Don't Miss!
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Finance மாலத்தீவுக்கு 1500 டன் லிட்டர் தண்ணீரை அனுப்பிய சீனா.. அதுவும் திபெத்தில் இருந்து ஸ்பெஷல் டெலிவரி..!!
- News பிரமாண பத்திரம் தாமதாக பதிவேற்றம்? தேனி தொகுதி வேட்பாளர் டிடிவி தினகரனின் வேட்பு மனு நிறுத்திவைப்பு
- Automobiles அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
கொல்லும் கொரோனா.. லெஜண்ட் சரவணன் அருள் படத்தை இயக்கி வரும் இயக்குநர் ஜெர்ரியின் அம்மா காலமானார்
சென்னை: கொரோனா பாதிப்பு காரணமாக பிரபல இயக்குநர் ஜெர்ரியின் அம்மா சூசையம்மாள் காலமானார். அவருக்கு வயது 78.
இந்தியா முழுவதும் ஏகப்பட்ட விளம்பரப் படங்களை இயக்கி பிரபலமான இரட்டை இயக்குநர்கள் ஜேடி மற்றும் ஜெர்ரி.
சூப்பர்ஸ்டாரோட ஜாய்ன் ஆகறதுக்காக ரொம்ப ஆர்வமா காத்துக்கிட்டு இருக்கேன்... பூஜா ஹெக்டே உற்சாகம்
லெஜண்ட் சரவணன் அருள் நடித்து வரும் பிரம்மாண்ட படத்தை இருவரும் இணைந்து இயக்கி வருகின்றனர்.
கொரோனா மரணங்கள்
இந்தியா முழுவதும் நாள்தோறும் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4 லட்சத்தில் இருந்து 2 லட்சமாக குறைந்தாலும், உயிரிழப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து 4 ஆயிரத்திற்கு மேல் உள்ளது ஒவ்வொரு இந்தியரையும் உலுக்கி வருகிறது. சாமானியர்கள், அரசியல்வாதிகள், சினிமாக்காரர்கள் என பாரபட்சம் இன்றி கொரோனா அனைத்து தரப்பினரையும் கொடூரமாக கொன்று குவித்து வருகிறது.
ஜேடி ஜெர்ரி
ஜேடி - ஜோசப் டி சாமி மற்றும் ஜெர்ரி - ஜெரால்டு ஆரோக்கியம் 1964ம் ஆண்டு பிறந்த இவர்கள் இருவரும் திரைக்கதை ஆசிரியர்களாக ஒரு குழுவாக பணியாற்றினர். தொடர்ந்து அஜித், விக்ரம் நடிப்பில் வெளியான உல்லாசம் படத்தை 1997ம் ஆண்டு இணைந்து இயக்கினர். பல ஆண்டுகளாக தொடர்ந்து இரட்டை இயக்குநர்களாக பயணித்து வருகின்றனர்.
லெஜண்ட் சரவணன் அருள்
சரவணா ஸ்டோர்ஸ் உள்ளிட்ட ஏகப்பட்ட பெரிய பெரிய கடைகளுக்கு பல ஆண்டுகளாக விளம்பரப் படங்களை இயக்கி வந்த இருவரும் இணைந்து தற்போது லெஜண்ட் சரவணன் அருள் நடித்து வரும் அறிமுக படத்தை சுமார் 200 கோடி செலவில் படமாக்கி வருகின்றனர். பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா நாயகியாக நடித்து வருகிறார்.
சூசையம்மாள் காலமானார்
இந்நிலையில், இயக்குநர் ஜெர்ரியின் அம்மா சூசையம்மாள், வயது 78, கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் உயிரிழந்து இருப்பது தமிழ் திரையுலகினரை மேலும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
பிரபலங்கள் இரங்கல்
இயக்குநர் ஜெர்ரியின் அம்மா சூசையம்மாள் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்த நிலையில், ஏகப்பட்ட திரை பிரபலங்களும் வணிகர்களும் அரசியல் தலைவர்களும் இயக்குநர் ஜெர்ரிக்கு ஆறுதல் சொல்லி வருகின்றனர். சூசையம்மாள் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்து வருகின்றனர்.