மீண்டும் விஷாலை இயக்கும் ஹரி.. இந்த முறை என்ன கதை தெரியுமா?
சென்னை : டைரக்டர் ஹரி தமிழில் மிகப்பிரபலமான இயக்குநராக தன்னை நிலைநாட்டியுள்ளார்.
சூர்யா, விஷால், அருண் விஜய் என முன்னணி ஹீரோக்களின் படங்களை இயக்கி அவற்றை வெற்றிப் படங்களாக்கியுள்ளார்.
சமீபத்தில் இவரது இயக்கத்தில் வெளியான யானை படம் விமர்சன ரீதியாக சிறப்பான விமர்சனங்களை பெறவில்லை என்றபோதிலும் வசூலில் சிறப்பாக அமைந்தது.

டைரக்டர் ஹரி
இயக்குநர் ஹரி தமிழில் மிகவும் பிரபலமான இயக்குநர்களில் ஒருவர். அதிரடி கிராமத்து கதைகளுக்கு பெயர் போன ஹரி, அடுத்தடுத்த சிறப்பான பல படங்களை இயக்கி, அதனை வெற்றிப்பெறவும் செய்துள்ளார். சூர்யா, விக்ரம், விஷால், அருண்விஜய் என முன்னணி ஹீரோக்களை இயக்கியவர் இவர்.

சூர்யா நடிப்பில் சிங்கம் பாகங்கள்
சூர்யா நடிப்பில் ஹரி இயக்கிய சிங்கம் பாகங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த படங்கள். இவற்றில் அனுஷ்கா, ஹன்சிகா, ஸ்ருதிஹாசன் என முன்னணி நாயகிகளையும் நடிக்க வைத்திருந்தார். இந்தப் படங்களின் பாடல்களும் ரசிகர்களை சிறப்பாக கவர்ந்தன. முன்னதாக சூர்யா, விக்ரம் என முன்னணி நடிகர்களை கொண்டு சிங்கம், சாமி போனற வெற்றிப் படங்களை போலீஸ் கதைக்களங்களில் கொடுத்திருந்தார் ஹரி.

அருண் விஜய்யின் யானை
இந்நிலையில் யானை படத்தை தொடர்ந்து மீண்டும் போலீஸ் கதையை கையிலெடுத்துள்ளார் ஹரி. யானை படத்தில் அருண் விஜய், பிரியா பவானி சங்கர் நடித்திருந்த நிலையில், குடும்ப ஒற்றுமையை மையமாக கொண்டு அந்தப் படம் உருவாகியிருந்தது. இந்தப் படம், ஹரி மற்றும் அருண் விஜய் காம்பினேஷலில் உருவான முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

விஷாலுடன் இணையும் ஹரி
யானை படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக விஷாலை இயக்கவுள்ளார் ஹரி. முன்னதாக ஹரி -விஷால் காம்பினேஷனில் தாமிரபரணி, பூஜை ஆகிய படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்திருந்த நிலையில், தற்போது மூன்றாவது முறையாக விஷாலை இயக்கவுள்ளார் ஹரி.

மாறுபட்ட கதைக்களம்
முன்னதாக ஹரி இயக்கத்தில் உருவாகி வெற்றிப்படங்களாக அமைந்த சிங்கம், சாமி போன்ற போலீஸ் கதைகளில் இருந்து தற்போது உருவாகவுள்ள படம் முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் எடுக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கவுள்ளது.

அதிரடி ஆக்ஷன் படம்
செப்டம்பர் அல்லது அக்டோபரில் இந்த புதிய படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹரி என்றாலே ஆக்ஷன் காட்சிகள் அதிகமாக இருக்கும். இதேபோல விஷால் படங்களிலும் ஆக்ஷன் பட்டையை கிளப்பும். இவர்கள் இருவரும் இணைவது ஆக்ஷன் பிரியர்களுக்கு இனிப்பான செய்தியாக பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











