'சாமி 2 கதை இது தான்'... விழா மேடையில் ரகசியத்தை உடைத்த இயக்குனர் ஹரி!

சாமி 2 படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குனர் ஹரி, படத்தின் கதையை வெளியிட்டார்.

Recommended Video

இதுதான் ஹரி சொன்ன சாமி 2 கதை-வீடியோ

சென்னை: சாமி 2 படத்தின் கதையை விழா மேடையிலேயே இயக்குனர் ஹரி தெரிவித்தார்.

விக்ரம் நடிப்பில் ஹரி இயக்கி கடந்த 2003ம் ஆண்டு வெளிவந்த சாமி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. 15 ஆண்டுகள் கழித்து விக்ரம் - ஹரி கூட்டணி மீண்டும் இணைந்து சாமி படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கியுள்ளனர்.

கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், பாபி சிம்ஹா, சூரி, பிரபு, டெல்லி கணேஷ், ரமேஷ் கண்ணா, சுமித்ரா, உமா ரியாஸ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

சாமி 2 இசை

சாமி 2 இசை

இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ரமேஷ் கண்ணா உள்ளிட்டவர்கள், தம்மை அறியாமல் படத்தின் கதையை சொல்ல முற்பட்டனர். அப்போது, இயக்குனர் ஹரியும், விக்ரமும் 'உஷ்... உஷ்... உஷ்...' என சத்தமிட்டு எச்சரிக்கை மணி அடித்தனர்.

விக்ரமுக்கு நன்றி

விக்ரமுக்கு நன்றி

பின்னர் விழாவில் பேசிய இயக்குனர் ஹரி 'அட போங்கப்பா... நானே கதைய சொல்லிடுறேன்' என படத்தின் மைய கதையை வெளிப்படுத்தினார். இதுதொடர்பாக அவர் பேசியதாவது,"என்னுடைய முதல் படமான 'தமிழ்' படத்தை பார்த்த விக்ரம், தனக்காக ஏதாவது கதை இருக்கிறதா எனக் கேட்டார். அப்போது ஒரு ஒன்லைன் சொன்னேன். அடுத்த நாளே கவிதாலயாவில் இருந்து போன் வந்தது. அந்த படம் தான் என்னை இந்த இடத்திற்கு கொண்டு வர காரணமாக இருந்தது. அதற்காக நான் விக்ரமுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.

முதல் பாகத்தின் க்ளைமாக்ஸ்

முதல் பாகத்தின் க்ளைமாக்ஸ்

முதல் பாகத்தில் சாமியின் வேட்டை தொடரும் என்று தான் முடித்திருந்தேன். ஆனால் இரண்டாம் பாகத்துக்கான கதை அமையவில்லை. அது இப்போது தான் சாத்தியமாகி இருக்கிறது.

கதை இதுதான்

கதை இதுதான்

இங்கு எனக்கு முன்பு பேசியவர்கள் எல்லாம் கொஞ்சம், கொஞ்சமாக படத்தின் கதையை சொல்லிவிட்டார். நானே முழு கதையையும் சொல்கிறேன். பெருமாள் பிச்சை குடும்பத்துக்கும், ஆறுசாமி குடும்பத்துக்கும் நடக்கும் மோதல் தான் சாமி 2 படத்தின் கதை. இதை விறுவிறுப்பான திரைக்கதை மூலம் காட்சிப்படுத்தியுள்ளோம்.

சுமோ இல்லாமல் நான் இல்லை

சுமோ இல்லாமல் நான் இல்லை

படத்தின் தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ் இந்த படத்திற்காக நிறைய செலவு செய்துள்ளார். 5 மாநிலங்கள், 6 விமான நிலையங்கள், 2 ஹெலிகாப்டர்கள், 15 சுமோ கார்கள் என பிரம்மாண்டமாக படம் பிடிக்க முழு ஒத்துழைப்பையும் தந்தார். ஏனென்றால் நம்மால் சுமோ இல்லாமல் படம் எடுக்க முடியாது. படம் கிளாசாகவும், மாசாகவும் வந்துள்ளது", என இயக்குனர் ஹரி கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X