சூர்யா ஜோதிகா இணையும் புது பட அப்டேட்..ரகசியத்தை வெளியிட்ட பிரபல இயக்குனர் !

சென்னை : தமிழ்த் திரைத்துறையில் பெண் இயக்குனர்கள் பல வெற்றி படங்களை கொடுத்து வரும் நிலையில் ஹலிதா சமீம் அதில் முக்கியமான ஒரு இயக்குனராக இருந்து வருகிறார்.

சமீபத்தில் இவரின் இயக்கத்தில் வெளியான சில்லுக்கருப்பட்டி மிகப்பெரிய வரவேற்பு பெற்று அனைத்து தரப்பு மக்களையும் ஈர்த்துள்ளதால் இவரின் அடுத்தடுத்த படைப்புகளை எதிர்நோக்கி திரையுலகமே காத்திருக்கின்றது.

ஹலிதா சமீமின் மின்மினி மற்றும் ஏலே போன்ற படங்களை பற்றிய அப்டேட் அவ்வப்போது வந்து கொண்டிருக்கும் பொழுது தற்போது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு சூர்யா மற்றும் ஜோதிகாவை வைத்து படம் இயக்க உள்ளதாக ரகசியத்தை உடைத்துள்ளார்.

பலராலும் ரசிக்கப்பட்டு

பலராலும் ரசிக்கப்பட்டு

தமிழ் சினிமாவில் இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணனை தொடர்ந்து தற்பொழுது ஹலிதா சமீம் மற்றும் சுதா கொங்கரா ஆகிய பெண் இயக்குனர்களின் படங்கள் பலராலும் ரசிக்கப்பட்டு இவர்களது அடுத்தடுத்த படங்களை பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

மிகப்பெரிய வெற்றியடைந்தது

மிகப்பெரிய வெற்றியடைந்தது

ஹலிதா சமீமின் ஓரிரு படங்கள் மட்டுமே இதுவரை வெளியாகி இருக்கும் நிலையில் சென்ற ஆண்டு இவரது இயக்கத்தில் வெளியான சில்லுக்கருப்பட்டி திரைப்படம் அனைவராலும் மிகவும் ரசிக்கப்பட்டு மிகப்பெரிய வெற்றியடைந்தது.

அனைத்து கதைகள்

அனைத்து கதைகள்

அந்தாலஜி படமாக உருவாகியிருந்த சில்லுக்கருப்பட்டி 4 வேறு வேறு கதைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தாலும் அனைத்து கதைகளிலும் ரசிகர்கள் ஒன்றி இந்த படத்தை ரசித்து மாபெரும் வெற்றி படமாக்கி கொண்டாடினர்.

மின்மினி மற்றும் ஏலே

மின்மினி மற்றும் ஏலே

சில்லுக்கருப்பட்டி அனைவரிடமும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதை தொடர்ந்து இவரின் அடுத்தடுத்த படங்கள் என்ன இயக்கப் போகிறார் என பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில் இவரின் மின்மினி மற்றும் ஏலே போன்ற திரைப்படங்கள் வெகு விரைவில் திரைக்கு வர தயாராகிக் கொண்டிருக்கின்றது.

வெளிப்படையாக புகழ்ந்து

வெளிப்படையாக புகழ்ந்து

சில்லுக்கருப்பட்டி திரைப்படத்தை பல்வேறு இயக்குநர்களும் நடிகர்களும் புகழ்ந்து வரும் நிலையில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் ஹலிதா சமீமையும் அவர் இயக்கி வரும் மின்மினி உள்ளிட்ட படங்களை பற்றியும் வெளிப்படையாக பல பேட்டிகளில் பேசி புகழ்ந்து இருந்தார்.

சூர்யா ஜோதிகா நடிக்கும்

சூர்யா ஜோதிகா நடிக்கும்

ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் என பலரும் ஹலிதா சமீமின் அடுத்தடுத்த படங்களுக்கு காத்திருக்கும் வேளையில் ட்விட்டர் பக்கத்தில் ரசிகர் ஒருவர் ஹலிதா சமீமிடம் சூர்யா மற்றும் ஜோதிகா வைத்து படம் ஒன்றை இயக்க இருப்பதாக கூறினார். மேலும், ஏ ஆர் ரகுமான் இசை அமைக்க அந்த படத்தை ஹலிதா சமீம் இயக்கினால் சமீபத்தில் மலையாளத்தில் வெளியான சார்லி மற்றும் கும்பலங்கி நைட்ஸ் போன்ற படங்களைப் போன்று ஒரு நல்ல உணர்வு கிடைக்கும் என கேட்டிருந்த ரசிகருக்கு பதிலேதும் கூறாமல் நன்றி சொல்லும் வகையில் பல்வேறு மகிழ்ச்சியான இமோஜிக்களை ஹலிதா சமீம் பதிவிட்டிருந்தார்.

கட்டாயமாக இயக்குவேன்

கட்டாயமாக இயக்குவேன்

இந்த பதிவை தொடர்ந்து மற்றொரு ரசிகர் ஹலிதா சமீமிடம் வெளிப்படையாகவே உங்களிடம் சூர்யாவை வைத்து இயக்கும் வகையில் ஏதாவது ஸ்க்ரிப்ட் உள்ளதா என கேட்க அதற்கு ஹலிதா கட்டாயமாக அவர்களுக்கு ஒரு கதையை உருவாக்கி இயக்குவேன் என பதில் கூறி இருக்கின்றார்.

மீண்டும் இணைய

மீண்டும் இணைய

இந்த பதிவைப் பார்த்த சூர்யாவின் ரசிகர்கள் சூர்யா, ஜோதிகா மற்றும் ஏ ஆர் ரகுமான் ஏற்கனவே இணைந்த சில்லுனு ஒரு காதல் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் வெற்றி இயக்குனர் ஹலிதா சமீமின் இயக்கத்தில் இணைய உள்ளதை கேட்டு மிக்க மகிழ்ச்சியில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X