சூர்யா – ஜோதிகாவுக்காக கதை எழுதும் ஹலீதா ஷமீம்!

சென்னை: பெண் இயக்குனர்கள் மத்தியில் சமீபத்தில் மிகவும் கவனத்தை ஈர்த்தவர் ஹலீதா ஷமீம்.

சில்லு கருப்பட்டி படத்தினை இயக்கியது மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பாப்புலர் ஆனார் ஹலீதா.

ஹலீதா ஷமீம் இயக்கத்தில் ஏலே திரைப்படம் அடுத்த வாரம் திரையரங்குகளில் வெளிவரவுள்ளது.

2D ப்ரோடுக்ஷன்

2D ப்ரோடுக்ஷன்

ஹலீதா ஷமீமின் இயக்கத்தில் 2019ம் ஆண்டு வெளியான anthology படமான சில்லுக் கருப்பட்டி ரசிகர்கள் மனதை வருடும் வகையில் அழகான படைப்பாக அமைந்தது. இந்த படத்தை சூரியா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான 2D ப்ரோடுக்ஷன் சார்பாக தயாரித்தார்.

விகடனுக்கு பேட்டி

விகடனுக்கு பேட்டி

ஹலீதா, ஏலே திரைப்படத்தை தான் முதலில் இயக்கவிருந்ததாகவும் அதற்கு சரியான வாய்ப்பு கிடைக்காமல் போனதால் பூவரசம் பீப்பி, சில்லு கருப்பட்டி படங்களை இயக்கி முடித்ததாகவும் சமீபத்தில் விகடனுக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.

முதல் தயாரிப்பு

முதல் தயாரிப்பு

ஹலீதா ஷமீம் பிரபல இயக்குனர்களான புஷ்கர் - காயத்ரி ஆகியோரிடம் துணை இயக்குனராக பணி புரியும் போது தயாரான கதை தான் ஏலே. எனவே அவர்களே 'வால்வாட்ச்சர் ஃபிலிம்ஸ்' என்ற பெயரில் ஏலே படத்தை தயாரித்துள்ளனர். இந்த தயாரிப்பு நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக ஏலே திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.

கதை கேட்ட சூர்யா

கதை கேட்ட சூர்யா

சில்லு கருப்பட்டி படத்தின் 50வது நாள் கொண்டாட்டத்தின் போது சூர்யா - ஜோதிகா இருவரையும் நேரில் சந்தித்ததாகவும், அப்போது நாங்க சேர்ந்து நடிக்கிறதுக்கு ஒரு கதை ரெடி பண்ணுங்க'ன்னு சூர்யா கூறியதாகவும் அதற்காக கதை ரெடி பண்ணி வருவதாகவும் ஹலீதா விகடனுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X