அவங்க நல்லா இருந்தாதான் நம்ம தொழில் நல்லாருக்கும்.. சம்பளத்தில் 25% குறைத்த பிரபல இயக்குநர்!

சென்னை: கொரோனாவால் திரையுலகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தனது சம்பளத்தில் 25 சதவீதத்தை குறைப்பதாக பிரபல இயக்குநர் அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் நாடு முழுவதும் தொழில்துறை முற்றிலும் முடங்கியிருக்கிறது. இதற்கு சினிமாத்துறையும் விதிவிலக்கல்ல.

ஏரளாமான படங்கள் ரிலீஸ் செய்ய முடியாமல் தேங்கிக் கிடக்கிறது. பணத்தை போட்டு படத்தை தயாரித்த தயாரிப்பாளர்கள் செய்வதறியாது திணறி வருகின்றனர்.

சம்பளம் - கோரிக்கை

சம்பளம் - கோரிக்கை

லாக்டவுனுக்கு பிறகு திரைத்துறை எப்படி இயங்கப்போகிறது என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தெலுங்கு மற்றும் மலையாள சினிமா தயாரிப்பாளர்கள், முன்னணி நடிகர்கள் தங்களின் சம்பளத்தை குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

எந்த பேச்சும் இல்லை

எந்த பேச்சும் இல்லை

ஆனால் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர் சங்கம் தேர்தல் நடத்தப்படாமல் உள்ளதால் நிர்வாகிகள் இன்றி, அரசு சார்பில் தனி அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் சம்பள விவகாரம் தொடர்பாக இதுவரை எந்த பேச்சும் நடைபெற்றதாக தெரியவில்லை.

ஹரிஷ் கல்யாண்

ஹரிஷ் கல்யாண்

இருப்பினும் நடிகர் விஜய் ஆண்டனி தனது சம்பளத்தில் 3 கோடி ரூபாயை குறைப்பதாக அறிவித்தார். அவருக்கு பாராட்டுக்கள் குவிந்தன. இந்நிலையில் அவரை தொடர்ந்து இளம் நடிகரான ஹரிஷ் கல்யாணும் தனது சம்பளத்தை குறைக்கப் போவதாக கூறியிருக்கிறார்.

25% குறைப்பு

25% குறைப்பு

இந்நிலையில் இயக்குநர் ஹரி தனது சம்பளத்தில் 25 சதவீதத்தை குறைத்து கொள்வதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது கைப்பட எழுதிய அறிக்கையை அவர் வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், இந்த கொரோனா பாதிப்பால் நம் திரையுலகம் மிகுந்த பாதிப்பு அடைந்துள்ளது.

அருவா திரைப்படத்திற்கு

அருவா திரைப்படத்திற்கு

நம்முடைய தயாரிப்பாளர்கள் நன்றாக இருந்தால்தான் நம் தொழில் மறுபடியும் நல்ல நிலைக்கு திரும்பும். இந்த சூழலை மனதில் கொண்டு, நான் அடுத்ததாக இயக்கப் போகும் அருவா திரைப்படத்திற்கு என்னுடைய சம்பளத்தில் 25 சதவீதத்தை குறைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளேன். நன்றி... என பதிவிட்டுள்ளார்.

மனோபாலா பாராட்டு

மனோபாலா பாராட்டு

அவரது இந்த அறிக்கையை நடிகர் மனோ பாலா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு பாராட்டு தெரிவித்துள்ளார். இயக்குநர் ஹரி இயக்கப் போகும் அருவா படத்தில் சூர்யா மற்றும் ராஷி கன்னா லீடிங் ரோலில் நடிக்கின்றனர்.

விறுவிறுப்பான..

விறுவிறுப்பான..

ஏற்கனவே இயக்குநர் ஹரி நடிகர் சூர்யாவை வைத்து, ஆறு, வேல் மற்றும் சிங்கம் சீரிஸ் படங்களை கொடுத்துள்ளார். இயக்குநர் ஹரியின் பெரும்பாலான படங்கள் ஆக்ஷன் பிளாக்குகள்தான். அவரது படங்கள் விறுவிறுப்பான கதைக்களத்துடன் வேகமாக நகரும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X