விஜய் சார் போன் பண்ணி என்னை திட்டினாரு.. டைரக்டர் ஜெயம் ராஜா சோகம்!
சென்னை : தன்னுடைய முதல் படத்திலேயே சிறப்பான இயக்குநராக தன்னை நிரூத்தவர் இயக்குநர் ஜெயம் ராஜா.
முதல் படத்தில் தன்னுடைய தம்பியை வைத்து படம் இயக்கிய ஜெயம் ராஜா தற்போது சிரஞ்சீவியை வைத்து காட்பாதர் படத்தை வெற்றிப்படமாக கொடுத்துள்ளார்.
அடுத்ததாக ஜெயம் ரவியை வைத்து தனி ஒருவன் 2 படத்தை இவர் இயக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் ஜெயம் ராஜா
நடிகர் சிரஞ்சீவியை வைத்து சமீபத்தில் காட்பாதர் வெற்றிப் படத்தை கொடுத்துள்ளார் இயக்குநர் ஜெயம் ராஜா. இந்தப் படம் மலையாளத்தில் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்து வெளியான லூசிபர் படத்தின் ரீமேக்காக தெலுங்கில் உருவாகியுள்ளது. படத்தில் நயன்தாரா முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.

100 கோடி கிளப்பில் இணைந்த படம்
இந்தப் படம் சில தினங்களிலேயே 125 கோடி ரூபாய்க்கும் அதிகமாக கல்லா கட்டிய நிலையில், தற்போது படம் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. சமீபத்தில் வெளியான சிரஞ்சீவியின் ஆச்சார்யா படம் படுதோல்வியை அடைந்து மோசமான விமர்சனங்களை பெற்றது. தங்களது சம்பளங்களை சிரஞ்சீவி உள்ளிட்டோர் திருப்பி கொடுத்ததாக கூறப்பட்டது.

சிறப்பான படம்
இதனிடையே காட்பாதர் மூலமாக அவரது கேரியரை நிமிர்த்தியுள்ளார் ஜெயம் ராஜா. மலையாளத்திலிருந்து ரீமேக் செய்யப்பட்ட போதிலும் காட்பாதர் தெலுங்கு ரசிகர்களின் நாடித்துடிப்பை உணர்ந்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து தன்னுடைய தம்பியை வைத்து தனியொருவன் 2 படத்தை ஜெயம்ராஜா இயக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விஜய்யிடம் திட்டு வாங்கிய ஜெயம் ராஜா
இதனிடையே தற்போது ஜெயம் ராஜா தனது ஒரு பேட்டியில் கொரோனா காலத்தில் தான் படங்கள் எதையும் இயக்காமல் இருந்தபோது விஜய் சார் தன்னை அழைத்து என்னய்யா சொத்து நிறைய சேர்த்து விட்டாயா சூட்டிங் போகாம இருக்கிறாயே என்று உரிமையுடன் தன்னை கேட்டதாகவும் ஜெயம் ராஜா தெரிவித்துள்ளார்.

வீட்டினர் கமெண்ட்
மேலும் வீட்டிலேயே இருக்காமல் பொழைப்பை பார்க்க வெளியில் செல்லுமாறு தன்னுடைய வீட்டிலேயே தன்னை கூறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு படத்திற்கும் இடையில் சில நேரம் இத்தகைய இடைவெளி உருவாகி விடுவதாகவும் ஜெயம் ராஜா தெரிவித்துள்ளார். விரைவில் இவர் விஜய்யுடன் இணையவுள்ளதாகவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











