twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    யானை Vs டைரக்டர் ஹரி படங்கள்...இதை யாரெல்லாம் கவனிச்சீங்க?

    |

    சென்னை : டைரக்டர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய், பிரியா பவானிசங்கர், ராதிகா சரத்குமார், சமுத்திரக்கனி, ராஜேஷ், யோகிபாபு, புகழ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் யானை. இந்த படம் கடந்த வாரம் தியேட்டர்களில் ரிலீசாகி, அனைத்து தரப்பிலும் பாசிடிவ் கமெண்ட்களை பெற்று வருகிறது.

    Recommended Video

    Yaanai | திரையரங்கிற்கு நேரடியாக சென்று பார்வையிட்ட Arun Vijay *Kollywood | Filmibeat Tamil

    சாமி 2 படத்தின் தோல்விக்கு பிறகு படங்கள் எதுவும் இயக்காமல் இருந்த ஹரி, நான்கு ஆண்டு இடைவேளைக்கு பிறகு தற்போது யானை படத்தை இயக்கி உள்ளார். பொதுவாக ஹரி படம் என்றாலே ஆக்ஷன், சென்டிமென்ட் கலந்ததாக, அதுவும் குடும்ப சென்டிமென்ட் அதிக உள்ளதாக தான் இருக்கும். அந்த படங்கள் கமர்ஷில் ஹிட் கொடுப்பதாகவும் இருக்கும்.

    நீண்ட காலத்திற்கு பிறகு ஹரி இயக்கிய படம் என்பதால் யானை படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. யானை படத்துடன் கமல் நடித்த விக்ரம் படம் ரிலீசாகி இருந்தால் விக்ரம் படம் காணாமல் போயிருக்கும் என்று சிலர் மீம்களை பரவ விட்டிருந்தனர்.

    அடுத்தடுத்து 3 தொடர்கள்.. அதிரடியில் ஜீ தமிழ்.. உற்சாகத்தில் ரசிகர்கள்! அடுத்தடுத்து 3 தொடர்கள்.. அதிரடியில் ஜீ தமிழ்.. உற்சாகத்தில் ரசிகர்கள்!

    யானை படத்தில் வரும் ஒற்றுமைகள்

    யானை படத்தில் வரும் ஒற்றுமைகள்

    பிரசாந்த் நடித்த தமிழ் என்ற படத்தை இயக்கி டைரக்டராக அறிமுகமானவர் ஹரி. பிறகு சாமி, கோவில், அருள், அய்யா, ஆறு, தாமிரணி, வேல், சேவல், சிங்கம் 3 பாகங்கள், புஜை, வேங்கை போன்ற படங்களை இயக்கினார் ஹரி. இந்த வரிசையில் தற்போது யானை இணைந்துள்ளது. ஆனால் நன்கு கவனித்து பார்த்தால் இந்த படங்களுக்கும் யானை படத்திற்கு நிறைய ஒற்றுமைகள் இருப்பது புரியும். அதே போல் சில விஷயங்கள் எதற்காக வைத்துள்ளார்கள் என்பது கொஞ்சமல்ல, ரொம்பவே குழப்புகிறது.

    இதெல்லாம் எதற்காக வைத்தார்

    இதெல்லாம் எதற்காக வைத்தார்

    இதில் மிகப் பெரிய குழப்பம் என்னவென்றால், படம் முழுவதும் ராமேஸ்வரம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் நடப்பதாக காட்டப்படுகிறது. ஆனால் படத்தில் வரும் அனைவரும் துத்துக்குடி தமிழ் பேசி நடித்திருப்பார்கள். ராமநாதபுரம் தமிழ் வித்தியாசமாக இருக்கும். ஆனால் இவர்கள் எதற்காக துத்துக்குடி தமிழ் பேசுகிறார்கள் என தெரியவில்லை. அதே போல் கடல் உணவு பதப்படுத்தி, ஏற்றுமதி செய்யும் தொழில் துத்துக்குடியில் தான் அதிகம். ராமேஸ்வரத்தில் படகு கட்டுதல், மீன் பிடித்தல் ஆகியன தான் பிரதான தொழில்.

    எங்கேயோ பார்த்த போல இருக்கே

    எங்கேயோ பார்த்த போல இருக்கே

    யானை படத்தில் வீட்டில் நடக்கும் சீன்களை பார்க்கும் போது சுர்யா நடித்த வேல் படம் நினைவிற்கு வராமல் நிச்சயம் இருக்க முடியாது. காலேஜில் நடக்கும் சீன்களை காட்டும் போது தாமிரபரணி படம் நினைவிற்கு வருகிறது. தாமிரபரணியில் நல்ல தண்ணி தீவு, யானை படத்தில் கச்சத்தீவு. சிங்கம் 2 படத்தில் ஹன்சிகா சித்தப்பா, வில்லன் ரகுமான் கடல் உணவு பிசினஸ் தான் செய்வார். இதில் சமுத்திரக்கனி. ஹீரோ மாற்று மதத்தை சேர்ந்த பெண்ணை லவ் பண்ணும் சீன், கோவில் படத்தை கண் முன் கொண்டு வருகிறது.

    எல்லாம் அப்படியே ஒத்து போகுதே

    எல்லாம் அப்படியே ஒத்து போகுதே

    பாடல்களில் கேட்டவே வேண்டாம். சாமி படத்தில் வரும் கல்யாணம் தான் கட்டிகிட்டு காட்சிகளை புது வெர்சனில் பார்ப்பதை போல் உள்ளது. ஹீரோயின் அணிந்து வரும் புடவை ஸ்டையில். தாமிரபரணி படத்தின் பானு, அய்யா படத்தில் நயன்தாரா ஸ்குட்டியில் வருவார்கள். இதில் பிரியா பவானிசங்கர். ஹீரோ மொபைல் போனை மறந்து வைத்து விட்டு போது, ஹீரோயின் அவர் பின்னாலேயே சுற்றுவது, முதலில் தவறாக நினைப்பது, பிறகு ஃபிரண்ட் சொன்னதும் ஹீரோவை லவ் பண்ணுவது எல்லாம் ஹரி படங்களில் வரும் வழக்கமான சீன்கள் தான்.

    ஹரி ஏன் இதையேல்லாம் மிஸ் பண்ணினார்

    ஹரி ஏன் இதையேல்லாம் மிஸ் பண்ணினார்

    வழக்கமாக தனது படத்தில் ஒரு பாடலையாவது சுப்பர் ஹிட் ஆக்கி விடுவார் ஹரி. ஆனால் யானையில் அதை எப்படி மிஸ் செய்தார் என்று தெரியவில்லை. அதே கடலோர பகுதி கதை, ஹீரோ குடும்பத்தை அழிக்க துடிக்கும் வில்லன் குடும்பம், குடும்பத்தை காப்பாற்ற போராடும் ஹீரோ, வீட்டை விட்டு வெளியே துரத்தப்படுவது எல்லாம் அப்படியே இருக்கு. தாமிரபரணி, வேல், புஜை பட சீன்களின் ஒற்றுமை நிறையவே யானை படத்தில் உள்ளது. புதிதாக ஏதாவது சொல்லி இருப்பார் என கடைசி வரை படத்தை பொறுமையாக பார்த்தால், கடைசி வரை ஒன்றுமே இல்லை.

    எதற்காக இப்படி ஒரு டைட்டில்

    எதற்காக இப்படி ஒரு டைட்டில்

    ஹீரோ கேரக்டரின் பெயரை தான் வழக்கமாக டைட்டிலாக வைப்பார் ஹரி. அல்லது படத்திற்கும் டைட்டிலுக்கும் ஏதாவது ஒரு தொடர்பு நிச்சயம் வைத்திருப்பார். அதை படத்தின் பல இடங்களிலும் குறிப்பிட்டிருப்பார். ஆனால் யானை படத்தில் ஆரம்பத்தில் ஜோசியராக வரும் கங்கை அமரன், அருண் விஜய்யை யானையுடன் ஒப்பிட்டு பேசுவார். அதற்கு பிறகு ஓஏகே சுந்தரும் அருண் விஜய் அடித்ததை சொல்லும் போது யானையுடன் ஒப்பிட்டு சொல்லுவார். மற்றபடி எதற்காக யானை என டைட்டில் வைத்தார் என தெரியவில்லை.

    இதெல்லாம் மறந்துட்டாங்கேளா

    இதெல்லாம் மறந்துட்டாங்கேளா

    ஹரி படங்கள் பார்த்து நீண்ட காலம் ஆகி விட்டதால் முந்தைய படங்களின் சீன்களை ரசிகர்கள் மறந்து விட்டார்களோ என்னவோ. ஹரி படங்களில் பாடல் கேட்ட நன்றாக இருக்கும். காமெடியும் நன்றாக இருக்கும். வேல் படத்தில் வடிவேலு, சிங்கம் படங்களில் விவேக் என மறக்க முடியாததாக இருந்தது. ஆனால் யானை படத்தில் காமெடி என்ற பெயரில் யோகிபாபுவும், புகழும் கதறி அழுக வைத்துள்ளனர். அரிவாள் கலாச்சாரம், குடும்ப பகை, கடலில் படகில் போய் சண்டை, தீவிற்கு தப்பிச் சென்று சண்டை என்பதெல்லாம் இன்னும் எத்தனை காலத்திற்கு எடுபடும் என ஹரி நினைக்கிறார் என ரசிகர்களே கேள்வி கேட்க துவங்கி விட்டனர்.

    English summary
    Director Hari's Yaanai movie released recently. Yaanai movie scenes are looking like Hari's previous movies. Usually Hari give super hit songs in his movies. But he missed lot of things in Yaanai movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X