twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிரபல ஹீரோக்களுக்கு சதவிகித முறையில் சம்பளம்.. திருப்பூர் சுப்ரமணியன் யோசனைக்கு இயக்குனர் ஆதரவு!

    By
    |

    சென்னை: சதவிகித முறையில் சம்பளம் முறையை பின்பற்றுவது குறித்து பிரபல வினியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியன் தெரிவித்ததற்கு இயக்குனரும் தயாரிப்பாளருமான தங்கசாமி ஆதரவு தெரிவித்துள்ளார்.

    Recommended Video

    Chennai Theatre நிலைமை | எலிகள் ராஜ்யமான Theatreகள் | Soorarai pottru | Ponmagal Vandhal

    லகுபரன், ஸ்வாதி நடித்த ராட்டினம், எட்டுத்திக்கும் மதயானை படங்களை இயக்கியவர் கே.எஸ்.தங்கசாமி. எட்டுத்திக்கும் மதயானை படத்தை தயாரித்து இயக்கி இருந்தார். இவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    director K.s.Thangasamy supports revenue-sharing basis salary

    இந்த இக்கட்டான நேரத்தில், பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியன் சினிமாவுக்கு ஒரு எளிய தீர்வை முன்வைத்தது வரவேற்புக்குரியது.

    சதவீத அடிப்படையில் சம்பளம், சிறுசிறு பங்குதாரர்கள், விற்பனையில் பங்கு, வெளிப்படையான டிக்கெட் விற்பனை மற்றும் வெளிப்படையான நிதி நிர்வாகம் என்பது பற்றி சொல்லி இருக்கிறார்.

    சிவப்பு நிற சேலையில் வித்யா பாலன்.. இப்படி காட்டினா எப்படி.. மாராப்பை விலக்கி ஹாட்டோ ஹாட்!சிவப்பு நிற சேலையில் வித்யா பாலன்.. இப்படி காட்டினா எப்படி.. மாராப்பை விலக்கி ஹாட்டோ ஹாட்!

    சதவீத அடிப்படையில் சம்பளம் படத்திற்கு படம் மாறுபடும். அதை ஒவ்வொரு பட ஆரம்பத்திலும் பேசி முடிவு செய்து கொள்ளலாம். சம்பளம் முடிவு செய்த பிறகு வெளிப்படையான நிதிநிலை என்பதால் குழப்பம் ஏற்பட வாய்ப்பில்லை.
    இதை அனைத்து நடிகர்களும் ஏற்பார்கள் என்று நம்புகிறேன்.

    அடுத்து சிறுசிறு பங்குதாரர்கள். நலிந்த நிலையில் இருக்கும் பல தயாரிப்பாளர்களுக்கு பேருதவியாக இது அமையும். வெளிப்படையான டிக்கெட் விற்பனை காலத்தின் கட்டாயம். ஒரு படத்தின் உண்மையான கிளைமாக்ஸ் என்பது தியேட்டர் டிக்கெட் விற்பனையில்தான் இருக்கிறது.

    அதே போல் அவர் சொல்லும் இன்னொரு விஷயம் வெளிப்படையான நிதி அறிக்கை, இந்த வெளிப்படைத்தன்மை படத்தில் முதலீடு செய்தவர்கள் ஆரம்பித்து அனைவருக்கும் சரியான தகவல்கள் கிடைக்க பெறுகிறது.

    இவை, இதற்கு முன்பே பல வருடங்களாக பலரால் பேசப்பட்டவைதான். இருந்தாலும் இது வெறும் செய்தியாக மட்டும் கடந்துபோகாமல் வெற்றிகரமாக நடத்தப்பட வேண்டும் என்பதுதான் சினிமாவை நேசிக்கும் அனைவரது எதிர்பார்ப்பும், ஆதங்கமும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    English summary
    Producer/director K.s.Thangasamy supports revenue-sharing basis salary
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X