Director Hari: 2 வருஷத்துக்கு ஒரு அவார்ட் வாங்கிடுவாரு.. சியானை உச்சிமுகர்ந்த இயக்குநர்!

சென்னை: நடிகர் விஷால் நடிப்பில் உருவாகியுள்ளது ரத்னம் படம். படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் ஹரி. படம் வரும் 26ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீசாகவுள்ள சூழலில் படக்குழுவினர் அடுத்தடுத்த ப்ரமோஷன்களை முடுக்கி விட்டுள்ளனர். இயக்குநர் ஹரி, நடிகர் விஷால் உள்ளிட்ட படக்குழுவினர் அடுத்தடுத்த ப்ரமோஷன்களை கொடுத்து வருகின்றனர்.

தாமிரபரணி, பூஜை படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக ரத்னம் படத்தில் விஷால் -ஹரி காம்பினேஷன் இணைந்துள்ளது. இதனால் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. படத்தின் டீசர், ட்ரெயிலர், பாடல்கள் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. படத்திற்கு தேஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். அதிரடி ஆக்ஷன் களத்தில் இந்தப் படத்தின் திரைக்கதை உருவாகியுள்ளது.

Director Hari hails Actor Vikram and his Thangalaan movie in his Rathnam movie promotions

ரத்னம் படம்: நடிகர் விஷால் நடிப்பில் இயக்குநர் ஹரி இயக்கத்தில் உருவாகியுள்ளது ரத்னம் படம். தாமிரபரணி, பூஜை படங்களை தொடர்ந்து இந்த காம்பினேஷன் மூன்றாவது முறையாக இணைந்துள்ளது. இந்தப் படத்தில் விஷாலுக்கு நடிகை பிரியா பவானி சங்கர் ஜோடியாக நடித்துள்ளார். படத்தின் ட்ரெயிலர் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. அதிரடி ஆக்ஷன் களத்தில் இந்தப் படத்தின் திரைக்கதை உருவாகியுள்ளது. முன்னதாக வெளியான படங்களிலும் அதிரடி ஆக்ஷன் படங்களையே இந்த கூட்டணி கொடுத்த நிலையில், வரும் 26ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ள ரத்னம் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குநர் ஹரி: தொடர்ந்து சொதப்பலான படங்களை கொடுத்துவந்த விஷாலுக்கு கடந்த ஆண்டில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான மார்க் ஆண்டனி படம் மிகப்பெரிய அளவில் கைக்கொடுத்தது. டைம் டிராவலை மையமாக கொண்டு வெளியான இந்தப் படத்தில் அவருடன் இணைந்து எஸ்ஜே சூர்யாவும் மிரட்டியிருந்தார். இந்நிலையில் இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது ஹரி இயக்கத்தில் ரத்னம் படத்தில் நடித்து முடித்துள்ளார் விஷால். இந்தப் படம் இன்னும் சில தினங்களில் ரிலீசாகவுள்ளது மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள நிலையில், பாடல்களும் கவனம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரத்னம் பட பிரமோஷன்கள்: படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே உள்ள சூழலில் நடிகர் விஷால், இயக்குநர் ஹரி உள்ளிட்ட படக்குழுவினர் தொடர்ந்து அடுத்தடுத்த பிரமோஷன்களை முடுக்கி விட்டுள்ளனர். நடிகர் விஷால் பத்திரிகையாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். இதன்போது பயில்வான் ரங்கநாதன் கேட்ட கேள்விக்கு கோபத்துடன் விஷால் பதிலளிக்க மறுத்ததையும பார்க்க முடிந்தது. தொடர்ந்து தன்னுடைய அரசியல் பிரவேசம் உள்ளிட்ட பல விஷயங்களையும் கிளியர் செய்திருந்தார் விஷால். இதேபோல இயக்குநர் ஹரியும் தன்னுடைய படங்கள் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்தும் பேசினார்.

விக்ரமை பாராட்டிய ஹரி: இதனிடையே நடிகர் விக்ரம் குறித்த கேள்விக்கு உற்சாகமாக பதிலளித்த ஹரி, இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை எப்படியாவது அவார்ட் வாங்கிவிடுவார் என்று பாராட்டு தெரிவித்தார். தற்போது நடித்துள்ள தங்கலான் படம், முன்னதாக நடித்துள்ள அந்நியன், ஐ போன்ற படங்களில் விக்ரமின் நடிப்பு மிரட்டியதையும் குறிப்பிட்டார். தன்னுடைய இயக்கத்தில் விக்ரம் கமர்ஷியலாக நடித்ததை சுட்டிக் காட்டிய ஹரி, அவர் மற்ற இயக்குநர்களின் இயக்கத்தில் நடிக்கும் படங்களை தான் விரும்பி பார்ப்பேன் என்றும் பாராட்டு தெரிவித்துள்ளார். தங்கலான் படத்தின் டீசரை பார்த்து இப்படியெல்லாம் நடிக்க முடியுமா என்று தான் மிரண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X