சினிமா வாய்ப்பு தேடும் இளைஞர்களுக்கு பாக்யராஜ் நடத்தும் பயிற்சி வகுப்பு

சென்னை: சினிமாவில் வாய்ப்பு தேடும் இளைஞர்கள் மற்றும் உதவி இயக்குநர்களின் திறமையை ஊக்குவிப்பதற்காக வடபழனியில் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி, இயக்குநர் பாக்யராஜ் ஒரு நாள் சிறப்பு பயிற்சி வகுப்பு எடுக்கப்போகிறார்.

ஒரு திரைப்படத்திற்கு கதை எழுதுவது என்பது மிக எளிதான விஷயம். ஆனால், அந்த கதைக்கு ஏற்றவாறு திரைக்கதை எழுதி காட்சிப் படுத்துவது என்பது மிக சிரமமான காரியமாகும். திரைக்கதை சரியாக இல்லாமல் போனால் அந்தப் படமே பப்படமாகிவிடும். அந்த வகையில் இயக்குநர் பாக்யராஜ் திரைக்கதை அமைப்பதில் இந்திய சினிமா உலகிலேய நம்பர் 1 ஆளாக இன்றைக்கும் உள்ளார். இவர் இந்தியில் இயக்கிய ஆக்ரி ராஸ்தா படமே அதற்கு சாட்சி.

Director K.Bhagyaraj going to take training class about Cinema

இயக்குனர் நடிகர் கே.பாக்யராஜ் தமிழில் தொடர்ந்து பத்து படங்களை வெற்றிப்படமாக கொடுத்தவர். அத்தனை படங்களும் திரைக்கதை அமைத்தலுக்கான பாடமாக இருப்பவை. இன்று வரை இயக்குனர் கே.பாக்யராஜ் போன்றதொரு திரைக்கதை ஆசிரியர் தமிழ் சினிமாவிற்கு ஏன் இந்திய சினிமாவிற்கே கிடைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

இயக்குனர் கே.பாக்யராஜ் தமிழ் ஸ்டுடியோவின் சில புதிய முன்னெடுப்புகளை நிதி திரட்டும் விதமாக திரைக்கதை பயிற்சி பட்டறை ஒன்றினை நடத்திக்கொடுக்க இருக்கிறார். தமிழ் ஸ்டுடியோ புதிதாக முன்னெடுக்கும் பல்வேறு துறை சார்ந்த முன்னெடுப்புகளுக்காக இந்த பயிற்சிப்பட்டறை நடத்தப்படுகிறது.

ஒரு இயக்கம் நடத்தும் பயிற்சிப்பட்டறை என்பது சமூக மாற்றத்திற்காக அவ்வியக்கம் மேற்கொள்ளும் களப்பணிகளுக்கான பணத் தேவையை பூர்த்தி செய்வது. தமிழ் ஸ்டுடியோ எப்போதும் மக்கள் இயக்கம் என்பதால், பங்கேற்பாளர்களிடம் அதிகம் பணம் பெறாமல், அதே நேரத்தில் தன்னுடைய செயல்பாடுகளுக்கு தேவையான நிதியை திரட்டவும் முயற்சி செய்கிறது.

இது எல்லாவற்றின் அடிநாதமாக சினிமா கல்வியை எல்லாருக்கும் எளிய விதத்தில் கொண்டு போய் சேர்ப்பது என்கிற சித்தாந்தமும் செயல்படுகிறது. எனவே நண்பர்கள் இதனை தங்களின் சமூக கடமையாக கருதி, திரளாக இந்த பயிற்சிப்பட்டறையில் பங்கேற்று பயிற்சி சிறப்படைய செய்ய வேண்டும்.

15.09.2019 ஞாயிறு காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை பியூர் சினிமா புத்தக அங்காடி, எண். 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, வாசன் ஐ.கேர் அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில் நடைபெற உள்ளது. திரைக்கதை எழுத கற்றுக்கொள்ள ஆர்வமுள்ளவர்கள் பங்குபெறலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X