Vishal 34 :அதிகமான பொறுப்புணர்வு ஏற்பட்டுருக்கு.. விஷால் படம் குறித்து மனம்திறந்த ஹரி!
சென்னை : தாமிரபரணி, பூஜை படங்களை தொடர்ந்து நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் ஹரி கூட்டணி மீண்டும் புதிய படத்தில் இணையவுள்ளது.
இந்தப் படங்களின் வெற்றியை தொடர்ந்து மூன்றாவதாக ஹாட்ரிக் வெற்றியை பெறும் நோக்கத்தில் இந்தக் கூட்டணி தற்போது புதிய படத்தின் அறிவிப்பை மேற்கொண்டுள்ளது.
விஷால் தற்போது மார்க் ஆண்டனி படத்தின் இறுதிக்கட்ட சூட்டிங்கில் இணைந்துள்ளார். இந்தப் படத்தில் அவருக்கு ரித்து வர்மா ஜோடியாகியுள்ளார்.

விஷால் 34 குறித்து பேசிய ஹரி : நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் ஹரி வெற்றிக் கூட்டணி, முன்னதாக தாமிரபரணி, பூஜை போன்ற படங்களில் இணைந்து ரசிகர்களுக்கு சிறப்பான பிளாக் பஸ்டர் கொடுத்தது. இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில், இந்தக் கூட்டணி தற்போது மூன்றாவது முறையாக இணைந்துள்ளது. விஷால் 34 படத்திற்காகத்தான் இந்தக் கூட்டணி தற்போது இணைந்துள்ளது. இந்தக் கூட்டணி இணைந்து ஹாட்ரிக் வெற்றியை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
நடிகர் விஷால் தற்போது மார்க் ஆண்டனி என்ற படத்தின் இறுதிக்கட்ட சூட்டிங்கில் இணைந்துள்ளார். த்ரிஷா இல்லன்னா நயன்தாரா, பஹிரா போன்ற படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப் படத்தில் விஷாலுக்கு ரித்து வர்மா ஜோடியாகியுள்ளார். எஸ்ஜே சூர்யா வில்லனாக நடித்து வருகிறார். மிகுந்த எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ள இந்தப் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் எதிர்பார்க்கப்படுகின்றன.
விஜய்யின் லியோ படத்தில் முக்கியமான ரோலில் நடிக்க நடிகர் விஷாலை லோகேஷ் கனகராஜ் முன்னதாக அணுகியதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் கால்ஷீட் பிரச்சினை காரணமாக அவரால் நடிக்க முடியாமல் போனது. இதேபோல, இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்திலும் நடிக்க விஷாலை அணுகியுள்ளனர். ஆனால் அதிலும் அவரால் நடிக்க முடியாமல் போக, தற்போது இயக்குநர் ஹரியுடன் இணைந்துள்ளார் விஷால்.

இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனமும் ஜீ ஸ்டூடியோ நிறுவனமும் இணைந்து தயாரிக்கவுள்ள நிலையில், நேற்றைய தினம் படத்திற்கான பூஜை எளிமையாக போடப்பட்டு, படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகியுள்ளது. இந்தப் போஸ்டரில் ஸ்டெதஸ் கோப் நடுவில் இருக்க, சுற்றிலும், அரிவாள், கத்தி, துப்பாக்கி உள்ளிட்டவை காணப்படுகின்றன. அதிரடி ஆக்ஷன் படமாக இந்தப் படம் உருவாக உள்ளது.
இந்நிலையில், விஷாலுடன் 3வது முறையாக இணைவது குறித்து இயக்குநர் ஹரி தன்னுடைய பேட்டியொன்றில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். தன்னுடைய முந்தைய படங்களை போலவே, இந்தப் படமும் அதிரடி ஆக்ஷன் படமாக அமையும் என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால் படத்திக் கதைக்களம் தனித்துவமாகவும் எமோஷனலாகவும் ரசிகர்களை அதிகமாக கவரும்வகையில் இருக்கும் என்றும் அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











