Saritha: வருத்தமடைந்த சரிதா.. கே பாலசந்தர் அட்வைஸ்.. எந்த விஷயத்துல தெரியுமா?
சென்னை: தன்னுடைய முதல் படத்திலேயே கே பாலசந்தர் இயக்கத்தில் மஞ்சிக்கி ஜோகனா லேத்து என்ற படத்தில் நடித்திருந்தார் சரிதா.
80களில் தென்னிந்திய மொழிப்படங்களில் முன்னணி நடிகையாக வலம்வந்த இவர், கமல், ரஜினி, பாக்கியராஜ் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
4 முறை தமிழக அரசின் மாநில விருது பெற்றவர் சரிதா. தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

வருத்தமடைந்த சரிதாவை தேற்றிய கே பாலசந்தர்: நடிகை சரிதா 80களின் காலகட்டங்களில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளின் அனைத்துப் படங்களிலும் நடித்தவர். கமல்ஹாசன், ரஜினிகாந்த், பாக்கியராஜ் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். 4 முறை தமிழக அரசின் சிறந்த நடிகைக்காக மாநில விருதை பெற்றுள்ளார். தன்னுடைய முதல் படத்திலேயே கே பாலசந்தர் இயக்கத்தில் மஞ்சிக்கி ஜோகனா லேத்து என்ற படத்தில் நடித்த பெருமை இவருக்குண்டு.
80களில் மிகவும் பிசியான நடிகையாக இருந்த சரிதா, டப்பிங் கலைஞராகவும் பல முன்னணி நடிகைகளுக்கு குரல் கொடுத்துள்ளார். சரிகா, நக்மா, விஜயசாந்தி என பல நடிகைகளுக்கு சரிதா குரல் கொடுத்துள்ளார். அந்த காலகட்டங்களில் நடிப்பு மற்றும் டப்பிங் என மிகவும் பிசியாக காணப்பட்டார் சரிதா. இந்தக் காலம் அவரது கேரியர் பெஸ்ட்டாக அமைந்தது. அந்த காலகட்டத்தில் சக நடிகைகள் பலரும் சரிதாவை வெறுத்ததாக பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு தனது பேட்டியொன்றில் கூறியுள்ளார்.
சரிதாவின் ஆளுமையை வெளிக்கொண்டு வந்த இயக்குநர்களில் மிகவும் முக்கியமானவர் கே பாலசந்தர். இதனால் சரிதாவிற்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்தவண்ணம் இருந்தது. முன்னதாக சரிதா திரையுலகில் நுழைந்தபோது அதிகமான கவனத்தை பெறவில்லை. இதையடுத்து சில படங்களிலேயே அவர் திரைத்துறையில் இருந்து விலகிவிடுவார் என்றே கருதப்பட்டது. ஆனால் அவரது திறமை மட்டுமில்லாமல் அதிர்ஷ்டமும் அவர்பக்கம் இருந்தது.
சரிதா மீது வெறுப்புகொண்ட சில நாயகிகள் அவருடன் இணைந்து நடிக்க விருப்பம் காட்டாமல் இருந்தனர். இதனால் சரிதா சில காலம் வருத்தத்தில் இருந்ததாகவும் அப்போது கே பாலசந்தர், அவருக்கு தேவையான ஆலோசனைகளை கொடுத்ததாகவும் சரிதா தனது பேட்டியொன்றில் கூறியுள்ளார். வளர்ச்சிகள் ஏற்படும்போது இதுபோன்ற எதிர்ப்புகளை சந்திக்க வேண்டிவரும் என்றும் அவர் கூறியதாக சரிதா குறிப்பிட்டுள்ளார். பாலசந்தரை சரிதா குருவாகத்தான் பார்த்ததாகவும் பாலு கூறியுள்ளார்.
சில நடிகர்கள் கூட சரிதாவின் இந்த வளர்ச்சியை பார்த்து பயந்ததாகவும், தன்னுடன் சரிதா நடிக்கும் படத்தில் அவரது கேரக்டரை டம்மி செய்ய வலியுறுத்தியதாகவும் சரிதா கூறியுள்ளதை பாலு சுட்டிக் காட்டியுள்ளார். இத்தகைய வளர்ச்சியுடன் நடித்துவந்த சரிதாவின், திருமண வாழ்க்கை மற்றும் அதை தொடர்ந்த விவாகரத்து போன்ற காரணங்களால் அவர் தனது குழந்தைகளுடன் துபாயில சென்று செட்டில் ஆகிவிட்டார். தற்போது மீண்டும் தனது ரீஎன்ட்ரியை துவங்கியுள்ளார்.
சிவகார்த்திகேயனுடன் மாவீரன் படத்தில் நடித்துள்ளார் சரிதா. படத்தில் அவரது நடிப்பு அனைவரின் பாராட்டுக்களுக்கும் உள்ளாகியுள்ளது. கடந்த 1988ம் ஆண்டில் நடிகர் முகேஷை திருமணம் செய்துக் கொண்ட சரிதாவிற்கு ஷ்ரவன், தேஜாஸ் என இரு மகன்கள் உள்ளனர். இதனிடையே கடந்த 2011ம் ஆண்டில் முகேஷை சரிதா விவாகரத்து செய்தார். தற்போது தன்னுடைய மகன்களுடன் வசித்து வருகிறார். நடிகை விஜி சந்திரசேகர் சரிதாவின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











