Don't Miss!
- News
"தமிழ்நாட்டின் நலன் உங்கள் கையில்" அதிமுக தொண்டர்களை அலர்ட் செய்யும் திருமாவளவன்!
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி இந்த நபர்கள் எதிரிகளை விட ஆபத்தானவர்களாம்... இவங்கள பக்கத்துலேயே சேர்க்காதீங்க...!
- Sports
ஹர்திக் பாண்டியா முன் காத்திருக்கும் சவால்..ஒரு தவறு செய்தால் மொத்தமாக குளோஸ்..பாடம் கற்பாரா கேப்டன்?
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
சாதித்த அருண்மொழி வர்மன்.. தம்பிக்கு பாராட்டு சொன்ன அண்ணன்!
சென்னை : பொன்னியின் செல்வன் படம் ரிலீசாகி 3வது நாளை எட்டியுள்ளது. வசூலிலும் மிரட்டி வருகிறது.
இந்தப் படத்தின் வரலாற்றுக் கேரக்டர்கள் மற்றும் அவர்களது கெட்டப்புகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.
சோழர்களின் வாழ்வியல் எப்படி இருந்திருக்கும் என்பதை இந்தப் படம் கண்முன்னே கொண்டு வந்துள்ளதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
பொன்னியின் செல்வன் படத்துக்கு கிளம்பிய எதிர்ப்பு.. ராஜமெளலி படங்களுக்கு இனி இங்கே ஆதரவு கிடைக்குமா?

பொன்னியின் செல்வன் படம்
நடிகர்கள் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயராம், பார்த்திபன், விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா லெக்ஷ்மி உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகி கடந்த 30ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் பொன்னியின் செல்வன். சோழர்கால வாழ்வியலை ரசிகர்களுக்கு கொடுக்கும் முயற்சியில் மணிரத்னம் வெற்றி பெற்றுள்ளார் என்பதை இந்தப் படத்தின் வெற்றி எடுத்துக் காட்டியுள்ளது.

மணிரத்னத்தின் மெனக்கெடல்
இந்தப் படத்தின் ஒவ்வொரு விஷயத்திற்காகவும் மெனக்கெட்டுள்ளார் இயக்குநர் மணிரத்னம். அவரது சிறப்பான திரைக்கதை, நல்ல திட்டமிடல், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கவைஞர்கள் தேர்வு உள்ளிட்டவையே இந்தப்படத்தை அவர் 150 நாட்களில் வெற்றிகரமாக முடிக்க காரணமாக அமைந்துள்ளது.

சிறப்பான கேரக்டர் தேர்வு
குறிப்பாக பொன்னியின் செல்வன் படத்தின் சிறப்பான கேரக்டர் தேர்வு நல்ல வெற்றியை பெற்றுள்ளார் மணிரத்னம். சோழர் மற்றும் அவர்களை சேர்ந்தவர்கள் இப்படித்தான் இருந்திருப்பார்களோ என்ற நினைப்பை ரசிகர்களிடையே விதைத்துள்ளார் மணிரத்னம். முன்னணி நடிகர்களை இந்தப் படத்திற்காக பயன்படுத்தியிருந்தாலும் அவர்களை சிறப்பாக பயன்படுத்திய வகையில் மணிரத்னத்திற்கு வெற்றிதான்.

ஸ்கோர் செய்த ஜெயம்ரவி
சர்வதேச அளவில் வெளியாகியுள்ள பொன்னியின் செல்வன் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. பிரபலங்களையும் கவர்ந்துள்ளது. குறிப்பாக பொன்னியின் செல்வனாக, அருண்மொழி வர்மனாக நடித்துள்ள ஜெயம்ரவி ஸ்கோர் செய்துள்ளார். அவரது உடல்மொழி, குரல் எப்படி ஒரு கம்பீரமான அரசனுக்கு பொருந்தும் என்ற கேள்வி முன்னதாக எழுந்தது.

மிரட்டிய ஜெயம் ரவி
ரசிகர்கள், விமர்சகர்களின் கேள்விகள், சந்தேகங்களை தற்போது வெற்றிக் கொண்டுள்ளார் ஜெயம் ரவி. அனைத்து தரப்பினரையும் தன்னுடைய கேரக்டர்மூலம் கவர்ந்துள்ளார். க்ளைமாக்சில் இவரது நடிப்பு மிரட்டியுள்ளது. இதனிடையே தன்னுடைய தம்பியின் நடிப்பு குறித்து மிகுந்த உற்சாகம் தெரிவித்துள்ளார் அவரது அண்ணன் மோகன் ராஜா.

ஜெயம் ராஜா பாராட்டு
தன்னுடைய தம்பியின் நடிப்பிற்கு கிடைத்துள்ள அதிகப்படியான வரவேற்பு மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளதாகவும் அனைவருக்கும் நன்றி என்றும் அவர் கூறியுள்ளார். முன்னதாக தன்னுடைய அண்ணன் இயக்கத்தில் அறிமுகமான ஜெயம் ரவி, விரைவில் அவரின் இயக்கத்தில் தனி ஒருவன் 2 படத்திலும் இணையவுள்ளது குறிப்பிடத்தக்கது.