twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தமிழ் சினிமாவின் பீஷ்மர்.. இயக்குநர் சிகரம்.. கேபி எனும் கே.பாலச்சந்தரின் பிறந்தநாள் இன்று!

    |

    சென்னை: தமிழ் சினிமாவின் பீஷ்மர், இயக்குநர் சிகரம் என அழைக்கப்படும் இயக்குநர் பாலச்சந்தரின் பிறந்தநாள் இன்று.

    தமிழில் ஏராளமான வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குநர் பாலச்சந்தர். கைலாசம் பாலச்சந்தரான இவர் கே பாலச்சந்தர் என அழைக்கப்பட்டார்.

    தஞ்சை மாவட்டம் நன்னிலத்தை அடுத்த நல்லமாங்குடியில் 1930ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் தேதி கைலாசம்- காமாட்சியம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்தார் பாலச்சந்தர். மேடை நாடகத்துறையில் இருந்து திரைத்துறைக்கு வந்தார் பாலச்சந்தர்.

    ரஜினியை அறிமுகப்படுத்தியவர்

    ரஜினியை அறிமுகப்படுத்தியவர்

    1965ம் ஆண்டு வெளியான நீர்க்குமிழி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார் பாலச்சந்தர். ரஜினிகாந்த்தை சினிமாவில் அறிமுகப்படுத்தியவர், கமல்ஹாசனை கதாநாயகனாக்கியவர் இந்த பாலச்சந்தர்தான்.

    பிடித்த நடிகை சரிதா

    பிடித்த நடிகை சரிதா

    இயக்குநர் பாலச்சந்தர் தமது படங்களில் அதிகமாகப் பயன்படுத்திய நடிகர்கள் ஜெமினி கணேசன், நாகேஷ், மேஜர் சுந்தரராஜன், கமலஹாசன் முத்துராமன் ஆகியோர். நாகேஷ் பாலச்சந்தருக்கு மிகவும் பிடித்த ஒரு நடிகராவார். நடிகைகளில் சௌகார் ஜானகி, ஜெயந்தி, சுஜாதா, சரிதா ஆகியோர் பாலச்சந்தருக்கு மிகவும் பிடித்தவர்கள் ஆவார்.

    ஏராளமான படங்கள்

    ஏராளமான படங்கள்

    குடும்ப உறவு முறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் படங்களை எடுத்தவர் பாலச்சந்தர். அவர் கைவண்ணத்தில் உருவான படங்களில் மேஜர் சந்திரகாந்த், பூவா தலையா, இருகோடுகள், பாமா விஜயம், எதிர் நீச்சல், சிந்து பைரவி, வறுமையின் நிறம் சிவப்பு, அவள் ஒரு தொடர்கதை, அபூர்வராகங்கள், உன்னால் முடியும் தம்பி உள்ளிட்ட ஏராளமான படங்களை இயக்கியுள்ளார் பாலச்சந்தர்.

    கையளவு மனசு சீரியல்

    கையளவு மனசு சீரியல்

    பாலச்சந்தரின் படங்கள் ஒவ்வொன்றும் காலங்கள் கடந்தாலும் அவரின் பெயரை சொல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. 1990களுக்குப் பிறகு கையளவு மனசு போன்ற தொலைக்காட்சித் தொடர்களை இயக்கினார். அந்த தொடர்களும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன.

    பத்மஸ்ரீ விருது

    பத்மஸ்ரீ விருது

    ஏக் தூஜே கே லியே, ஜரா சி ஜிந்தகி, ஏக் நயீ பஹேலி உள்ளிட்ட இந்தி படங்களையும் இயக்கியுள்ளார் பாலச்சந்தர். 1987 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதையும் 2010ஆம் ஆண்டு தாதா சாகெப் பால்கே விருதையும் வழங்கி மத்திய அரசு பாலச்சந்ரை கவுரப்படுத்தியது.

    இன்று பிறந்த நாள்

    இன்று பிறந்த நாள்

    வயது முதிர்வால் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த இயக்குநர் சிகரம் பாலசந்தர் 2014ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி காலாமானார். அவரது 88வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு திரைத்துறை பிரபலங்கள் டிவிட்டரில் தங்களின் வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

    பிறந்த நாள் வாழ்த்து

    அவரது பிறந்த நாளில் "இயக்குநர் சிகரம்" கே. பாலச்சந்தர் நினைவு கூறுகிறேன்.. இந்தியாவில் மிகவும் திறமையான இயக்குநர்களில் ஒருவர். அவர் தயாரித்த 'முரியாடி' படத்தின்போது அவருடன் உரையாடியது மற்றும் அந்த படத்தில் நான் முன்னணி வகித்ததை நினைத்து பார்க்கிறேன் என நடிகர் கணேஷ் வெங்கட்ராம் டிவிட்டியுள்ளார். கே பாலச்சந்தருடன் இணைந்து எடுத்த போட்டோக்களையும் அவர் வெளியிட்டுள்ளர்.

    மிஸ் யூ கேபி சார்

    இதேபோல் குஷ்பு பதிவிட்டுள்ள டிவிட்டில், ஐ மிஸ் யூ கேபி சார்.. அவருடன் பேசுவதை மிஸ் செய்கிறேன்.. இன்டர்வியூ மற்றும் விவாதங்களுக்கு பிறகு வரும் அவருடைய போன்கால்களை மிஸ் செய்கிறேன்.. அவருடன் காபி குடிப்பதை மிஸ் செய்கிறேன்.. அவருடன் நடப்பதை மிஸ் செய்கிறேன்.. அவரை கட்டியணைக்க மட்டுமே அவரது வீட்டிற்கு செல்வதை மிஸ் செய்கிறேன்... எனக்கு தெரியும் அவர் இருக்கிறார்.. எங்கேயோ.. பார்க்கிறார்.. வழிகாட்டுகிறார்.. இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

    English summary
    Director K Balachander 88th Birthday celebrates today.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X