அடம்பிடித்த இயக்குனர்: அழுத உதயநிதி ஸ்டாலின்
சென்னை: இது கதிர்வேலன் காதல் படத்தின் காட்சி ஒன்றில் உதயநிதி ஸ்டாலின் அழுதபடி நடித்துள்ளாராம்.
தயாரிப்பாளரான உதயநிதி ஸ்டாலின் ஒரு கல் ஒரு கண்ணாடி படம் மூலம் ஹீரோ அவதாரம் எடுத்தார். படத்தில் சந்தானத்துடன் சேர்ந்து அலும்பல் பண்ணி நம்மை எல்லாம் சிரிக்க வைத்தார். இந்த படத்திற்காக சிறந்த புதுமுக ஹீரோவுக்கான சிமா விருது அவருக்கு கிடைத்தது.
தற்போது அவர் நயன்தாராவுடன் சேர்ந்து(சந்தானமும் உண்டு) இது கதிர்வேலன் காதல் படத்தில் நடித்து வருகிறார்.

அழுங்க சார்
படத்தில் ஒரு காட்சியில் நீங்கள் அழ வேண்டும் என்று இயக்குனர் எஸ்.ஆர். பிரபாகரன் உதயநிதியிடம் தெரிவித்தாராம்.

நான் அழுவதா?
நான் ஜாலி ஹீரோ என்னைப் போய் அழுமாறு கூறிகிறீர்களே. நான் அழுதால் யாரும் பார்க்க முடியாது என்று பல காரணங்களை கூறி எஸ்கேப்பாக பார்த்துள்ளார் உதயநிதி.

அதெல்லாம் முடியாது
ஹீரோ என்றால் அனைத்து வகை நடிப்பையும் வெளிப்படுத்த வேண்டும். அதனால் நீங்கள் நிச்சயம் அழுதாக வேண்டும் என்று இயக்குனர் கறாராகத் தெரிவித்துவிட்டாராம்.

வேறு வழி?
இயக்குனர் கட் அன்ட் ரைட்டாக கூறியதையடுத்து வேறு வழியில்லாமல் அந்த காட்சியில் அழுதபடி நடித்துள்ளாராம் உதயநிதி ஸ்டாலின்.

சந்தானத்துடன்
படத்தில் நயன்தாராவை விட சந்தானத்துடன் தான் அதிக காட்சிகளில் வருவேன் என்று உதயநிதி தெரிவித்துள்ளாராம்.


Click it and Unblock the Notifications











