மூத்த திரைப்பட இயக்குநர் ஏ. ஜெகநாதன் காலமானார்

எம்.ஜி.ஆர்.,சிவாஜி, ரஜினி, கமல் ஆகியோரது படங்களை இயக்கிய பெருமைக்குரிய ஏ. ஜெகநாதன் திருப்பூரில் உள்ள தமது மகளை பார்ப்பதற்காக சென்றிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்குப் பிறகு வீட்டுக்கு திரும்பிய ஜெகநாதனுக்கு தொடர்ந்து உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இன்று காலை திருப்பூரில் மகள் வீட்டிலேயே காலமானார்.
ஜெகன்னாதனின் பிரபல படங்களில் மூன்றுமுகம், தங்கமகன், காதல் பரிசு உள்ளிட்டவை சில. தமிழக அரசின் திரைப்பட விருதுக் குழு தலைவராகவும் இருந்தவர் ஜெகநாதன் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments


Click it and Unblock the Notifications