சிங்கம் 4 வருமா? எங்க போனாலும் இதே கேள்வி.. அப்டேட் கொடுத்த இயக்குநர் ஹரி!

சென்னை: இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் சூர்யா, அனுஷ்கா நடிப்பில் வெளியான திரைப்படம் சிங்கம். இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து சிங்கம் 2, சிங்கம் 3 ஆகிய படங்கள் வெளியாகி வெற்றி பெற்றன. இந்நிலையில், சிங்கம் நான்காம் பாகம் எடுப்பது குறித்து இயக்குநர் ஹரி சூப்பர் அப்டேட்டை கொடுத்துள்ளார்.

தமிழில் முன்னணி இயக்குநராக ஹரி, சாமி, கோவில், ஆறு, தாமிரபரணி என பல ஹிட் படத்தை கொடுத்துள்ளார். இவர் சூரியாவை வைத்து இயக்கிய சிங்கம் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதில், சூர்யா, அனுஷ்கா, மனோரமா, பிரகாஷ்ராஜ், பிரியா அட்லி, ராதா ரவி, விவேக் ஆகியோர் நடித்திருந்தனர்.

Director Hari released an update on Suriya s Singam 4

சூர்யாவின் சிங்கம்: இதில், நடிகர் சூர்யாவோ துரை சிங்கமாகவே கர்ஜித்து நடித்து கலக்கி இருப்பார். இப்படம் சூர்யாவின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான திரைப்படம் ஆகும். இப்படத்தில் சூர்யா சிங்கத்த போட்டோவுல பார்த்துருப்ப, சினிமாவுல பார்த்துருப்ப, டிவியில பார்த்துருப்ப, ஏன்.. கூண்டுல கூட பார்த்துருப்ப, கம்பீரமா காட்டுல நடந்து பார்த்துருக்கியா? வெறித்தனமா தனியா நின்னு வேட்டையாடி பார்த்துருக்கியா? ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா.. பார்க்குறியா என சூர்யா பேசி கார் மீது ஒரு அடி அடிப்பாரு பாருங்க அந்த சீன்ல ஒட்டுமொத்த தியேட்டரும் விசில் அடித்து அலப்பறை செய்து இருப்பார்கள். படம் வெளியாகி இத்தனை ஆண்டுகள் ஆனப்போதும் இப்போதும் அந்த வசனம் டிரெண்டிங்கில் இருக்கிறது.

5 மொழிகளில் : இத்திரைப்படம் 5 மொழிகளில் வெளியாகி 90 கோடி வசூல் செய்து மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இதில் சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா, விவேக், சந்தானம், ரகுமான் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படமும் எதிர்பார்த்த வெற்றியை ருசித்ததால், 2017ம் ஆண்டு சிங்கம் 3 வெளியானது. மூன்றாம் பாகம் முந்தைய படத்தைப் போல கதை அம்சத்தில் இருந்ததால், இந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

சிங்கம் 4 வருமா: இருந்தாலும், சூர்யாவை காக்கிசட்டையில் பார்க்க ஆசைப்படும் ரசிகர்கள் சிங்கம் 4 எப்போது வரும் என்று கேட்டு வந்த நிலையில், இதற்கு பதில் அளித்துள்ள இயக்குநர் ஹரி, நான் எங்கே போனாலும், சிங்கம் 4 படம் குறித்து கேள்வி கேட்டு வருகின்றனர். ஆனால் அந்த படத்திற்காக நான் அதிக நேரம் உழைக்க வேண்டி இருக்கிறது. ஏற்கனவே மூன்று பாகங்கள் வெளியாகி வெற்றி பெற்றதால், நான்காம் பாகத்தையும் ஹிட்டாக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். இருந்த போதும், சிங்கம் 4 எப்போது உருவாகும் என்பதை காலம் தான் முடிவு செய்ய வேண்டும், இப்போதைக்கு அந்த ஐடியா இல்லை என்று கூறியுள்ளார். ஹரியின் இந்த பதிலைக் கேட்ட ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

ரத்னம்: இயக்குநர் ஹரி, விஷாலின் 34வது படத்திற்கு ரத்னம் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணி நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். கார்த்திக் கே சுப்பராஜ் தயாரித்துள்ள இப்படத்தில், நடிகை பிரியா பவானி ஷங்கர், யோகி பாபு, சமுத்திரக்கனி, கௌதம் மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் ஏப்ரல் 26ந் தேதி வெளியாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X