சூர்யாவுக்கு அடுத்த கதை ரெடி: புது எனர்ஜியோடு தயாராகும் ஹரி
வீட்ல பத்து பதினைந்து அரிவாள் தயாரா வைச்சிருக்கோம்... அடிக்கடி படத்துக்கு யூஸ் பண்ணிக்குவோம். இது ஹரியின் ஓபன் ஸ்டேட்மென்ட். அந்த அளவிற்கு அரிவாள், துப்பாக்கி என படங்களில் பூஜை போடுவார் ஹரி.
தீபாவளி ரிலீசான பூஜை படத்தின் ரிசல்ட் பார்த்த கையோடு அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார் ஹரி. மீண்டும் சூர்யா உடன் சிங்கம் 3 என்கிறது கோடம்பாக்கத்து பட்சி. இல்லை இல்லை. மாஸ் படத்தில் பிஸியாக இருக்கும் சூர்யா, ஹரியை கழற்றி விட்டுவிட்டார். கால்ஷீட் கிடைக்காத கடுப்பில் சாமி 2 எடுக்கப்போகிறார் ஹரி என்றும் ஒரு தகவல் வெளியாகவே ஹரியை தொடர்பு கொண்டோம்.
அதெல்லாம் வெறும் வதந்தி நம்பாதீங்க... சூர்யாவுக்கான கதை டிஸ்கசனின் நாங்க ரொம்ப பிஸி என்று நம்பகமான தகவல் சொன்னது ஹரி டீம். தனது அடுத்த படத்தைப் பற்றி பிரபல நாளிதலுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார், பல இடங்களிலும் சூர்யா உடன்தான் அடுத்த படம் என்று கன்பார்ம் செய்துள்ளார் ஹரி.

கல்யாண சாப்பாடு
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ரசனை இருக்கும். தனிப்பட்ட ரசனைக்கான படம் எடுக்க முடியாது. ஹரி படம் என்பது கல்யாணச் சாப்பாடு போல. இங்கு எல்லாமும் இருக்கும். உங்களுக்குத் தேவையானதை எடுத்துக்கொள்ளலாம். குருதிப்புனல் படம் நீங்கள் சொல்வதைப் போல இருக்கும். ஆனால் அதுபோன்ற படத்தை என்னால் எடுக்க முடியாது.

ரஜினி, கமல், விஜய், அஜித்
இதுநாள்வரை விக்ரம், விஷால், சூர்யா ஆகியோருடன்தான் அதிகம் படம் செய்துள்ளேன். ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகியோருடன் வேலை செய்யும் வாய்ப்பு இதுவரை கிடைக்கவில்லை. கிடைத்தால் நிச்சயம் செய்வேன்.

கதை வேணுமே
புதுமுகங்களை வைத்துப் படம் எடுப்பதற்குக் கதை வேண்டும். கதையம்சம் உள்ள படங்களை நான் எடுப்பதில்லை. அதனால் புதுமுகங்களை வைத்து எடுக்க முடியாது.

சிங்கம் மூன்றாம் பாகமா?
அடுத்த படம் சூர்யா உடன்தான் என்று முடிவாகியுள்ளது. அது சிங்கம் 3தானா என்று முடிவாகவில்லை. நாங்கள் நிறைய கதையைப் பேசி வைத்திருக்கிறோம் என்கிறார் ஹரி. அடுத்தது அரிவாளா? துப்பாக்கியா என்பதை கதைதான் முடிவு செய்யுமாம்.

சூர்யாவும் தயார்
ஹரியின் இயக்கத்தில் ஆறு, வேல், சிங்கம், சிங்கம் 2 என நடித்துள்ள சூர்யா, மாஸ் படத்திற்குப் பிறகு ஹரியின் இயக்கத்தில் நடிக்க தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.
சிங்கமோ, வேலோ ஆயுதத்தை பார்த்து கொஞ்சம் புடிங்க ஹரி.


Click it and Unblock the Notifications











