விஜயிடம் கதை சொல்ல பயந்த இயக்குநர்... காதலர்களின் ஆல்டைம் ஃபேவரட் சச்சின்!
விஜய், ஜெனிலியா, வடிவேலு, ரகுவரன் ஆகியோர் நடிப்பில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான சச்சின் திரைப்படம் 20 ஆண்டுக்கு பிறகு ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது. கலைப்புலி தாணு தயாரித்த இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் தயாரித்திருந்தார். பெரிய அளவில் வசூலை ஈட்டாவிட்டாலும், இப்படத்திற்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உண்டு. இப்படம் ரீ ரிலீஸ் செய்வதாக அறிவிப்பு வெளியான நாளில் இருந்தே நாளுக்கு நாள் இப்படம் குறித்த பேச்சுக்கள் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது.
மறக்க முடியாத கதாப்பாத்திரம்: சச்சின் படத்தில் விஜய் எந்த அளவிற்கு அழகாக இருப்பாரோ அதே அளவிற்கு நடிகை ஜெனிலியாவின் குறும்பு தனங்களும், நடிகர் வடிவேலுவின் காமெடியும் அற்புதமாக அமைந்தது. இன்றளவும், விஜயின் ரசிகர்கள் விரும்பி ரசிக்கும் படத்தில் சச்சினும் இடம்பெற்றிருக்கிறது. தொலைக்காட்சியில் இப்படத்தில் இடம்பெறும் காட்சிகளை கண்டு ரசித்து சிலாகிக்கும் கூட்டமும் இருக்கின்றன.

விஜயிடம் கதை சொல்ல பயந்தேன்: சச்சின் படத்தின் இயக்குநர் ஜான் மகேந்திரன் சச்சின் உருவான விதத்தையும், விஜயுடன் பணியாற்றிய அனுபவத்தை தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்து மகிழ்ச்சியடைந்தார். அதில், சச்சின் படம் முழுக்க காமெடி கலந்த காதல் கதையாகவே எழுதியிருந்தேன். இப்படம் நான் விஜய்க்காக எழுதவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
அந்த சமயத்தில் திருப்பாச்சி, மதுர, கில்லி போன்ற படங்கள் கமர்ஷியலாக வெற்றி படமாக அமைந்தது. விஜய் காதல் படத்தில் நடிப்பாரா என்ற சந்தேகம் எனக்கு இருந்தது என ஜான் மகேந்திரன் தெரிவித்தார். பிறகு தயாரிப்பாளர் தாணு, விஜயிடம் கதை சொல்ல அனுப்பியிருந்தார். நானும் சென்றேன். அப்போது பலரும் என்னிடம் விஜயிடம் கதை சொல்லும்போது எந்தவித ரியாக்சனும் தரமாட்டார் என தெரிவித்ததால் நானும் பயந்தேன் என தெரிவித்தார்.

விழுந்து விழுந்து சிரித்த விஜய்: விஜயிடம் கதை சொன்ன பத்தாவது நிமிடத்திலேயே ரசித்து ரசித்து சிரித்தார். அய்யாசாமியாக வரும் வடிவேலு - விஜய் காம்போ இன்றளவும் பேசப்படுகிறது என இயக்குநர் ஜான் மகேந்திரன் தெரிவித்தார். மேலும், முதல் பட இயக்குநர் போன்று தன்னை நடத்தவில்லை, அவ்வளவு பாசமாக பார்த்துகொண்டார்.
சச்சின் பாட்டு சர்ச்சை: அஜித்தை கிண்டல் செய்வது போன்ற பாடல் காட்சிகளை அமைக்கவில்லை, எனக்கு சிறுவயதில் இருந்தே ஓஷோவை பற்றி படித்து தெரிந்து கொண்டேன் அவரது புத்தகங்களில் இருந்து சில விசயங்களை எடுத்து கொண்டேன். அதைத்தான் விஜயிடம் தெரிவித்தேன் என ஜான் மகேந்திரேன் தெரிவித்தார். குறிப்பாக விஜய் அஜித்தை கிண்டல் செய்வது போன்று குண்டு மாங்கா பாடலில் குண்டாக நடனம் அமைக்கவில்லை.

படம் முழுக்க ஸ்டைலிஸ் ஆக வரும் விஜயை கொஞ்சம் மாற்றம் செய்து நடனம் அமைத்தோம். இதுதான் உண்மையான காரணம். இருவரையும் வைத்து நடக்கும் சர்ச்சைகள் விஜய் - அஜித்திற்கும் தெரியாது. நான் இருவரிடமும் நெருங்கி பழகி வருகிறேன். இருவரும் ஒருபோதும் அப்படி பார்ப்பதில்லை என இயக்குநர் ஜான் மகேந்திரன் விளக்கம் அளித்தார்.


Click it and Unblock the Notifications











