Don't Miss!
- News
"புடிங்க அவங்கள.." தமிழக இளைஞர்களை விரட்டியடித்த வடமாநிலத்தவர்! திருப்பூரில் உண்மையில் நடந்தது என்ன
- Sports
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 - இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்ன? பிட்ச் ரிப்போர்ட்
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Lifestyle
இந்த இந்திய மசாலா பொருட்கள் உங்க குடலுக்கு பல அதிசயங்களை செய்யுமாம்... அவை என்னென்ன தெரியுமா?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
புஷ்பா படத்தில் போலீஸாக மிரட்டியிருக்கும் ஃபகத் பாசில்.. பர்ஃபாமன்ஸ் எப்படி? பிரபல இயக்குநர் பளீச்!
சென்னை: புஷ்பா படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து ஃபகத் ஃபாசிலின் நடிப்பு எப்படி உள்ளது என்பது குறித்து பிரபல இயக்குநர் தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.
Recommended Video
நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் புஷ்பா. இந்தப் படத்தை சுகுமார் இயக்கியுள்ளார்.
தமிழ்
சினிமாவில்
பெரும்
தாக்கத்தை
ஏற்படுத்த
தயாரான
”ரைட்டர்”...
சமுத்திரகனி
வேற
லெவல்
இந்தப் படத்தில் அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இதேபோல் மலையாள நடிகரான ஃபகத் ஃபாசிலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

போலீஸ் அதிகாரியாக
செம்மரக் கடத்தலை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இரண்டு பாகங்களாக உருவாகிள்ள இப்படத்தின் முதல் பாகம் இன்று வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் புஷ்பராஜ் என்ற கதாப்பாத்திரத்தில் அல்லு அர்ஜூன் நடித்துள்ளார். போலீஸ் அதிகாரியாக பன்வார் சிங் ஷெகாவத் என்ற கதாப்பாத்திரத்தில் வில்லன் ரோலில் ஃபகத் பாசில் நடித்துள்ளார்.

அல்லு அர்ஜூனுக்கு குரல்
இந்தப் படத்தில் மலையாள இயக்குநரான ஜிஸ் ஜாய்யும் ஒரு பார்ட்டாக உள்ளார். அதாவது புஷ்பா மலையாள வெர்ஷனில் அல்லு அர்ஜூனுக்கு டப்பிங் பேசியுள்ளார் ஜிஸ் ஜாய். இந்நிலையில் இப்படம் குறித்து ஜிஸ் ஜாய் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.

ஃபகத் பாஸில் இருப்பது சிறப்பு
அதில் புஷ்பா திரைப்படம் நிச்சயமாக மெய்சிலிர்க்க வைக்கும் என தெரிவித்துள்ளார். பன்வார் சிங் ஷெகாவத் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள ஃபகத் பாசிலின் நடிப்பையும் வெகுவாக புகழ்ந்துள்ளார் இயக்குநர் ஜிஸ் ஜாய். மேலும் "புஷ்பா: தி ரைஸ்' படம் மலையாளியான தங்களுக்கு சிறப்பாக இருப்பதற்கு காரணம் அதில் ஃபஹத் பாசில் இருப்பது.

பெருமையாக உணருகிறேன்
'கும்பளங்கி நைட்ஸ்' படத்தில் ஷம்மி கதாபாத்திரத்தை அவர் காட்டிய விதம் நம் அனைவருக்கும் பிடிக்கும். 'புஷ்பா: தி ரைஸ்' படத்தில் ஃபஹத் ஃபாசிலின் கதாபாத்திரம், 'கும்பளங்கி நைட்ஸ்' படத்தில் வரும் கதாபாத்திரத்தைப் போன்றே இருக்கிறது. அவர் பனவார் சிங் ஷெகாவத் ஐபிஎஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஒரு மலையாளியாகவும், ஃபஹத்தின் நண்பராகவும், படத்தைப் பார்க்கும்போது நான் மிகவும் பெருமையாக உணர்ந்தேன்," என்றும் ஜிஸ் ஜாய் தெரிவித்துள்ளார்.

நடிப்பை கண்டு வியந்தேன்
மேலும் அல்லு அர்ஜுனின் புஷ்பா கதாபாத்திரத்தை மிகவும் சக்தி வாய்ந்ததாக மாற்றியிருப்பது வில்லன் கதாப்பாத்திரமான பன்வார் சிங் ஷெகாவத் ஐபிஎஸ் அதிகாரியாக நடித்துள்ள ஃபஹத் பாசில்தான் என்றும் ஜிஸ் ஜாய் தெரிவித்துள்ளார். மேலும் அல்லு அர்ஜுனின் நடிப்பையும் கண்டு தான் வியந்ததாகவும் ஜிஸ் ஜாய் தெரிவித்துள்ளார்.