தியேட்டர்கள் திறக்காமலேயே இருந்திருக்கலாமோ என்று எண்ணத் தோன்றுகிறது... கே பாக்யராஜ் பேச்சு!
சென்னை : கடைசி காதல் கதை என்ற படத்தின் டிரைலர் ரிலீஸ் நேற்றைய தினம் வெளியாகியுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் மற்றும் நடிகர் கே பாக்யராஜ் தனது மன வருத்தத்தை பதிவு செய்துள்ளார்.
சில படங்களைப் பார்க்கும்போது திரையரங்குகள் திறக்காமலேயே இருந்திருக்கலாமோ என்று என்ன தோன்றுவதாக அவர் கூறியுள்ளார்.

இயக்குனர் கே பாக்யராஜ்
நடிகர் மற்றும் இயக்குநர் கே பாக்யராஜ் பல சிறப்பான படங்களை இயக்கியுள்ளார். மேலும் தனது படங்களில் தானே நடித்து சிறந்த நடிகராகவும் தன்னை நிரூபித்துள்ளார். இந்நிலையில் தொடர்ந்து அவர் பல படங்களில் நடித்து வருகிறார்.

முருங்கைக்காய் சிப்ஸ் படம்
இன்றைய தினம் அவரது மகன் சாந்தனு நடிப்பில் வெளியாகியுள்ளது முருங்கைக்காய் சிப்ஸ் படம். இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஸ்ரீஜர் இயக்கியுள்ளார். இந்த படத்தில் கே பாக்யராஜ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கடைசி காதல் கதை படம்
தொடர்ந்து சினிமா தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கே பாக்யராஜ் கலந்து கொண்டு தன்னுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை சென்னையில் கடைசி காதல் கதை என்ற படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நிகழ்வில் அவர் கலந்து கொண்டார்.

திரையரங்குகள் குறித்து பேச்சு
அதில் பங்கேற்று பேசிய கே பாக்யராஜ் கொரோனாவை அடுத்து திரையரங்குகளை ஓபன் செய்ய தான் கேட்டுக் கொண்டதாகவும் ஆனால் தற்போது திரையரங்குகளில் ரிலீஸாகும் சில படங்களை பார்க்கும்போது திரையரங்குகள் திறக்காமலேயே இருந்திருக்கலாமோ என்று என்னென்ன தோன்றுவதாக அவர் கூறியுள்ளார்.

மன உளைச்சலை அளிக்கும் படங்கள்
நல்ல படங்களை வரவேற்கலாம் ஆனால் தவறான முன்னுதாரணங்களை கொண்ட படங்களை வரவேற்பது மன வருத்தம் அளிக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார். சில படங்கள் மன உளைச்சலை அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முப்படை தளபதி உயிரிழப்பு
இதனிடையே விபத்தில் இறந்த முப்படை தளபதி மற்றும் அவருடன் உயிரிழந்த 12 பேருக்காக தான் வருந்துவதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் சிபி சத்யராஜ் மற்றும் இயக்குனர் சீனு ராமசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Recommended Video

கடைசி காதல் கதை படம்
இந்த படத்தில் ஆகாஷ் பிரேம்குமார் புகழ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஆர்கே வித்யாதரன் இயக்கியுள்ளார். படத்தை எஸ் க்யூப் நிறுவனம் சார்பில் இ மோகன் தயாரித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











