நைட்வரை இருந்து கையை பிடித்து சொன்னார்.. பிறகு பிரச்னை வந்தது..அஞ்சலி பற்றி சீக்ரெட் சொன்ன இயக்குநர்

சென்னை: கற்றது தமிழ், அங்காடி தெரு உள்ளிட்ட படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ஃபேமஸ் ஆனவர் அஞ்சலி. இடையில் சில காலம் நடிக்காமல் இருந்த அவர் இப்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். தமிழில் அவரது நடிப்பில் அடுத்ததாக ஏழு கடல் ஏழு மலை படம் வெளியாகவிருக்கிறது. இதற்கிடையே அவருக்கு இயக்குநர் களஞ்சியத்துக்கும் சில வருடங்களுக்கு முன்பு பிரச்னை வந்தது. அதுகுறித்து களஞ்சியம் இப்போது ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார்.

தமிழ் சினிமாவின் திறமை வாய்ந்த நடிகை என்ற பெயரை பெற்றவர் அஞ்சலி. தமிழில் அவர் நடித்து முதலில் வெளியான திரைப்படம் கற்றது தமிழ். ராம் இயக்கியிருந்த அந்தப் படத்தில் ஆனந்தி என்ற கதாபாத்திரத்தை ஏற்று மிகச்சிறப்பாக நடித்திருந்தார். நிஜமாதான் சொல்றியா என்று அவர் பேசும் டயலாக்கை இன்றுவரை பலரும் ரசித்துக்கொண்டிருக்கிறார்கள். அந்தப் படத்தில் அவரது திறமையை பார்த்த பலரும் அஞ்சலிக்கு பிரகாசமான எதிர்காலம் உண்டு என்று கணித்தன.

anjali kalanjiyam tamil cinema

பிஸி நடிகை: அவர்களின் கணிப்பை பொய்யாக்காத விதமாக அஞ்சலி தொடர்ந்து படங்களில் நடித்தார். அங்காடித் தெரு, எங்கேயும் எப்போதும் என அவர் நடித்த பல படங்கள் ஹிட்டடித்தன. சூழல் இப்படி இருக்க திடீரென சினிமாவிலிருந்து காணாமல் போனார். அதற்கு காரணம் அவர் நடிகர் ஒருவரை காதலிக்கிறார் என்றும்; இல்லை இல்லை அரசியல்வாதி ஒருவரின் கட்டுப்பாட்டில் இருக்கிறார் என்றும் பல வதந்திகள் தொடர்ந்து பரவிக்கொண்டேயிருந்தன,

மீண்டும் நடிப்பு: சூழல் இப்படி இருக்க மீண்டும் இப்போது நடிக்க ஆரம்பித்திருக்கிறார் அஞ்சலி. அந்தவகையில் கடைசியாக அவரது நடிப்பில் பகிஷ்கரனா வெப் சீரிஸ் வெளியானது. அடுத்ததாக தமிழில் ராம் இயக்கத்தில் ஏழு கடல் ஏழு மலை படமும், ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் படங்களும் வெளியாகவிருக்கின்றன. நிச்சயமாக இந்த இரண்டு படங்களும் அஞ்சலிக்கு மிகப்பெரிய கம்பேக்காக அமைய வேண்டும் என்று அவரது ரொம்பவே எதிர்பார்த்திருக்கிறார்கள்.

களஞ்சியத்தோடு பிரச்னை: இதற்கிடையே கற்றது தமிழ் படம்தான் அவர் நடித்து வெளியான முதல் படம் என்றாலும் அவரை திரைத்துறைக்கு அழைத்து வந்தது இயக்குநர் களஞ்சியம்தான். இருவரும் சேர்ந்து கருங்காலி என்ற படத்தில் நடிக்கவும் செய்திருக்கின்றன. ஆனால் அதற்கு முன்னதாகவே அஞ்சலியை வைத்து களஞ்சியம் தொடங்கிய சில படங்கள் பாதியிலேயே கைவிடப்பட்டன. நிலைமை இப்படி இருக்க களஞ்சியம் தனது சொத்தையெல்லாம் அபகரித்துவிட்டார் என்று அஞ்சலி குண்டை தூக்கிப்போட்டார். அதற்கு எதிராக களஞ்சியம் மான நஷ்ட வழக்கையும் தொடுத்தார். இந்தப் பிரச்னை சில வருடங்களுக்கு முன்பு ஹாட் டாபிக்காக இருந்தது.

களஞ்சியம் பேட்டி: இந்நிலையில் சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட களஞ்சியத்திடம் அஞ்சலியுடன் ஏன் பிரச்னை என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "அஞ்சலியை முதன்முதலில் ஒரு டெலிஃபிலிமில் நடிக்க வைத்தேன். அதுதான் அவரது கரியரில் முதல் படம். பிறகு அவரையும், தேவயானியின் மூத்த சகோதரர் மயூர் என்பவரையும் வைத்து ஒரு படம் ஆரம்பித்தேன். ஆனால் அந்த சமயத்தில் மயூருக்கு முடி கொட்ட ஆரம்பித்ததால் அவர் படத்திலிருந்து விலகிவிட்டார். பிறகு நானும் அஞ்சலியும் சேர்ந்து என் கனவே நீதானடி என்ற படத்தில் நடித்தோம். அந்தப் படமும் பாதியில் ட்ராப்பாகிவிட்டது. இதற்கிடையே கருங்காலி படத்தில் நடித்தோம்.

இதான் பிரச்னை: அடுத்து ஒரு இத்தாலி படத்தை தழுவி படத்தை இயக்கினேன். அதில் அஞ்சலிக்கு மூன்றாம் பிறையில் ஸ்ரீதேவி ஏற்றிருந்த கதாபாத்திரம் போல் கேரக்டர். அந்தப் படத்தின் ஷூட்டிங்கில் நைட் இரண்டு மணிவரை இருந்தார். ஒருமுறை தெலுங்கு படத்தின் ஷூட்டிங்கிற்காக இந்தப் படத்தின் ஷூட்டிங்கிலிருந்து நைட் கிளம்பினார். அப்போது எனது கையை பிடித்துக்கொண்டு கண்டிப்பாக இந்தப் படத்துக்கு எனக்கு தேசிய விருது கிடைக்கும் சார் என்று சொல்லிவிட்டு சென்றார்.

வரவே இல்லை: தெலுங்கு படத்தின் ஷூட்டிங்கிற்கு போனவர் என் பட ஷூட்டிங்கிற்கு வரவே இல்லை. அவரது குடும்பத்தை பொறுத்தவரை சில பஞ்சாயத்துக்களை தீர்த்து வைக்கும் இடத்தில் நான் இருந்தேன். அது அஞ்சலியுடன் இருந்தவர்களுக்கு பிடிக்கவில்லை. எனவே அவரிடமிருந்து என்னை வெட்டிவிட வேண்டுமென்று முடிவெடுத்து வேலைகளை செய்தார்கள். நான் சொத்தை அபகரித்துவிட்டேன் என்று அஞ்சலி சொன்ன அடுத்த நாளே சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்கை தொடுத்துவிட்டேன். அஞ்சலிக்கு பிடிவாரெண்ட்டெல்லாம் கொடுத்தார்கள். இப்போதும் சொல்கிறேன் எனக்கும் அவருக்கும் நேரடியாக எந்தப் பிரச்னையும் இல்லை" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X