For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சினிமா வாய்ப்பு தேடும் இளைர்களுக்கு பாக்யராஜ் நடத்தும் திரைக்கதை பயிற்சிப்பட்டறை

|

சென்னை: இயக்குநர் பாக்யராஜின் திரைக்கதை பயிற்சி எல்லாருக்கும் கிடைப்பது, அதுவும் பொதுவெளியில் நடப்பது என்பது சினிமாவில் ஒரு வரலாறு. அந்த வரலாற்றில் நீங்களும் பங்கு கொள்ளுங்கள். உடனே முன்பதிவு செய்துவிடுங்கள். தாமதமாக பதிவு செய்தால் நிச்சயம் கட்டணம் அதிகரிக்கும்.

நண்பர்களே இயக்குனர் பாக்யராஜ் தமிழ் சினிமாவின் திரைக்கதை ஆசிரியர்களில் மிக முக்கியமானவர், திரைக்கதை குறித்து போதிய புரிதல் இல்லாத காலத்திலேயே தன்னுடைய திரைக்கதை எழுதும் திறமையால் தொடர்ந்து பத்து படங்களை வெற்றிப்படங்களாக கொடுத்தவர்.

Director K.Bhagyaraj training class about Screenplay writing

பாக்யராஜ் ஒரு திரைக்கதை பயிற்சி வகுப்பை எடுக்கிறார் என்றால், ஆயிரக்கணக்கானவர்கள் அதில் பங்கேற்க வேண்டும். அவர், படங்கள் இயக்கிய காலகட்டத்தில் அவர் அளவிற்கு தமிழில் ஏன் இந்திய அளவில் திரைக்கதை வல்லமை பெற்றவர்கள் இல்லை.

ஒரு பல்கலைக்கழகமோ, திரைப்படக்கல்லூரியோ பல ஆயிரங்கள் கட்டணமாக வசூலித்தால் மட்டுமே பாக்யராஜ் போன்றவர்களின் பயிற்சியை அளிக்க முடியும் என்கிற நிலையை மாற்றி, மிக குறைந்த தொகையில் எல்லாருக்கும் சினிமாவை கொண்டு சேர்க்கும் நோக்கில் தமிழ் ஸ்டுடியோ தொடர்ந்து இப்படியான பயிற்சிகளை நடத்தி வருகிறது.

Director K.Bhagyaraj training class about Screenplay writing

சினிமாவின் மிக முக்கிய துறையாக திரைக்கதைதான் ஒரு படத்தின் தன்மையை, வணிக சினிமாவில் அதன் வெற்றி தோல்வியை தீர்மானிக்கிறது. வெகு ஜனத்திடமும் கொண்டு சேர்க்கிறது. திரைக்கதை பயிற்சி என்பது மிக இன்றியமையாத ஒன்று.

பாக்யராஜ் நடத்தும் பயிற்சி பட்டறையில் பங்கேற்க, செப்டெம்பர் 10 தேதி வரை மட்டுமே பயிற்சிக்கட்டணம் ரூ.2500/-. அதற்கு மேல் நிச்சயம் பயிற்சிக்கட்டணம் கூடும். இறுதி நேர நிர்வாக செலவுகள் அதிகரிப்பதே அதற்கு காரணம். எனவே இப்படியான பயிற்சிப்பட்டறையை மீண்டும் நடத்துவது அரிது. இயலாதது. வாய்ப்பு கிடைக்கும்போது அதனை தவறாமல் பற்றிக்கொள்ளுங்கள்.

மிருகா ட்ரைலரே அசத்தல் : ஸ்ரீகாந்த் ராய் லட்சுமி ஜோடியா புலியோடு மோதப்போறாங்க

பாக்யராஜின் திரைக்கதை பயிற்சி எல்லாருக்கும் கிடைப்பது, அதுவும் பொதுவெளியில் நடப்பது என்பது, சினிமாவில் ஒரு வரலாறு. அந்த வரலாற்றில் நீங்களும் பங்கு கொள்ளுங்கள். உடனே முன்பதிவு செய்துவிடுங்கள். தாமதமாக பதிவு செய்தால் நிச்சயம் கட்டணம் அதிகரிக்கும்.

இயக்குனர் K. பாக்யராஜ் நடத்தும் திரைக்கதை பயிற்சிப்பட்டறை

15.09.2019 ஞாயிறு காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை

கட்டணம்: 2500/- (மதிய உணவு உட்பட),

தலைப்பு: திரைக்கதை எழுதுவதை எப்படி?

இடம்: பியூர் சினிமா புத்தக அங்காடி, எண்.7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, வாசன் ஐ கேர் அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில்.

நண்பர்களே, இந்திய சினிமாவின் திரைக்கதை மேதமைகளில் மிக முக்கியமான ஆளுமை இயக்குனர் நடிகர் கே.பாக்யராஜ். தொடர்ந்து பத்து படங்களை வெற்றிப்படமாக கொடுத்தவர். அத்துனை படங்களும் திரைக்கதை அமைத்தலுக்கான பாடமாக இருப்பவை. இன்று வரை இயக்குனர் கே.பாக்யராஜ் போன்றதொரு திரைக்கதை ஆசிரியர் தமிழ் சினிமாவிற்கு கிடைக்கவில்லை.

இயக்குனர் கே.பாக்யராஜ் தமிழ் ஸ்டுடியோவின் சில புதிய முன்னெடுப்புகளுக்கு நிதி திரட்டும் விதமாக திரைக்கதை பயிற்சிப்பட்டறை ஒன்றினை நடத்திக் கொடுக்க முன்வந்துள்ளார். தமிழ் ஸ்டுடியோ புதிதாக முன்னெடுக்கும் பல்வேறு துறை சார்ந்த முன்னெடுப்புகளுக்காக இந்த பயிற்சிப்பட்டறை நடத்தப்படுகிறது.

ஒரு இயக்கம் நடத்தும் பயிற்சிப்பட்டறை என்பது சமூக மாற்றத்திற்காக அவ்வியக்கம் மேற்கொள்ளும் களப்பணிகளுக்கான பணத்தேவையை பூர்த்தி செய்வது. தமிழ் ஸ்டுடியோ எப்போதும் மக்கள் இயக்கம் என்பதால், பங்கேற்பாளர்களிடம் அதிகம் பணம் பெறாமல், அதே நேரத்தில் தன்னுடைய செயல்பாடுகளுக்கு தேவையான நிதியை திரட்டவும் முயற்சி செய்கிறது.

இது எல்லாவற்றின் அடிநாதமாக சினிமா கல்வியை எல்லாருக்கும் எளிய விதத்தில் கொண்டு போய் சேர்ப்பது என்கிற சித்தாந்தமும் செயல்படுகிறது. எனவே நண்பர்கள் இதனை தங்களின் சமூக கடமையாக கருதி, திரளாக இந்த பயிற்சிப்பட்டறையில் பங்கேற்று பயிற்சி சிறப்படைய செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

English summary
Director Bakyaraj's screenplay writing training is open to all and it is a history in cinema. Share yourself in that history and make a reservation right away. Late registration will definitely increase fees.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more