என் சிறுவயது ஆசை நிறைவேறியது.. ஹலிதா ஷமீம்மகிழ்ச்சி
Recommended Video
சென்னை : சிறுவயதில் இருந்தே இயக்குனராக ஆசைப்பட்ட என் மகளின் ஆசை தற்போது நிறைவேறி உள்ளது என்றார் ஹலீதா ஷமீம்தாயார்.
பெண் இயக்குனர் ஹலிதா ஷமீம்இயக்கத்தில் வெளிவந்த படம் தான் சில்லுகருப்பட்டி. காதல், அன்பு, பரஸ்பரம், புரிதல் என நான்கு தனித்தன்மை கொண்ட காதல் கதை, இந்த படம் சிறுவயது , இளம்வயது, நடுத்தர வயது என அனைவருக்கும் மிகவும் பிடித்த அதை அம்சம் கொண்ட படமாக இது இருந்தால் இந்த படம் பெயர் செல்லும் படமாக அமைந்தது.

இயந்திர வாழ்க்கை சூழ்நிலையில் அன்பு , காதல் எல்லாம் எப்போது காணாமல் போகிறது என்பதை அழகாக சொல்லி கதையை நகர்த்தி இருக்குகிறார் இயக்குனர் ஹலீதா, ரசிகர்களாலும் விமர்சனகர்களாலும் இந்த படம் வெகுவாக பாராட்டபட்டு இருக்கிறது .
இந்த படத்தின் இயக்குனர் ஹலீதாவின் தாயிடம் அவரை பற்றி ஒரு தனியார் ஊடகத்தினால் கேள்விகள் கேட்கபட்டது. அதற்கு பதிலளித்த ஹலீதாவின் தாயார் சிறுவயதில் இருந்தே ஹலீதா கதை எழுதுவதில் ஆர்வமுடையவர் அவர் கதைகளை எழுதி கதைகளை எழுதி மணிரத்தினத்திடம் கொடுத்து விடுங்கள் வேறு இயக்குனர்களிடம் கொடுத்து விடுங்கள் என்று என்போதும் கூறுவார். அப்போது தான் நீ நிறையே கதைகளை எழுது, பெரிய பொண்ணாகி நீயே போய் கொடு என்று சொல்லி இருக்கிறோம் என்றார்.
ஹலீதாவின் அப்பாவிற்கு, மகள் மருத்துவம் படித்து மருத்துவராக வேண்டும் என்று ஆசை. ஆனால், ஹலிதாவின் ஆசை வேறாக இருந்தது, இயக்குனராக வேண்டும் என்பது அவரின் சிறு வயது ஆசை அந்த ஆசை இன்று நிறைவேறி உள்ளது என்றார்.
என்னம்மா.. இப்படி திங்கறீங்களேம்மா.. மூஞ்சில வேற எதைப் பூசிக்குவாங்க இவங்க..?
ஹலீதா சமீம் ஓரம் போ படத்தில் புஸ்கர் காயத்ரியிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்ததாகவும் அப்போதே இரவு சூட்டிங் காலை கல்லூரி என இரண்டிலும் அசத்தி வந்தார் ஹலீதா என்று அவர் தயார் மிகுந்த சந்தோஷத்துடன் கூறினார் .
மேலும் ஹலீதா பற்றி அவரது அக்காவும் சில தகவல்களை பகிர்ந்து கொண்டார் அதில் அவரது அக்கா நான் ஹலீதாவின் விசிறி சிறு வயதில் இருந்தே ஹலீதாவிற்கு எழுதுவதில் விருப்பம் அதிகம் அவள் எந்த கவிதை எழுதினாலும் அந்த கவிதையை நான் தான் முதலில் படிப்பேன், சில்லுகருபட்டி படத்தில் அவளுது வசனங்கள் மிக அழகாக இருந்தது அதை நான் மிகவும் ரசிந்தேன் கூறினார் .


Click it and Unblock the Notifications











