Don't Miss!
- News பாஜகவிற்கு தோல்வி பயம் வந்துவிட்டது.. மோடி எடுத்த இறுதி அஸ்திரம்.. புட்டு புட்டு வச்சிட்டாரே.. போச்சு
- Sports முத்துப்பாண்டிய அவன் கோட்டைலயே அடிச்சிட்டாங்க.. சிஎஸ்கேவை பொளக்கும் ரசிகர்கள்.. வெறித்தன மீம்ஸ்!
- Finance புதிய EV கொள்கை.. சீனாவுக்கு மட்டும் செக்..!
- Lifestyle ஒருடைம் உருளைக்கிழங்கு குருமாவை இந்த ஸ்டைலில் செய்யுங்க.. அப்புறம் பாருங்க இப்படிதான் எப்பவும் செய்வீங்க..
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இயக்குநர் களஞ்சியம் சென்ற கார் விபத்து: மருத்துவமனையில் அனுமதி
ஹைதராபாத்: இயக்குநர் களஞ்சியம் சென்ற கார் விபத்துக்குள்ளானதில் அவர் படுகாயமடைந்துள்ளார். சிகிச்சைக்காக மருத்துவமனையில் களஞ்சியம் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரபு நடித்த 'மிட்டா மிராசு', முரளி-தேவயானி நடித்த 'பூமணி' உள்ளிட்ட பல படங்களை எடுத்தவர் இயக்குனர் களஞ்சியம். இவர் கடைசியாக 'கருங்காலி' என்ற படத்தை இயக்கி, நடித்திருக்கிறார்.
'ஊர்சுற்றிப்புராணம்' என்ற படத்தை இயக்கி வந்தார் களஞ்சியம். இப்படத்தில் நடித்த அஞ்சலி, களஞ்சியம் மீதும் தனது சித்தி மீதும் புகார் கூறி அப்படத்தில் இருந்து பாதியில் விலகினார். இதனால் இந்த படத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக களஞ்சியம் சென்னையில் இருந்து ஆந்திரா நோக்கி புறப்பட்டார். அவருடன் மேலும் 2 பேரும் அந்த காரில் பயணம் செய்தனர்.
அவரது கார் ஆந்திர மாநிலம் ஓங்கல் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென விபத்துக்குள்ளாகியது. இதில், காரில் பயணம் செய்த இயக்குனர் களஞ்சியம் உள்ளிட்ட 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.
விபத்து நடந்தது அறிந்ததும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் காரில் படுகாயங்களுடன் இருந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் அருண் என்பவர் இறந்துவிட்டதாகவும், களஞ்சியம் மற்றும் மேலும் ஒருவர் படுகாயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.