அட யுவன் ஷங்கர் ராஜா வாழ்க்கை வரலாறு படமாகிறதா?.. இயக்குநர் சொன்ன ஆசையை பாருங்க

சென்னை: யுவன் சங்கர் ராஜா இப்போது GOAT படத்துக்கு இசையமைத்திருக்கிறார். படத்திலிருந்து விசில் போடு என்ற சிங்கிள் பாடல் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. பாடலுக்கு சுமாரான வரவேற்பே கிடைத்தது. பாடலை கேட்ட ரசிகர்கள் நம்ம யுவனுக்கு என்னதான் ஆச்சு என்று ஓபனாகவே கமெண்ட்ஸை பதிவிட ஆரம்பித்தனர். படத்தில் இடம்பெற்றிருக்கும் மற்ற பாடல்கள் கண்டிப்பாக நல்ல வரவேற்பை பெறும் என்று அவரது ரசிகர்கள் நம்பியிருக்கின்றனர். சூழல் இப்படி இருக்க யுவன் ஷங்கர் ராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாகப்போவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் யுவன் ஷங்கர் ராஜா. இளையராஜாவின் இளைய மகனான இவரது இசைக்கென்று பலர் ரசிகர்களாக இருக்கின்றனர். யுவனின் இசையுடைய பலமே மிகவும் எளிமையாக அனைவரிடமும் கனெக்ட் ஆவதுதான் என அவரது ரசிகர்கள் எப்போதும் கூறுவதுண்டு.

Director ilan Talks about Yuvan Shankar Raja Biopic Here are the details

அரவிந்தன்: யுவன் ஷங்கர் ராஜா திரையுலகில் அரவிந்தன் படம் மூலம் அறிமுகமானார். இதில் சரத்குமார் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்தப் படம் 1997ஆம் ஆண்டு வெளியானது. அரவிந்தன் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும்போது அவருக்கு வயது 15லிருந்து 17க்குள்தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் படத்தில் அவரது இசை பெரிதாக ஒன்றும் கவனிக்கப்படவில்லை.

கவனம் ஈர்த்த யுவன் ஷங்கர் ராஜா: முதல் படத்தில் அப்படி இப்படி கவனிக்கப்படாமல் போன யுவன் ஷங்கர் ராஜாவுக்கு பெரும் பெயரை பெற்றுத் தந்த படம் பூவெல்லாம் கேட்டுப்பார். இயக்குநர் வசந்த்தின் படங்களில் எப்போதும் பாடல்களுக்கு முக்கியத்துவம் இருக்கும். அதற்கு தகுந்ததுபோல் இசையமைத்தார் யுவன் ஷங்கர் ராஜா. இன்றுவரை பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தின் பாடல்கள் அனைத்தும் எவர் க்ரீனாக ஒலித்துக்கொண்டிருக்கின்றன.

உச்சம் தொட்ட யுவன்: பூவெல்லாம் கேட்டுப்பார் படத்துக்கு பிறகு யுவனின் மெட்டுக்கள் எல்லாமும் ஹிட்டாகின. இளையராஜா, ரஹ்மான், வித்யாசாகர், தேவா, கார்த்திக் ராஜா பலரும் தங்களது பெஸ்ட்டை கொடுத்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் உள்ளே வந்து தனது எளிமையான இசை மூலம் ரசிகர்களை கட்டிப்போட்டார் யுவன். குறிப்பாக செல்வராகவனுடன் இணைந்து 2000களின் தொடக்கத்தில் யுவன் கொடுத்தது எல்லாமே ஹிட். அதேபோல் ராம், விஷ்ணுவர்தன், வெங்கட் பிரபு, அமீர் என பல இயக்குநர்களுடன் கூட்டணி அமைத்து யுவன் ஷங்கர் ராஜா உச்சம் தொட்டார்.

GOAT: யுவன் ஷங்கர் ராஜா இப்போது GOAT படத்துக்கு இசையமைத்திருக்கிறார். விஜய்யுடன் பல வருடங்களுக்கு பிறகு இணைந்து பணியாற்றுகிறார் யுவன். இதனால் பாடல்கள் மீது உச்சகட்ட எதிர்பார்ப்பு இருந்தது. சில நாட்களுக்கு முன்பு விஜய்யின் குரலில் யுவன் இசையமைப்பில் விசில் போடு பாடல் வெளியாகி கலவையான விமர்சனத்தையே பெற்றது. அடுத்ததாக அவரது இசையமைப்பில் ஸ்டார் படம் வெளியாகவிருக்கிறது.

இளன் பேட்டி: இந்நிலையில் ஸ்டார் படத்தின் இயக்குநர் இளன் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த சமீபத்திய பேட்டியில், "யுவன் ஷங்கர் ராஜாவிடம் அவரது பயோபிக் தொடர்பான ஒன்லைன் ஒன்றை சொன்னேன். அவருக்கு அது பிடித்திருந்தது. எல்லாம் சரியாக நடந்தால் விரைவில் அந்த ஒன்லைன் தொடர்பான ஸ்க்ரிப்ட் வேலைகள் தொடங்கி நடக்கும்" என்று குறிப்பிட்டார். இதனால் யுவனின் வாழ்க்கை வரலாறு படமாவதற்கான சாத்தியக்கூறுகள் தென்பட ஆரம்பித்திருக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X