கஷ்டப்பட்டு கட்டிய வீட்டிற்கு பிரச்சனை...பரபரப்பை கிளப்பும் கே.எஸ்.ரவிக்குமாரின் வீடியோ
சென்னை : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராகவும் நடிகராகவும் வலம் வந்த கே.எஸ்.ரவிக்குமார், தற்போது 'கூகுள் குட்டப்பன்' என்ற படத்தை தயாரித்து வருகிறார்.
Recommended Video


இந்நிலையில், தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் கே.எஸ்.ரவிக்குமார் வெளியிட்ட வீடியோ ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த வீடியோவில், "எனக்கு சொந்தத்தில் ஒரு வீடு கட்ட வேண்டும் என்று கனவு இருந்தது.அப்படி நான் கட்டிய வீட்டிற்கு இன்று பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதை எதிர்த்துக் கேட்ட பின் பிரச்சனை மிகவும் பெரிதாகிவிட்டது. என்ன செய்வதென்று தெரியவில்லை. அதனால்தான் உங்களிடம் பேசுகிறேன். அடுத்த வீடியோவில் பேசுவோம்" என பேசியுள்ளார்.
ஆனால் என்ன பிரச்சனை, யாரால் பிரச்சனை என கே.எஸ்.ரவிக்குமார் குறிப்பிடவில்லை. முக்கிய அறிவிப்பு னெ்ற பெயரில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ தொடர்பாக ரசிகர்கள் பலரும் பல விதங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
தேர்தல் நேரத்தில் கே.எஸ்.ரவிக்குமார் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளதால், ஏதும் அரசியல் ரீதியான பிரச்சனையா என ரசிகர்கள் கேள்வியெழுப்பி உள்ளனர். சில ரசிகர்கள், இது புது படத்திற்கான ப்ரோமோஷன் வேலை போல உள்ளது என்றும் பதிவிட்டுள்ளனர்.
வைரலாகி வரும் இந்த வீடியோவை ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் பக்கங்களில் கே.எஸ்.ரவிக்குமார் பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











