8 ஆண்டுகளுக்கு முன்பே ஏலே படம் குறித்து சூசகமாக கூறிய ஹலிதா சமீம்... வியந்து போன ரசிகர்கள்!

சென்னை : இளம் இயக்குனர் ஹலிதா சமீம் இப்பொழுது தமிழ் சினிமாவின் நம்பிக்கைக்குரிய இயக்குனர்களில் ஒருவராக உள்ளார்.

சில்லுக்கருப்பட்டி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இப்போது வெளியாகியிருக்கும் ஏலே படமும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதுவரை வெளியான படங்கள் ஒவ்வொன்றிலும் தன்னுடைய அடுத்த படத்திற்கான குறியீடுகளை ஹலிதா வைத்துச் சென்றதை கண்டறிந்த ரசிகர்கள் அவரை வியந்து பாராட்டி வருகின்றனர்.

நம்பிக்கைக்குரிய இயக்குனராக

நம்பிக்கைக்குரிய இயக்குனராக

இவர் இயக்கும் ஒவ்வொரு திரைப்படங்களிலும் புதுமையான அதேசமயம் உணர்வுப்பூர்வமான கதைகளை கையாண்டு ரசிகர்களிடம் கைதட்டல்களை பெற்று தமிழ் சினிமாவில் நம்பிக்கைக்குரிய இயக்குனராக உள்ளவர் இயக்குனர் ஹலிதா சமீம். விக்ரம் வேதா புகழ் புஷ்கர் காயத்ரி இடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த இவர் பூவரசம் பீப்பி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

சில்லுக்கருப்பட்டி

சில்லுக்கருப்பட்டி

கடந்த 2019ஆம் ஆண்டு சில்லுக்கருப்பட்டி என்ற அட்டகாசமான ஆந்தாலஜி படத்தை கொடுத்த இவருக்கு இன்றுவரை பாராட்டு மற்றும் எண்ணற்ற விருதுகள் என சர்வதேச அளவில் பல விருதுகள் சிறந்த இயக்குனருக்காக கிடைத்து வர, சில்லுக்கருப்பட்டி படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தற்போது வெளியாகி உள்ள ஏலே படமும் ரசிகர்களின் கவனத்தை பெற்று வெற்றி பெற்றுள்ளது.

இயக்குனர் ஷங்கரும் பாராட்டியிருந்தார்

இயக்குனர் ஷங்கரும் பாராட்டியிருந்தார்

சினிமாத்தனமற்ற கதைகள் மற்றும் காட்சிகள் எதுவும் இல்லாமல் அனைத்து வயதினரும் ரசிக்கும் தரமான படங்களை இயக்குவதில் ஸ்பெஷலிஸ்ட்டாக இருக்கும் ஹலிதா சமீம் அடுத்ததாக மின்மினி என்ற படத்தை மிகவும் வித்தியாசமாக இயக்கிவருகிறார். அதற்காக இயக்குனர் ஷங்கரும் பாராட்டியிருந்தார். இந்த நிலையில் இவர் இயக்கும் ஒவ்வொரு படங்களிலும் தான் அடுத்து இயக்கப்போகும் படத்தின் தலைப்பை குறியீடாக வைத்து வருவதை வழக்கமாக கொண்டிருக்க அதை கண்டறிந்த ரசிகர்கள் இவரை சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.

ஏலே படத்தின் குறியீடு

ஏலே படத்தின் குறியீடு

பூவரசம் பீப்பீ படத்தில் ஏலே என எழுதப்பட்ட ஐஸ் பெட்டி வண்டி இடம்பெற்றிருக்கும். அதேபோல சில்லுக்கருப்பட்டி படத்தில் ஒரு பாகத்தில் மணிகண்டன்" ஏலே படம் எப்போ பார்க்கலாம்.. சேர்ந்து பார்க்கலாமா? என காதலியிடம் வாட்ஸப்பில் கேட்டிருப்பார். 2021ல் ரிலீஸான ஏலே படத்தின் குறியீட்டை 8 ஆண்டுகளுக்கு முன்பே தன்னுடைய பூவரசம் பீப்பீ படத்தில் வைத்திருந்த இயக்குனர் ஹலிதா சமீமை அனைவரையும் பாராட்டியதோடு பெரும் எதிர்பார்ப்பில் அடுத்து வர இருக்கும் மின்மினி படத்தின் குறியீடு எங்கேயாவது உள்ளதா என இவரது முந்தைய படங்களை அலசி வருகின்றனர்.

More from Filmibeat

Read more about: halitha shameem minmini
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X