இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் மனைவி ராஜம் மரணம்
Recommended Video

கே.பாலச்சந்தர் மனைவி ராஜம் மரணம் | ஐராவதம் மகாதேவன் சென்னையில் காலமானார்
சென்னை: இயக்குனர் கே.பாலச்சந்தர் மனைவி ராஜம் உடல் நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார்.
இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் மனைவி ராஜம் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் இன்று அதிகாலை 4.30 மணிக்கு சென்னையில் காலமானார். அவருக்கு வயது 84.

அவருக்கு புஷ்பா கந்தசாமி என்ற மகளும், பிரசன்னா என்ற மகனும் உள்ளனர். முன்னதாக கே. பாலசந்தர் கடந்த 2014ம் ஆண்டு உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார்.
பாலசந்தரின் கவிதாலயா ப்ரொடக்ஷன்ஸுடன் நெருங்கிய தொடர்புடைய ரஜினி, கமல், விவேக் உள்ளிட்ட பல பிரபலங்கள் ராஜமின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராஜமின் மறைவு செய்தி அறிந்த பிரபலங்கள் அவரின் குடும்பத்தாருக்கு தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.
Comments


Click it and Unblock the Notifications