twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    லண்டன் அறையில் பீதியில் இருக்கிறார்.. என் மகளை என்னால் மீட்க முடியுமா? தேசிய விருது இயக்குனர் கவலை!

    By
    |

    திருவனந்தபுரம்: லண்டனில் ஹாஸ்டலில் பயத்துடன் இருக்கும் தனது மகளை மீட்க முடியுமா? என்று பிரபல இயக்குனர் கவலையாகக் கேட்டுள்ளனர்.

    பிரபல மலையாள இயக்குனர் ஜெயராஜ். முன்னணி நடிகர்களான மம்மூட்டி, சுரேஷ் கோபி, திலீப், பிருத்விராஜ் உட்பட பலர் நடிப்பில் படங்களை இயக்கி உள்ளார்.

    சிறந்த படம், சிறந்த இயக்கம், திரைக்கதை உள்ளிட்டவற்றுக்காக ஏழு முறை தேசிய விருதுகளை பெற்றுள்ள இவர், பல சர்வதேச விருதுகளையும் பெற்றுள்ளார்.

     ஒரு போன்தான் பண்ணினேன்...வந்துடுச்சு எல்லாம்... லேடி சூப்பர்ஸ்டாரை பாராட்டும் மேக்கப் கலைஞர்! ஒரு போன்தான் பண்ணினேன்...வந்துடுச்சு எல்லாம்... லேடி சூப்பர்ஸ்டாரை பாராட்டும் மேக்கப் கலைஞர்!

    சில நேரங்களில்

    சில நேரங்களில்

    இவரது தேசதானம், களியாட்டம், கருணம். சாந்தம், தெய்வனமதில், ஒட்டாள், வீரம், பயணகம் உள்ளிட்ட படங்கள் கவனிக்கப்பட்டவை. இவரது மனைவி பிரபல நடிகை சபிதா ஜெயராஜ். இவர்களுக்கு தனு என்ற மகளும் கேசவ் என்ற மகனும் உள்ளனர். ஜெயராஜ் தமிழில், வின்சென்ட் அசோகன், நவ்யா நாயர், வினீத் நடித்த 'சில நேரங்களில்' என்ற படத்தை இயக்கியுள்ளார்.

    அமெரிக்கா

    அமெரிக்கா

    இந்நிலையில் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பயங்கர அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் வூஹானின் ஆரம்பித்த இந்த வைரஸ் இப்போது உலகம் முழுவதும் பரவிவிட்டது. இத்தாலி, ஈரான் உள்ளிட்ட நாடுகள் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளன. இந்நிலையில் அமெரிக்காவும் கொரோனா கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஊரடங்கு உத்தரவு

    ஊரடங்கு உத்தரவு

    கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா முதலிடம் பிடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதுவரை இந்தியாவில் கொரோனாவுக்கு 19 பேர் உயிரிழந்துள்ளனர். 800-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    போரிஸ் ஜான்சன்

    போரிஸ் ஜான்சன்

    இந்த வைரஸ் இப்போது இங்கிலாந்திலும் வேகமாகப் பரவி வருகிறது. இங்கிலாந்து இளவரசர் சார்லஸைத் தொடர்ந்து, பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப் பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில், லண்டனில் இருக்கும் தனது மகளை மீட்க முடியுமா? என்று கேட்டுள்ளார், இயக்குனர் ஜெயராஜ். அவரது மகள் தனு, உயர்படிப்புக்காக அங்கு சென்றுள்ளார்.

    மீட்க முடியுமா?

    மீட்க முடியுமா?

    இதுபற்றி ஜெயராஜ் கூறும்போது, 'நான் நேற்று கூட தனுவிடம் போனில் பேசினேன். அவளுடன் ஹாஸ்டலில் இருந்தவர்கள் அனைவரும் சென்றுவிட்டனர். வெறும் நான்கு மாணவர்கள் மட்டுமே உடன் இருக்கிறார்கள். மொத்தமாக பயத்தில் இருக்கிறார். அவரை இப்போது மீட்க முடியுமா? லண்டன் ஸ்தம்பித்துள்ளது. 422 பேர் அங்கு இறந்துள்ளனர். பீதியை விட பயமாக இருக்கிறது. வீட்டிலேயே இருங்கள்' என்று தெரிவித்துள்ளார்.

    English summary
    A notable Malayalam director Jayaraj asks, whether he will be able to rescue his daughter who is doing higher studies in London.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X