Don't Miss!
- Finance
70 நாடுகளில் முதலீடு செய்த சீனா.. அடுத்தது யாரெல்லாம் திவாலாக போகிறார்கள்..!
- Technology
ரூ.9,000 கூட இல்ல.. அதை விட கம்மி விலைக்கு Jio-வின் புதிய 5G போன்!
- News
செவ்வாய் பெயர்ச்சி 2022: இனி இந்த ராசிக்காரர்களின் காட்டில் பணமழைதான்!..என்ஜாய்!!
- Sports
அவருக்கு இந்திய அணியில் வேலை இல்ல.. எங்க கூட கமெண்டரி பண்ண சொல்லுங்க.. DK வை சீண்டிய முன்னாள் வீரர்
- Lifestyle
நீங்க சாப்பிடும் இந்த உணவுகளில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளதாம்... இது மாரடைப்பை ஏற்படுத்துமாம்!
- Automobiles
ரூ.27.7 லட்சத்திற்கு அடாஸ் அம்த்துடன் ஹூண்டாய் டூஸான் விற்பனைக்கு அறிமுகம்... செம்ம ஸ்டைலா இருக்கு!
- Education
ஹாய் சிவகங்கை கேர்ள்ஸ்... உங்களுக்கு குஷி செய்தி…!
- Travel
வால்பாறை ஏன் ‘தி செவன்த் ஹெவன்’ என அழைக்கப்படுகிறது – காரணங்கள் இதோ!
அருவா படம் ட்ராப் ஆக காரணம்.. இயக்குநர் ஹரி என்ன சொல்லியிருக்காருன்னு பாருங்க!
சென்னை : நடிகர் அருண் விஜய், பிரியா பவானி சங்கர், ராதிகா, அம்மு அபிராமி, சமுத்திரக்கனி என பெரிய நட்சத்திரப் பட்டாளங்களுடன் வரும் ஜூன் 17ம் தேதி ரிலீசாக உள்ளது யானை படம்.
இந்தப் படத்தின் ட்ரெயிலர் வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் படத்தின் இயக்குநர் ஹரி உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் படம் குறித்து பல தகவல்களை படக்குழு பகிர்ந்துக் கொண்டது.
வாத்தி கம்மிங் டான்ஸ்...கேஜிஎஃப் டயலாக்...ஐபிஎல் நிறைவு நாளில் அதகளப்படுத்திய ரன்வீர் சிங்

யானை படம்
நடிகர் அருண் விஜய், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, ராதிகா, அம்மு அபிராமி என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ள படம் யானை. தன்னுடைய தங்கையின் கணவர் இயக்குநர் ஹரியுடன் இந்தப் படத்தின்மூலம் அருண் விஜய் முதல்முறையாக இணைந்துள்ளார்.

ட்ரெயிலர் வெளியீட்டு விழா
முன்னதாக படத்தின் பாடல்கள், டீசர் உள்ளிட்டவை வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றன. இந்நிலையில் நேற்றைய தினம் படத்தின் ட்ரெயிலர் வெளியீடு நிகழ்ச்சி சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் கலந்துக் கொண்ட அருண் விஜய், ஹரி உள்ளிட்ட படக்குழுவினர் படம் குறித்த பல்வேறு தகவல்களை பகிர்ந்துக் கொண்டனர்.

ஜூன் 17ல் ரிலீஸ்
படம் வரும் ஜூன் 17ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இதையொட்டி படக்குழுவினர் தொடர்ந்து பிரமோஷன்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்றைய தினம் நடைபெற்ற ட்ரெயிலர் வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட இயக்குநர் ஹரி படம் குறித்த பல விஷயங்களை பகிர்ந்துக் கொண்டார்.

ட்ராப்பான சூர்யா படம்
மேலும் அவரிடம் சூர்யாவுடன் அவர் இணைந்து முன்னதாக அறிவிக்கப்பட்ட அருவா படம் ஏன் ட்ராப் ஆனது என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த ஹரி, சூர்யாவுடனான அருவா படம் அப்படியே தான் இருப்பதாகவும், சில தவிர்க்க முடியாத காரணங்களால் படம் தள்ளிப் போயுள்ளதாகவும் எப்போது வேண்டுமானாலும் அந்தப் படம் மீண்டும் துவங்க வாய்ப்புள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

6வது முறையாக இணையவிருந்த கூட்டணி
யானை படத்தின் கதை சூர்யாவிற்காக எழுதப்பட்ட கதையில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். சூர்யாவுடன் ஹரி, வேல், ஆறு, சிங்கம் உள்ளிட்ட 5 படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளார். இதை தொடர்ந்தே அருவா என்ற படம் அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது.

எதிர்பார்ப்பில் யானை படம்
படத்தில் சூர்யாவிற்கு ராஷி கண்ணா ஜோடியாக நடிக்கவிருந்தார். இந்தப் படம் ட்ராப் ஆனதை தொடர்ந்தே அருண் விஜய் நடிப்பில் தற்போது யானை படத்தை இயக்கி முடித்துள்ளார் ஹரி. கிராமத்து பின்னணி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு காணப்படுகிறது. அருண் விஜய்க்கு படம் சிறப்பாக கைக்கொடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.