ரத்னம் படம் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்வி.. கடுப்பான இயக்குனர் ஹரி!

சென்னை: பிரபல நடிகர் விஷால் நடிப்பில், இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகி உள்ள ரத்னம் ஏப்ரல் 26ந் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில், டிரைலரில் வரும் கெட்டவார்த்தை குறித்த கேள்வியால் கடுப்பான ஹரி, படத்தை பார்த்துவிட்டு பேசுங்க என சரியான பதிலடி கொடுத்தார்.

தாமிரபரணி, பூஜை படங்களுக்குப் பிறகு ஹரி மற்றும் விஷால் கூட்டணியில் உருவாகி உள்ள திரைப்படம் ரத்னம். இதில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இதில்,கவுதம் வாசுதேவ் மேனன், சமுத்திரக்கனி, யோகிபாபு உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை ஜீ ஸ்டூடியோஸ் சவுத் மற்றும் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் இத்திரைப்படம் உருவாகி உள்ள இத்திரைப்படம், ஏப்ரல் 26ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Director Hari explained about the Rathnam movie trailer controversy

நடிகர் விஷால்: சென்னையில் நடந்த ஒரு செய்தியாளர் சந்திப்பில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு இயக்குனர் ஹரி மற்றும் நடிகர் விஷால் ஆகியோர் பதில் அளித்து வந்தனர். அப்போது ஒரு செய்தியாளர் டிரைலரில் வரும் கெட்ட வார்த்தை பற்றி கேள்வி எழுப்பினார். கோபத்தின் வெளிப்பாடு தான் அது, அந்த கேரக்டராக தான் விஷால் கெட்ட வார்த்தை பேசி இருக்கிறார். மற்றபடி அனைவரும் கெட்டவார்த்தை பேசுங்கள் என்று நாங்கள் சொல்லவில்லை என்றார். மேலும், என்னுடைய வழக்கமான என் படத்தைக் காட்டிலும் கொஞ்சம் வன்முறை அதிகமாக இருக்கும் என்றார்.

இயக்குநர் ஹரி விளக்கம்: இயக்குநர் ஹரி கெட்டவார்த்தை குறித்து விளக்கம் அளித்த போதும், மற்றொரு செய்தியாளர் டிரைலரிலேயே இவ்வளவு கெட்ட வார்த்தை இருக்கும்போது படத்தில் இன்னும் எவ்வளவு இருக்குமோ என்ற எண்ணம் தோன்றுகிறது என்றார். இந்த கேள்வியால் கொஞ்சம் டென்ஷனான இயக்குநர் ஹரி ஒருவர் கோபப்பட்டால் கெட்ட வார்த்தை வருவது இயல்புதான், தற்போதைய காலகட்டம் அப்படித்தான் இருக்கிறது. இது போன்ற வார்த்தைகளை சாதாரணமாகவே மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். எங்காவது அநியாயம் நடந்தால், வீடியோ எடுத்து ஸ்டேட்டஸ் போட்டு வருத்தப்படுவதோடு கடந்து சென்று விடுகின்றனர். ஆனால், என் படத்தின் ஹீரோ அதை தட்டிக் கேட்கிறார் என்று விளக்கம் கொடுத்தார்.

அனைவரும் கடுமையாக உழைத்தோம்: தொடர்ந்து பேசிய இயக்குநர் ஹரி, படத்தில் சிங்கிள் ஷாட் இருக்கிறது அதைப்பற்றி எல்லோரிடமும் பகிர்ந்துக்கொள்ள ஆசைப்படுகிறேன். ஒரே ஷாட்டில் எட்டுட் சீக்குவன்ஸ், நான்கு ஸ்டண்ட் மாஸ்டர்கள் செய்துள்ளனர். எனக்கு எதார்த்தமாக இருக்கனும்னு ஆசைப்படுவேன், இதை ஏன் வைத்தார் என யாரும் கேட்கக்கூடாது. அந்த எண்ணத்தில் தான் கடுமையாக உழைத்து படத்தை உருவாக்கியுள்ளோம்.

நிச்சயம் பிடிக்கும்: 3.5 கிமீ தூரத்திற்கு நான்கு இடங்களில் மாறி மாறி ஹீரோ ஹீரோயினோடு போய் ஆக்சன் செய்துள்ளார், இது செய்யவே முடியாது என்றார்கள். வெற்றிமாறன், ரஞ்சித் எல்லாம் ராவாக தருகிறார்கள் அது மாதிரி செய்ய ஆசைப்பட்டேன். விஷால் அதற்காக உழைத்தார், அனைவரும் ஒத்துழைப்பு தந்தனர். ஒரு நாள் முழுக்க ரிகர்சல் பார்த்து மூன்றாவது ஷாட்டில் எடுத்துத் முடித்த போது தான் நிம்மதியாக இருந்தது. ஆடியன்ஸை மதித்து படம் எடுத்துள்ளோம்,படத்தை பார்க்கும் போது உங்களுக்கு ஒரு புது அனுபவமாக இருக்கும் என்று இயக்குநர் ஹரி கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X