60 சதவீதம் கெட்டவர்கள் 40 சதவீதம் நல்லவர்கள்.. விஷாலின் ரத்னம் பட கதை இதுதான்.. ஹரி ஓபன் டாக்
சென்னை: விஷால் தமிழில் பல வருடங்களாக நடித்துவருகிறார். அவரது நடிப்பில் கடைசியாக மார்க் ஆண்டனி திரைப்படம் வெளியானது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்த அந்தப் படம் மெகா ஹிட்டானது. மேலும் விஷாலின் சினிமா கரியரிலேயே இந்தப் படம்தான் நூறு கோடி ரூபாயை வசூலித்தது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக அவர் ஹரியின் இயக்கத்தில் ரத்னம் படத்தில் நடித்திருக்கிறார். இந்தச் சூழலில் ரத்னம் படத்தின் கதை இதுதான் என இயக்குநர் ஹரி ஓபனாக பேசியிருக்கிறார்.
செல்லமே படத்தின் மூலம் அறிமுகமான விஷால் கடந்த பல வருடங்களாகவே ஒரு ஹிட் கொடுக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்தார். இப்படிப்பட்ட சூழலில் அவர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி படத்தில் கடைசியாக நடித்தார். டைம் ட்ராவல் ஜானரில் படம் உருவாகியிருந்தது. விஷால், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், ரிது வர்மா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்

செம ரெஸ்பான்ஸ்: தமிழ் சினிமாவில் டைம் ட்ராவல் ஜானரில் வரும் படங்களுக்கு எப்போதுமே வரவேற்பு இருக்கும். அந்த ஜானரில் படம் வெளியானதால் எதிர்பார்ப்போடு படத்துக்கு சென்றனர் ரசிகர்கள். படத்தை பார்த்த ரசிகர்கள் தாங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே படம் திருப்திப்படுத்திவிட்டதாக கூறினர். குறிப்பாக ஆதிக் ரவிச்சந்திரனை ஏகத்துக்கும் கொண்டாடினர். அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் குட் பேட் அக்லி படத்தை இயக்குகிறார். மார்க் ஆண்டனி நூறு கோடி ரூபாயை வசூலித்தது.
அடுத்த படம்: மார்க் ஆண்டனியின் வெற்றியை அடுத்து விஷால் உற்சாகத்தின் உச்சத்தில் இருக்கிறார். அந்த சூட்டோடு ஹரி இயக்கத்தில் ரத்னம் என்ற படத்தில் நடித்திருக்கிறார். ஏற்கனவே ஹரி இயக்கத்தில் இவர் நடித்திருந்த தாமிரபரணி, பூஜை ஆகிய படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றவை. எனவே மார்க் ஆண்டனி கொடுத்த ஹிட் வைபை இந்தப் படத்திலும் விஷால் தொடர்வார் என்று நம்பப்படுகிறது.
ஹரி பேட்டி: இந்நிலையில் ரத்னம் படத்தின் கதை என்ன என்பது குறித்து இயக்குநர் ஹரி ஓபனாக பேசியிருக்கிறார். அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "நாட்டில் 60 சதவீதம் பேர் கெட்டவர்கள், 40 சதவீதம் பேர்தான் நல்லவர்கள். அவர்களை காப்பாற்ற சமூகத்தில் கெட்டது செய்பவர்களை தூக்கிப்போட்டு குணம் கொண்ட ஒருவன் ரத்னம். சினிமாவில்தான் இதுபோன்ற ஆட்களை பார்க்க முடியும். நிஜத்தில் இல்லை. அதற்கு சட்டத்திலும் இடமில்லை. நம்முடைய வலியை போக்கும் ஒருவனே ஹீரோவாக இருக்க முடியும். அப்படிப்பட்ட கதாபாத்திரம்தான் ரத்னம்.
வெறித்தனமான ரத்னம்: சாமி, சிங்கம் படங்களில் எந்த அளவுக்கு ஆக்ஷன் காட்சிகள் ரசிகர்களை கவர்ந்ததோ அதைவிட வெறித்தனமாக ரத்னம் படத்தை எடுத்திருக்கிறேன். என்னதான் பெரிய ஹீரோ, இயக்குநராக இருந்தாலும் எங்களுக்கும் பப்ளிசிட்டி தேவைப்படுகிறது. நாங்கள் ஒரு படத்தை எடுத்திருக்கிறோம் என்றா அதை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்தால் மட்டும்தான் படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் எழும். எனது படத்துக்கு பப்ளிசிட்டி வேண்டாம் என்று சொன்னால் ஒருத்தனும் படத்தை வந்து பார்க்கமாட்டேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











