Agilan public review : லோக்கலா.. தூக்கலா மிரட்டி இருக்கிறார் ஜெயம்ரவி.. மக்கள் கருத்து!
சென்னை : ஜெயம் ரவி நடித்த அகிலன் திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது.
இயக்குநர் கல்யாண் கிருஷ்ணன் உருவான இப்படத்தில் பிரியா பவானி சங்கர், தன்யா ரவிச்சந்திரன், ஹரிஷ் உத்தமன் ஆகியோர் நடித்துள்ளனர்.
அகிலன் படத்தை திரையரங்கில் பார்த்த ரசிகர்கள் படத்தை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

அகிலன் பட கதை
துறைமுகத்தில் கிரேன் ஆபரேட்டராக இருக்கும் ஜெயம் ரவி, துறைமுகத்தில் சட்டவிரோத செயல்களை செய்து வருகிறார். கடத்தலுக்கு தலைவனாக இருக்கும் கபூரை எப்படியாவது சந்திக்க வேண்டும் என்று நினைக்கிறார். ஜெயம்ரவி. இதற்காக, பல நாடுகளில் உளவு வேலை செய்யும் ஒருவனை கடத்தும் பொறுப்பு இவரிடம் கொடுக்கப்படுகிறது. இதே நேரத்தில் ஜெயம் ரவியை போலீசார் ஒரு பக்கம் கைது செய்ய முயற்சிக்கின்றனர். ஜெயம் ரவி கபூரை சந்தித்தாரா? இல்லை போலீஸில் சிக்கினாரா? என்பது தான் அகிலன் படத்தின் மீதி கதை.

ஜெயம் ரவியின் நடிப்பு சூப்பர்
ஜெயம் ரவி எப்போதுமே ஒருவித்தியாசமான கதையை தேர்வு செய்துதான் நடிப்பார். அந்த வகையில் அகிலன் படத்தில், ஹார்பரில் கடத்தல் தொழில் செய்பவன் லோக்கலாகவும் இருப்பான், தூக்கலாகவும் இருப்பான் என்பது போல சும்மா மிரட்டலாக இருக்கிறார். படத்தின் முதல் பாதி போனதே தெரியவில்லை. ஆனால், இரண்டாம் பாதி சும்மா அதிரடியாக இருக்கு என்றார் ஒரு ரசிகர்.

விறுவிறுப்பான முதல்பாதி
பூலோகம் படத்தில் பார்த்த ஜெயம் ரவியை இந்த படத்தில் மீண்டும் பார்த்தது போலவே இருக்கிறார். ஜெயம் ரவியின் ஆக்டிங், பாடி லாங்வேஜ் என அனைத்தும் சூப்பர். முதல்பாதி விறுவிறுப்பாக நகர்ந்தது. இருந்தாலும், முதல் பாதியில் சண்டை காட்சி இருந்து இருந்தால் சிறப்பாக இருந்து இருக்கும். மற்றபடி அனைத்தும் சூப்பர் என்றார் ஒரு ரசிகர்.

அட்டகாசமான கதை
த்ரில்லிங்கா இருக்கு, ஜெயம்ரவி நெகடிவ் கதாபாத்திரத்தில் சும்மா பங்கமாக நடிச்சு இருக்கிறார். சாம் சிஎஸ் பின்னணி சும்மா தாறுமாறாக இருக்கிறது. பூலோகம் படம் பாக்ஸிக் படம், அகிலன் துறைமுகத்தில் நடக்கும் கடத்தலை அட்டகாசமாக படமாக்கி உள்ளார் இயக்குநர். படத்தின் கதை, வசனம், ஒவ்வொரு கதாபாத்திரத்தின் அமைப்பு என ஒவ்வொன்றும் சும்மா அட்டகாசமாக உள்ளது என்றார்.


Click it and Unblock the Notifications











