இயக்குநர் சிகரம் பாலச்சந்தர் பிறந்தநாள்… கமல், சிவகுமார், மணிரத்னம் வாழ்த்து

By Shankar

சென்னை: தமிழ் சினிமாவின் இயக்குநர் சிகரம் என்று போற்றப்படும் பாலச்சந்தர் நேற்று தன்னுடைய 84 வது பிறந்தநாளை எளிமையாகக் கொண்டாடினார்.

இந்த விழாவில் நடிகர்கள் கமலஹாசன், சிவகுமார், விவேக், வேணு அர்விந்த், இயக்குநர்கள் மணிரத்னம், வசந்த், சரண், நடிகை விஜி சந்திரசேகர், சுகாசினி உள்ளிட்டோர் பங்கேற்று பாலசந்திரம் ஆசி பெற்றனர்.

நன்னிலம் நாயகன்

நன்னிலம் நாயகன்

இயக்குநர் சிகரம் பாலச்சந்தர் தஞ்சாவூர் மாவட்டம் நன்னிலத்தில் 1930 ஆம் ஆண்டு ஜூலை 9ல் பிறந்தார். சினிமாவில் மீது ஏற்பட்ட சென்னைக்கு வந்து சினிமா உலகிற்குள் நுழைந்தார்.

எம்.ஜி.ஆர் படத்திற்கு வசனம்

எம்.ஜி.ஆர் படத்திற்கு வசனம்

முதன்முதலாக எம்.ஜி.ஆர். நடித்த தெய்வத்தாய் என்ற படத்திற்கு வசனம் எழுத ஆரம்பித்தவர் தொடர்ந்து பல படங்களுக்கு வசனகர்த்தாவாக பணியாற்றினார்.

நீர்க்குமிழி

நீர்க்குமிழி

1965 ஆம் ஆண்டு நாகேஷ் நாயகனாக நடித்த நீர்குமிழி என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இவரது படங்களில், மனித உறவு முறைகளுக்கு இடையிலான சிக்கல்கள், சமூகப் பிரச்சினைகள் ஆகியவையே கருப்பொருளாய் விளங்கின.

மனித உறவுகளுக்கு

மனித உறவுகளுக்கு

எதிர்நீச்சல், பாமா விஜயம், இருகோடுகள், அரங்கேற்றம், சொல்லத்தான் நினைக்கிறேன், நான் அவன் இல்லை, அவள் ஒரு தொடர்கதை, மூன்று முடிச்சு, அபூர்வ ராகங்கள், அவர்கள், வறுமையின் நிறம் சிகப்பு, சிந்து பைரவி, உள்ளிட்டவை இவர் இயக்கிய சிறந்த படங்களில் சிலவாகும்.

சின்னத்திரையிலும்

சின்னத்திரையிலும்

இயக்குநராக மட்டுமல்லாது தயாரிப்பாளராகவும், நடிகராகவும் பணியாற்றிய பாலச்சந்தர் ரயில் சிநேகம்,கையளவு மனசு, தொலைக்காட்சி தொடர்கள் பலவற்றை எடுத்து இன்றைய சின்னத்திரை தொடர்களுக்கு வழிகாட்டியவர். பாலச்சந்தர் தனது 84 வது பிறந்த நாளை நேற்று தனது வீட்டில் எளிமையாக கொண்டாடினார். அவருக்கு திரையுலகினர் பலர் நேரில் சென்று வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

மாலை பரிவட்டம்

மாலை பரிவட்டம்

இயக்குநர் என்பதால் போர்டு, ஃபிலிம் என அசத்தலாக கேக் வடிவமைக்கப்பட்டிருந்தது. கமல் புஷ்பா கந்தசாமி ஆகியோர் முன்னிலையில் கேக் வெட்டினார் பாலச்சந்தர். மாலை பரிவட்டம்

பிறந்தநாள் நாயகருக்கு பரிவட்டம் கட்டி மாலை அணிவிக்கப்படுகிறது.

சிவகுமார் வாழ்த்து

சிவகுமார் வாழ்த்து

நடிகர் சிவகுமார் இந்த திரை உலக இளைஞருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்ட தருணம்.

பரிசளித்து ஆசிபெற்ற கமல்

பரிசளித்து ஆசிபெற்ற கமல்

நடிகர் கமல் இயக்குநர் சிகரத்திற்கு ஓவியம் பரிசளித்து ஆசி பெற்றார்.

விஜி சந்திரசேகர்

விஜி சந்திரசேகர்

பாலச்சந்தர் தில்லு முல்லு படத்தில் அறிமுகத்திய விஜி சந்திரசேகர் பூங்கொத்து கொடுத்து ஆசி பெறுகிறார்.

சுகாசினி மணிரத்னம்

சுகாசினி மணிரத்னம்

பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற இயக்குநர் வசந்த், இயக்குநர் மணிரத்னம், சுகாசினி.

எஸ்.வி சேகர், விவேக்

எஸ்.வி சேகர், விவேக்

மகிழ்ச்சியோடு வாழ்த்துக்களைத் தெரிவித்த எஸ்.வி.சேகர், விவேக், செல்முருகன்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X