“எடப்பாடி பழனிச்சாமிக்கும் குருவாயூரப்பன் அருள் கிடைச்சிருக்கு” சைடு கேப்பில் கிடா வெட்டிய பாக்யராஜ்

கிரிஷ்ணம் பட விழாவில் இயக்குநர் பாக்யராஜ் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து வேடிக்கையாகப் பேசினார்.

சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு குருவாயூரப்பன் அருள் கிடைத்து உள்ளது என்று 'கிரிஷ்ணம்' பட பாடல்கள் வெளியீட்டு விழாவில் கே.பாக்யராஜ் வேடிக்கையாகப் பேசியுள்ளார்.

தயாரிப்பாளர் வாழ்வில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ள படம் 'கிரிஷ்ணம்'. இப்படத்தை பிஎன்பி சினிமாஸ் தமிழ்,தெலுங்கு, மலையாளம் மொழிகளில் தயாரித்துள்ளது. தினேஷ்பாபு ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ளார்.

சிறப்பான ஒளிப்பதிவு:

சிறப்பான ஒளிப்பதிவு:

அப்போது விழாவில் பேசிய இயக்குநர் கே.பாக்யராஜ், "இங்கே திரையிடப்பட்ட காட்சிகளையும் பாடல் காட்சிகளையும் பார்க்கும் போது தினேஷ்பாபு இயக்குநர் என்பதை விட ஒளிப்பதிவாளராக கவனிக்க வைக்கும்படி சிறப்பாகச் செய்திருக்கிறார்.

அற்புதமான சம்பவம்:

அற்புதமான சம்பவம்:

இந்த 'கிரிஷ்ணம்' படம் உண்மைச் சம்பவம் என்று தயாரிப்பாளர் விரிவாகக் கூறினார். இதைக் கேள்விப்பட்டதுமே அந்தக் கதையின் நாயகன் அக்ஷய் கிருஷ்ணனைப் பார்க்க ஆவலாக இருந்தேன். நிஜமாகேவே இது அற்புதமான சம்பவம் தான்.

உண்மைக்கதை:

உண்மைக்கதை:

கற்பனைக் கதைக்கு ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். உண்மைக்கதை என்றால் மனசுக்கு நெருக்கமாக இருக்கும். பார்ப்பவர் தங்களையும் அதில் அடையாளப்படுத்திக் கொள்ள முடியும். அப்படி ஒரு படமாக குருவாயூரப்பன் அருள் பற்றிப் பேசும் படமாக 'கிரிஷ்ணம்' படமும் இருக்கும் என நம்புகிறேன்.

அருள்:

அருள்:

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் குருவாயூரப்பன் அருள் கிடைத்துள்ளது. யாருடைய வாழ்க்கை எப்போது எப்படி மாறும் என்றே தெரியாது. நாமும் ஒவ்வொரு தேர்தலின் போதும் கடவுளிடம் வேண்டிக்கொண்டே தான் இருக்கிறோம். நமக்கு அந்த அருள் கிடைக்கவில்லை" என வேடிக்கையாகப் பேசினார்.

ஜாக்குவார் தங்கம்:

ஜாக்குவார் தங்கம்:

இந்த விழாவில் தயாரிப்பாளர் சங்கத்தின் ( கில்டு) தலைவர் ஜாக்குவார் தங்கம் ,இயக்குநர் தினேஷ்பாபு ,நாயகன் அக்ஷய் கிருஷ்ணன், பி.ஆர்.ஓ.யூனியன் தலைவர் விஜயமுரளி, செயலாளர் பெரு. துளசி பழனிவேல், மற்றும் 'கிரிஷ்ணம் ' படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X