ஹீரோயின் வாய்ப்புத் தருவதாகக் கூறி பாலியல் துஷ்பிரயோகம்.. பிரபல இயக்குனர் மீது இளம் நடிகை புகார்!

By

கொச்சி: வாய்ப்பு தருவதாகக் கூறி தன்னை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக பிரபல இயக்குனர் மீது இளம் ஹீரோயின் பரபரப்பு புகார் கூறியுள்ளார்.

பிரபல மலையாள இயக்குனர் கமல். ஏராளமான படங்களை இயக்கியுள்ளார்.

முன்னணி ஹீரோக்களான, மம்மூட்டி, மோகன்லால், திலீப், ஜெயராம், பிருத்விராஜ் உட்ட பலரை இயக்கியுள்ளார்.

ஷாலினி

ஷாலினி

இந்தியில் அஜய் தேவ்கன் நடித்துள்ள படத்தையும் இயக்கியுள்ளார். தமிழில், பிரஷாந்த், ஷாலினி நடித்த 'பிரியாத வரம் வேண்டும்' படத்தை இயக்கியவர் இவர்தான். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆமி என்ற மலையாள படத்தை இயக்கினார். இதில் மஞ்சுவாரியர், முரளி கோபி உட்பட பலர் நடித்துள்ளனர். இதையடுத்து பிரனய மீனுகளுடே கடல் என்ற படத்தை இயக்கினார்.

பாலியல் துஷ்பிரயோகம்

பாலியல் துஷ்பிரயோகம்

இதில் வினாயகன், திலிஸ் போத்தன் நடித்திருந்தனர். இந்நிலையில் தனக்கு ஹீரோயின் வாய்ப்பு தருவதாகக் கூறி இயக்குனர் கமல், பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக இளம் நடிகை ஒருவர், பரபரப்பு புகார் கூறியுள்ளார். கேரள சினிமாவில் இது பரபரப்பானது. அந்த இளம் நடிகை கூறியுள்ள புகாரில், ஆமி படத்தை இயக்கிக் கொண்டிருக்கும்போது, எனக்கு அடுத்த படத்தில் ஹீரோயின் வாய்ப்பு தருவதாக, இயக்குனர் கமல் சொன்னார்.

ஏமாற்றிவிட்டார்

ஏமாற்றிவிட்டார்

பிறகு அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்தார். ஆமி படப்பிடிப்பின் போதும் பாலியல் ரீதியாக என்னைத் துன்புறுத்தினார். அவர் மீது நான் வைத்திருந்த நம்பிக்கையை ஏமாற்றிவிட்டார். அவர், ஆட்டுத் தோல் போர்த்திய ஓநாய்' என்று காட்டமாக புகாரில் கூறியுள்ளார். இது தொடர்பாக வக்கீல் நோட்டீஸும் அவருக்கு அனுப்பியுள்ளார்.

பெயரை கெடுக்க

பெயரை கெடுக்க

இந்தச் செய்தி வேகமாகப் பரவியது. இதையடுத்து இதற்கு பதிலளித்துள்ள இயக்குனர் கமல், 'இந்த புகார் அடிப்படை ஆதாரமற்றது. என் பெயரை கெடுப்பதற்கான பிரசாரம் இது. கேரள மாநில கலாசேத்ரா அகாடமியின் சேர்மனாகவும் நான் இருக்கிறேன். அங்கு பணியாற்றிய முன்னாள் ஊழியர் ஒருவர், இதன் பின்னால் இருக்கிறார் என சந்தேகிக்கிறேன்.

காத்திருங்கள்

காத்திருங்கள்

எனக்கு வக்கீல் நோட்டீஸ் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் வந்தது. 'இது பொய்யான புகார் என்பதால், அவர்களின் அடுத்த நடவடிக்கை என்ன என்பதை பார்ப்போம், காத்திருங்கள்' என்றார் எனது வழக்கறிஞர். காத்திருந்தேன். அதற்கு பிறகு எதுவும் இல்லை என்பதால், அதை நான் கண்டுகொள்ளவில்லை. அவ்வளவுதான். இப்போது எனக்கு எந்த நோட்டீஸும் வரவில்லை' என்று தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X