நிலையில், பலரும் படம் குறித்து பல விதமான கருத்துக்களை தெரிவித்து இருந்தனர். துணிவு படம் குறித்து பேட்டி ஒன்றில் பேசிய அபிஷேக் ராஜா, எச் வினோத்திற்கு இப்போது போன் செய்தாலும், உடனே எடுத்து சொல்லுங்க தலைவரே என்று தான் பேசுவார். இது சீன் போடுவது போலத்தான் தெரியும்.

வித்தியாசமான மனிதர்
ஆனால், உண்மையில் அவர் எப்படிப்பட்ட மனிதர் என்றால், தன்னுடைய காரில் இருந்து வெளியேறும் புகைக்கு நிகரான மரங்கள் நட்டால் தான் கார் வாங்குவேன் என்று சிந்திக்கக்கூடிய சித்தாந்தம் உடைய தனி மனிதர் என்று கூறியிருந்தார். அபிஷேக் ராஜா அளித்த பேட்டி இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலானது.

தவறான தகவல்
இந்நிலையில், துணிவு படம் குறித்து எச் வினோத் பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது செய்தியாளர், நீங்கள் கார் வாங்காததற்கு காரணம் உண்மையில் காற்று மாசுதானா என்று கேள்வி கேட்டார். இதற்கு பதிலளித்த எச் வினோத், இந்த மாதிரி எல்லாம் நான் சொல்லவே இல்லை. அபிஷேக்கிடம் இன்டர்வியூ கொடுக்கும் போது இந்த கேள்வியை நான், நிச்சயம் கேட்க வேண்டும்.

இதுதான் காரணம்
சில நேரம் மற்றவர்களைப் பற்றி நாம் பேசும் போது, வார்த்தையில் பிரம்மிப்பும் பொய்யும் கலந்து விடும் அப்படித்தான், அபிஷேக் ராஜா பேசி இருக்கிறார். நான் கார் வாங்காததற்கு காரணம் தயாரிப்பு நிறுவனம் எனக்கு கார் கொடுக்கிறது. அடுத்தப்படமும் நான் விரைவில் தொடங்க இருக்கிறேன் அதற்கும் கார் வந்துவிடும். வீட்டில் நிறுத்தி வைப்பதற்காக ஒரு காரை நான் ஏன் வாங்க வேண்டும் அது தேவையில்லாத வேலை. இந்த காரணத்திற்காகத்தான் நான் கார் வாங்கவில்லை என்றார். அபிஷேக் ராஜா தெரியாமல் பேசுகிறார் என்றார்.