மாதம்பட்டி ரங்கராஜின் இரண்டாவது மனைவி.. அவரது முதல் கணவர் பிரபல இயக்குநர்.. யார் தெரியுமா?

சென்னை: பிரபல சமையல் கலைஞரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் சில நாட்களுக்கு முன்பு ஜாய் கிரிஸில்டா என்பவரை இர்ண்டாவது திருமணம் செய்துகொண்டார். முதல் மனைவி ஸ்ருதியிடமிருந்து அவர் இன்னமும் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெறவில்லை என்றே கூறப்படுகிறது. இந்நிலையில் ஜாய் கிரிஸில்டாவின் முதல் கணவர் பற்றிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.

தமிழ்நாட்டில் தனது சமையல் மூலம் பிரபலமானவர் மாதம்பட்டி ரங்கராஜ். பிரபலங்கள் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு தொடர்ந்து சமைத்துவரும் அவர்; சரவணன் இயக்கிய மெஹந்தி சர்க்கஸ் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமானார். அந்தப் படம் வணிக ரீதியாக வெற்றி பெறாவிட்டாலும் விமர்சன ரீதியாக நல்ல ரெஸ்பான்ஸ பெற்று; ரங்கராஜுக்கும் பெயர் சொல்லும் படமாக அமைந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

குக் வித் கோமாளி நடுவர்: அந்தப் படத்துக்கு பிறகு வேறு எதிலும் நடிக்காமல் இருக்கும் அவர்; விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நடுவராக பங்கேற்றிருக்கிறார். ஏற்கனவே சமையல் கலை, நடிப்பு ஆகியவற்றால் ஃபேமஸ் ஆன ரங்கராஜுக்கு இந்த நிகழ்ச்சி மேற்கொண்டு பிரபல்யம் கிடைக்க பயன்பட்டது. இதற்கிடையே அவர் ஸ்ருதி என்ற வழக்கறிஞரை திருமணம் செய்து செட்டிலாகியிருந்தார்.

Director J J Fredrick is the ex-husband of Madhampatti Rangaraj s second wife
Photo Credit:

கிறிஸில்டாவுடன் பழக்கம்: அவர்களுக்கு இரண்டு மகன்களும் இருக்கிறார்கள். சூழல் இப்படி இருக்க பிரபல ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிறிஸில்டாவுடன் ரங்கராஜுக்கு பழக்கம் ஏற்பட்டது. கிறிஸில்டா ஜில்லா, மிருதன், வேலைக்காரன் உள்ளிட்ட படங்களுக்கு காஸ்ட்யூம் டிசைனராக பணியாற்றியிருக்கிறார். மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மாதம்பட்டி ரங்கராஜுக்கும் அவர்தான் ஆடை வடிவமைப்பாளர் என்று சொல்லப்படுகிறது.

இரண்டாவது திருமணம்: அப்போதிருந்து ஜாய்க்கும், ரங்கராஜுக்கும் ஏற்பட்ட பழக்கம் காலப்போக்கில் காதலாக மாறியது. ஆனால் இதுகுறித்து அவர்கள் இரண்டு பேருமே எதுவும் சொல்லவில்லை. சூழல் இப்படி இருக்க சில நாட்களுக்கு முன்பு அவர்கள் இரண்டு பேரும் திருமணம் செய்துகொண்டார்கள். அதுதொடர்பான புகைப்படத்தை கிறிஸில்டா தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருந்தார். மேலும், தான் ஆறு மாதம் கர்ப்பமாக இருக்கிறேன் எனவும் தெரிவித்தார்.

முதல் கணவர்: மாதம்பட்டி ரங்கராஜோ தனது முதல் மனைவி ஸ்ருதியை இன்னமும் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஜாய் கிறிஸில்டாவுக்கும் ஏற்கனவே திருமணம் நடந்து விவாகரத்து ஆகியிருப்பதாக கூறப்படுகிறது. அதாவது ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் என்ற படத்தை இயக்கிய ஜே.ஜே.ஃப்ரெட்ரிக் என்பவரை கடந்த 2018ஆம் ஆண்டு கிறிஸில்டா திருமணம் செய்து; கடந்த 2023ஆம் ஆண்டு விவாகரத்து செய்துவிட்டார் என்றும்; அவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார் என்றும் பேச்சுக்கள் எழ ஆரம்பித்திருக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X