Actor Vijay: ஜன நாயகன் படத்திற்காக விஜய் வைத்த டிமாண்ட்.. இயக்குநர் வெளிப்படுத்திய சீக்ரெட்!
சென்னை: நடிகர் விஜய்யின் இறுதிப்படமாக உருவாகி வருகிறது தளபதி 69 படம். ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாகியுள்ளார் பூஜா ஹெக்டே. வில்லனாக களமிறங்கியுள்ளார் பாபி தியோல். படத்தின் சூட்டிங் வரும் ஏப்ரல் மாதத்திற்குள் நிறைவடையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதனிடையே இன்றைய தினம் குடியரசு தின ஸ்பெஷலாக படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. படத்திற்கு நாளைய தீர்ப்பு என்று பெயரிடப்பட உள்ளதாக கூறப்பட்ட நிலையில் தற்போது ஜன நாயகன் என்று விஜய்யின் இறுதிப்படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. படத்தை ஹெச் வினோத் இயக்கிவரும் நிலையில் படம் குறித்த அவரது முந்தைய பகிர்வு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் விஜய்: நடிகர் விஜய்யின் அடுத்தடுத்த படங்கள் அதிகமான கவனத்தையும் வசூலையும் பெற்றுவந்த நிலையில் அவர் தளபதி 69 படத்துடன் சினிமாவில் இருந்து விலகி தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாக கூறியது அனைத்து ரசிகர்களுக்கும் தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட பலருக்கும் அதிர்ச்சியைத்தான் கொடுத்தது. இருந்தபோதிலும் நீண்ட காலங்களாக இவர் அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு இருந்ததால், இவரது சினிமா விலகல் அதிகமான அதிர்ச்சியை கொடுக்கவில்லை. இதனிடையே தளபதி 69 படத்தின் சூட்டிங் சென்னை உள்ளிட்ட பல இடங்களில் செட்கள் போடப்பட்டு அதிரடியாக நடத்தப்பட்டு வருகிறது.
ஜன நாயகன் படம்: ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகிவரும் தளபதி 69 படத்தின் டைட்டில் இன்றைய தினம் குடியரசு தின ஸ்பெஷலாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நாளைய தீர்ப்பு என்று விஜய்யின் முதல் படத்தின் டைட்டிலே இந்தப் படத்திற்கும் வைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது படத்திற்கு ஜன நாயகன் என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இதையொட்டி படத் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் மாஸான போஸ்டருடன் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது. ஜன திரளுக்கு முன்பாக விஜய் செல்ஃபி எடுப்பதாக இந்த ஜன நாயகன் பட பர்ஸ்ட் லுக் போஸ்டரில் காணப்படுகிறது.
அடுத்த ஆண்டு ரிலீசா?: இந்தப் படம் வரும் அக்டோபர் மாதத்திலேயே ரிலீசாகவுள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப படத்தின் சூட்டிங் வரும் ஏப்ரல் மாதத்திற்குள் ஒட்டுமொத்தமாக நிறைவடையவுள்ளதாகவும் கூறப்பட்டது. இதனிடையே, அடுத்த ஆண்டு நடக்கவுள்ள தமிழகத்தின் சட்டமன்ற தேர்தலை கவனத்தில் கொண்டு, அடுத்த ஆண்டு பொங்கல் அல்லது கோடைக் கொண்டாட்டமாக ஜன நாயகன் படம் ரிலீசாகவுள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படம் அரசியலை மையமாக வைத்தே உருவாக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை நிரூபிக்கும் வகையிலேயே தற்போது படத்தின் போஸ்டரும் அமைந்துள்ளது.
ஹெச் வினோத் பேச்சு: இதனிடையே இந்தப் படத்தின் மேக்கிங் குறித்தும் படத்திற்காக விஜய் வைத்த டிமாண்ட் குறித்தும் முன்னதாக இயக்குநர் ஹெச் வினோத் பேசிய பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தளபதி 69 படம் 200 சதவிகிதம் நடிகர் விஜய்யின் படமாகவே அமையும் என்று அவர் தன்னுடைய இந்த பேச்சின்போது கூறியுள்ளார். கமர்சியலாக அனைவரும் பார்க்கும் படமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தின் துவக்கத்திற்கு முன்னதாகவே விஜய் தன்னிடம் தன் படத்தை அனைத்து வயதினரும் அனைத்து அரசியல் கட்சியினரும் பார்ப்பார்கள் என்றும் அதனால் யாரையும் தாக்கும் வகையில் இல்லாமல் லைட்டான விஷயங்களை வைத்து இந்தப் படத்தை கொடுக்க வேண்டும் என்று விஜய் டிமாண்ட் வைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











