விட்டா பத்திரிகையே வெச்சிடுவார்போல.. ரத்னம் படத்துக்காக ஹரி செஞ்சத பாருங்க.. அவருக்கா இந்த நிலைமை

சென்னை: கோலிவுட்டில் முக்கியமான கமர்ஷியல் இயக்குநர் என்ற அடையாளத்துடன் இருப்பவர் ஹரி. அவரது ஒவ்வொரு படமும் கமர்ஷியல் ப்ளஸ் ஃபேமிலி எமோஷனோடு கலந்திருக்கும். இதனாலயே அவரது படங்களுக்கு ஃபேமிலி ஆடியன்ஸ் அதிகம் செல்வார்கள். பல ஹிட் படங்களை கொடுத்த அவர் கடந்த சில காலமாக தடுமாறிக்கொண்டிருக்கிறார். சூழல் இப்படி இருக்க அவரது இயக்கத்தில் உருவாகியிருக்கும் ரத்னம் படம் நாளை ரிலீஸாகிறது. இதனையொட்டி ஹரி செய்திருக்கும் செயல் ட்ரெண்டாகியுள்ளது.

இயக்குநர் சரணிடம் உதவி இயக்குநராக இருந்தவர் ஹரி. பிரபல நடிகர் விஜயகுமாரின் மருமகனும்கூட. பிரசாந்த், சிம்ரனை வைத்து தமிழ் படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானார். அந்தப் படம் வணிக ரீதியாக பெரிய வரவேற்பை பெறவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. முக்கியமாக அதில் இடம்பெற்றிருந்த சண்டை காட்சிகளும், காமெடி காட்சிகளும் கோலிவுட்டுக்கு பக்காவான கமர்ஷியல் இயக்குநர் கிடைத்துவிட்டார் என்பதை உணர்த்தின.

Director Hari requested the fans to come and watch Ratnam Movie

ஹரியின் சாமி: ஒரு இயக்குநருக்கு முதல் படத்தைவிடவும் இரண்டாவது படம் ரொம்பவே முக்கியம். அந்தவகையில் ஹரி தனது இரண்டாவது படமாக விக்ரமை வைத்து சாமி படத்தை இயக்கினார். அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அந்தப் படத்தை இன்று பார்த்தாலும் 90ஸ் கிட்ஸ் அனைவரும் தங்களை மறந்துவிடுவார்கள். பரபர ஆக்‌ஷன், எமோஷன், காதல் என பக்கா கமர்ஷியல் பேக்கேஜாக அந்தப் படம் அமைந்திருந்தது. முக்கியமாக படத்தின் வசனமும், விக்ரமின் நடிப்பும் பட்டையை கிளப்பின.

முன்னணி இயக்குநர்: சாமி படத்தின் மெகா ஹிட்டுக்கு பிறகு ஹரி கோலிவுட்டின் தவிர்க்க முடியாத கமர்ஷியல் இயக்குநராக மாறினார். சாமி படத்துக்கு பிறகு அவர் இயக்கிய கோவில் படம் ஃபீல் குட் படமாக இருந்தது. அதனைப் பார்த்த அனைவருமே அட சாமி படத்தை இயக்கிய ஹரியா இதற்கு இயக்குநர் என்று ஆச்சரியம்தான் பட்டனர். அதிலும் சிம்புவை வேறு ஃப்ளேவரில் காண்பித்து அதகளம் செய்திருந்தார் ஹரி. அதனைத் தொடர்ந்து அவர் இயக்கிய தாமிரபரணி, வேல் படங்கள் சூப்பர் ஹிட்டடித்தன.

சிங்கம் சூர்யா: ஹரிக்கு இன்னொரு சாமி என்றால் அது சிங்கம் படம். சூர்யாவின் 25ஆவது படமாக வெளியான சிங்கம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அதேபோல்தான் சிங்கம் 2 படமும். அந்தப் படத்தின் பரபர திரைக்கதை ரசிகரக்ளை அப்படியே கட்டிப்போட்டது. ஆனால் சிங்கம் 2தான் ஹரிக்கு கடைசி ஹிட் படமும்கூட. அதற்கு பிறகு அவர் இயக்கிய பூஜை, சிங்கம் 3, சாமி 2, யானை படங்கள் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. இதன் காரணமாக அவர் தன்னை மீண்டும் நிரூபிக்கும் வேட்கையில் இருக்கிறார்.

ரத்னம்: இப்படிப்பட்ட சூழலில் விஷாலை வைத்து அவர் ரத்னம் படத்தை இயக்கியிருக்கிறார். படம் நாளை திரையரங்குகளில் ரிலீஸாகிறது. விஷாலும், ஹரியும் இணையும் மூன்றாவது படம் இது. நிச்சயம் தாமிரபரணி போல் இந்தப் படம் ஹிட்டடிக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் ஹரி. இந்நிலையில் ரத்னம் படத்துக்காக ஹரி செய்த செயல் ஒன்று ட்ரெண்டாகியுள்ளது.

அதாவது புதுச்சேரிக்கு சென்றிருந்த அவர் ரசிகர்களை நேரில் சந்தித்து, நாளை ரத்னம் படம் ரிலீஸாகிறது தியேட்டரில் வந்து பாருங்கள் என்று பெர்சனலாக கேட்டுக்கொண்டார். அதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டுவருகிறது. இதனைப் பார்த்த நெட்டிசன்கள், விட்டா பத்திரிகையே வெச்சிடுவார் போல. நம்ம ஹரிக்கா இந்த நிலைமை என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X