கில்லி ரீ ரிலீசுக்கு வந்த கூட்டம்.. ஓட்டு போட வரல.. இயக்குனர் ஹரி வேதனை!

சென்னை: கில்லி ரீ ரிலீசுக்கு வந்த கூட்டம் ஓட்டு போட வராதது வேதனையை அளிக்கிறது என இயக்குனர் ஹரி வேதனையை வெளிப்படுத்தி உள்ளார். ஒவ்வொரு குடிமகனுக்கும் வாக்களிப்பது எனது ஜனநாயக கடமை, எனது உரிமை, என் பிரதமரை நான் தான் தேர்வு செய்வேன் என்ற எண்ணம் வரவேண்டும் என்று இயக்குநர் ஹரி தெரிவித்துள்ளார்.

சிறந்த இயக்குனரான ஹரி கடைசியாக யானை திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தில் அருண் விஜய், பிரியா பவானி சங்கர் நடித்திருந்தனர். இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், அடுத்ததாக இயக்குனர் ஹரி, விஷாலை வைத்து ரத்னம் எனும் திரைப்படத்தை இயக்கி உள்ளார். இதற்கு முன் அவர்கள் தாமிரபரணி, பூஜை ஆகிய படத்தில் சேர்ந்து பணியாற்றிய நிலையில் தற்போது 3வது முறையாக ரத்னம் படத்தில் இணைந்துள்ளார்.

Director Hari latest interview about Parliament Election

இப்படத்தில், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, கவுதம் வாசுதேவ் மேனன் உட்பட பலர் நடித்துள்ளனர். ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் கார்த்திகேயன் சந்தானம், ஜீ ஸ்டூடியோஸ் சவுத் இணைந்து தயாரித்து, அலங்கார் பாண்டியன், கல்யாண் சுப்பிரமணியம் இணைத் தயாரிப்பு செய்துள்ளனர். இப்படம் 26ந் தேதி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியாக உள்ளது.

வேதனையாக இருக்கு: திருநெல்வெலியில் செய்தியாளர்களின் சந்திப்பு நடைபெற்றது, அதில் ஒரு செய்தியாளர், 20 வருடத்திற்கு பிறகு வெளியான கில்லி ரீ ரிலீஸ் படத்தை பார்க்க தியேட்டரில் ஏகப்பட்ட கூட்டம் கூடியது. ஆனால், நாடாளுமன்றத் தேர்தலுக்கு பதிவான வாத்கு 60 சதவீதத்தைக்கூட தொடவில்லை, இது ஏன் என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த இயக்குநர் ஹரி, இதை பார்க்கும் போது எனக்கு வருத்தமாக இருக்கிறது. 100 சதவீதத்திற்கான வாக்குப்பதிவிற்கு வாய்ப்பு இல்லை, ஏன் என்றால், வேலை என இன்னும் சில பிரச்சனைகள் இருக்கலாம்.

வாக்களிப்பதில் பிரச்சனை:ஆனால், வீட்டில் இருந்தவர்களுக்கு வாக்களிப்பது நமது ஜனநாயக கடமை, எனது உரிமை, என் பிரதமரை நான் தான் தேர்வு செய்வேன் என்ற எண்ணம் வரவேண்டும். முன்பை விட இந்த முறை வாக்களிப்பது மிகவும் எளிமையாக நடந்தது, முதியவர்களுக்கு நாற்காலி எல்லாம் கொடுக்கப்பட்டது. இப்படி இருக்கும் போது வாக்களிப்பதில் என்ன பிரச்சனை இருக்கு, அடுத்த முறையாவது வாக்களித்த சதவீதம் அதிகரிக்க வேண்டும் என்றார். அதே போல விஜய் அரசியல் வருகை குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், அதற்கு யாராலும் தடை போட முடியாது. மக்களுக்கு யார் வேண்டுமானாலும் சேவை செய்யலாம் என்று அந்த பேட்டியில் ஹரி பதில் அளித்துள்ளார்.

ஒரே ஷாட்டில்: தொடர்ந்து பேசிய, இயக்குநர் ஹரி, இந்தப்படம் இந்தக்கால பார்வையாளர்களுக்கு பிடிக்கும் வகையில், 60 % ஆக்ஷன் 40 % கமர்ஷியலாக இருக்கும். இதில் பணியாற்றிய சிங்கிள்ஷாட் பற்றி பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். ஒரே ஷாட்டில், எட்டு ஆக்‌ஷன் சீக்குவன்ஸ் எடுத்தோம். நான்கு ஸ்டன்ட் மாஸ்டர்கள் அதை செய்தனர். 3.5 கிமீ தூரத்துக்கு 4 இடங்களில் மாறி மாறி ஹீரோ, ஹீரோயினோடு சென்று ஆக்ஷன் செய்துள்ளார். இதற்காக விஷால் கடுமையாக உழைத்திருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X