MinMini Review: புதுமையான ஃபீல் குட் திரைப்படம்.. மின்மினி முதல் விமர்சனம்!
சென்னை: சில்லுக்கருப்பட்டி, ஏலே ஆகிய திரைப்படங்களை இயக்கிய ஹலிதா ஷமீம் தற்போது இயக்கி உள்ள திரைப்படம் தான் மின்மினி. இப்படம் ஏழு வருட காத்திருப்புக்கு பிறகு இப்படம் வெள்ளிக்கிழமை தியேட்டரில் வெளியாக உள்ளது. தற்போது இப்படத்தின் முதல் ட்விட்டர் விமர்சனம் வெளியாகி படத்தின் மீது எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
ஹலிதா ஷமீம், தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் இயக்குநராக இருக்கிறார். இப்போது 'மின்மினி' என்ற தலைப்பில் ஒரு படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை ஆங்கர் பே ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படத்தில், எஸ்தர் அனில், பிரவின் கிஷோர் மற்றும் கௌரவ் காளை ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர்.

மின்மினி திரைப்படம்: இப்படம் குழந்தைகளாக இருந்து இளம் வயதினராக மாறுபவர்களின் கதை என்பதால் நடிப்பவர்கள் குழந்தை பருவத்தில் இருக்கும் போது 2015 ஆம் ஆண்டு முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கி உண்மையிலே அவர்கள் இளம் வயதினராக வளர்ந்த பின்னர் அடுத்தகட்ட படப்பிடிப்பு 7 வருடங்கள் கழித்து கடந்த 2022ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பின்பு அந்த ஆண்டே மொத்தப் படப்பிடிப்பும் முடிக்கப்பட்டது. இது திரையுலகில் இதுவரை யாரும் செய்திராத புதுமுயற்சியாகும் இது.
8 ஆண்டு காத்திருப்பு: இத்திரைப்படம் 8ஆண்டு காத்திருப்புக்கு பின், மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில், ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ளது. இப்படத்தில் மலையாள நடிகை எஸ்தர் அணில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் மகள் கதிஜா இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். மின்மினி படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டுள்ளது. படத்தை பார்த்தவர்கள் தங்களது விமர்சனங்களை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகிறார்கள்.
புதுமையான முயற்சி: அந்த வகையில் தரமான புதுமையான ஃபீல் குட் திரைப்படம் இதுவாகும். இப்படத்தில், இயக்குனர் ஹலிதா ஷமீமின் திரைக்கதை மேஜிக் போல் உள்ளது. முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை எஸ்தர் அணில், பிரவீன் கிஷோர் மற்றும் கவுரவ் காளை ஆகிய மூவரின் நடிப்பும் சூப்பர். கதிஜா ரஹ்மான் இசை அருமை. படத்தின் மிகப்பெரிய பலமே ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா தான். அவருடைய விஷுவல்ஸ் வேற லெவல் என படத்தை பார்த்தவர்கள் தங்களது விமர்சனத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்கள்.


Click it and Unblock the Notifications











