twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'என் மீதான கோபத்தை மறவேன்..' டைரக்டர் சேரனுடன் என்னதான் பிரச்னை? விஜய் பட இயக்குனர் விளக்கம்!

    By
    |

    சென்னை: இயக்குனர் சேரனுடன் தனக்கு என்ன பிரச்னை என்று விஜய் பட இயக்குனர் விளக்கம் அளித்துள்ளார்.

    Recommended Video

    Meera Mithun Marriage • Official Statement | Bigg Boss, Thaana Serntha Kootam

    தமிழில் விஜய், மீரா ஜாஸ்மின், அமிஷா படேல் நடித்த புதிய கீதை, நந்தா, தியா நடித்த கோடம்பாக்கம், சேரன் நடித்த ராமன் தேடிய சீதை உள்பட சில படங்களை இயக்கியவர் கே.பி.ஜெகன் என்கிற ஜெகநாதன்.

    மாயாண்டி குடும்பத்தார், மிளகா, கோரிப்பாளையம், பசங்க 2 உள்பட பல படங்களில் நடித்தும் இருக்கிறார்.

     நடிகர் விவேக் ஓபராய்-க்கு இன்றுடன் 44 வயசு... பிரபலங்கள் வாழ்த்து மழை ! நடிகர் விவேக் ஓபராய்-க்கு இன்றுடன் 44 வயசு... பிரபலங்கள் வாழ்த்து மழை !

    செருப்ப காணோம்

    செருப்ப காணோம்

    இவர் கடைசியாக, என் ஆளோட செருப்ப காணோம் என்ற படத்தை இயக்கி இருந்தார். தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இயக்கிய மிக மிக அவசரம் படத்துக்கு கதை வசனம் எழுதி இருந்தார். இவருக்கு இன்று பிறந்த நாள். இதையடுத்து பல திரை பிரபலங்கள் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இயக்குனர் சேரனும், அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து இருந்தார்.

    அன்பையும் கோபத்தையும்

    அன்பையும் கோபத்தையும்

    சேரன் தெரிவித்த வாழ்த்துச் செய்தியில், 'பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி.. நீ என் மீது கொண்ட அன்பையும் மறவேன். என் மீது கொண்ட கோபத்தையும் மறவேன். இரண்டும் அழகானது. ஆரம்ப நாட்களில் நீ சைக்கிள் ஓட்ட, நான் கதை சொல்லிக்கொண்டே வந்த நாட்கள் தான் மறக்க முடியாதவை. இனி இருவரும் தவறுகளை மறந்து மன்னித்து வாழ்வோம் என்று கூறியுள்ளார்.

    மறக்க முடியாத

    மறக்க முடியாத

    இதற்கு பதில் அளித்துள்ள இயக்குனர் ஜெகன், அண்ணா 15 ஆண்டுகள், உங்களுடன் பயணம், பணி பயிற்சி. மறக்க முடியாத நாட்கள். என் வளர்ச்சி, வெற்றி இரண்டிலும் உங்கள் மகிழ்ச்சி இருக்கும். நிச்சயம் அந்த இடத்தை அடைவேன். தங்கள் வாழ்த்து ஈடு இணையற்றது நேற்று முதல் பயிற்சிக்காக மீண்டும் சைக்கிள் பயணம்' என்று கூறியுள்ளார்.

    ராமன் தேடிய சீதை

    ராமன் தேடிய சீதை

    இந்நிலையில் சேரன் சொன்ன கோபம் பற்றி இயக்குனர் ஜெகனிடம் விசாரித்தோம். 'அது சினிமாவுல சகஜமான ஒன்றுதான். ராமன் தேடிய சீதை படம் பண்ணும்போது, அதுல ஹீரோவா நடிச்ச அவருக்கும் இயக்குனரான எனக்கும் சில காட்சிகள் தொடர்பா கருத்து வேறுபாடு வந்துச்சு. அவர் ஒன்னு சொன்னார், நான் ஒன்னு சொன்னேன். அந்த கோபத்துல, அந்தப் படத்துக்குப் பிறகு பல வருஷங்களா நாங்க பேசிக்கவே இல்லை.

    மீண்டும் இணைந்தோம்

    மீண்டும் இணைந்தோம்

    நான் ஸ்கிரீன்பிளே வசனம் எழுதிய 'மிக மிக அவசரம்' படம் பார்த்துட்டு சேரன் சார் பாராட்டினார். எப்ப இருந்தாலும் அவர்ட்ட தொழில் கற்றவன்தான் நான். பழசை மறந்து மீண்டும் இணைஞ்சோம். அதைத் தான் அவர் குறிப்பிட்டிருக்கார். கோபம் இருக்கும் இடத்துலதான் குணமும் இருக்கும்னு சொல்வாங்க. அது உண்மைதான்' என்கிறார் ஜெகன் நெகிழ்ச்சியாக.

    English summary
    Director Jagannathan explained the problem of himself and director Cheran, while they were in Raman thediya seethai shooting.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X